10 பின்பு எத்திரோ, “உங்களை எகிப்தின் பிடியிலிருந்தும் பார்வோனின் பிடியிலிருந்தும் விடுதலை செய்த யெகோவா புகழப்படட்டும்! 11 அவருடைய ஜனங்களை ஆணவத்தோடு அடக்கி ஒடுக்கியவர்களை அவர் அழித்துவிட்டார்! யெகோவாதான் மற்ற எல்லா தெய்வங்களையும்விட உயர்ந்தவர்+ என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்” என்றார்.
6 இருந்தாலும், கடவுள் காட்டுகிற அளவற்ற கருணை அந்தக் குணத்தை வென்றுவிடும். அதனால், “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்,+ தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்” என்று வேதவசனம் சொல்கிறது.+