20 ஞானமும் புத்தியும்* தேவைப்படுகிற எந்தவொரு விஷயத்தைப் பற்றி ராஜா கேட்டபோதும் அவர்கள் சிறப்பாகப் பதில் சொன்னார்கள். தன்னுடைய சாம்ராஜ்யத்திலிருந்த மந்திரவாதிகள், மாயவித்தைக்காரர்கள்+ எல்லாரையும்விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்ததை ராஜா தெரிந்துகொண்டான்.
48 பின்பு, ராஜா தானியேலுக்கு விலைமதிப்புள்ள பல அன்பளிப்புகளைக் கொடுத்தான். அதோடு, அவருக்கு உயர்ந்த அந்தஸ்தைத் தந்து, பாபிலோன் மாகாணத்துக்கே அதிபதியாகவும்+ பாபிலோனில் உள்ள ஞானிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாகவும் நியமித்தான்.