9 தன்னைப் படைத்தவரோடு வழக்காடுகிறவனுக்கு கேடுதான் வரும்.
தரையில் கிடக்கிற மண் ஓடுகளில் ஒன்றைப் போல் அவன் இருக்கிறான்.
களிமண் குயவனைப் பார்த்து,
“நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்க முடியுமா?+
அல்லது ஒரு மண்பாத்திரம், “உங்களுக்குக் கையே இல்லை” என்று சொல்ல முடியுமா?