உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 17:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனால், யூதா மக்கள்கூட தங்களுடைய கடவுளான யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை;+ இஸ்ரவேலர்களுடைய பழக்கவழக்கங்களை இவர்களும் பின்பற்றினார்கள்.+ 20 இஸ்ரவேலர்களின் வம்சத்தில் வந்த எல்லாரையும் யெகோவா ஒதுக்கித்தள்ளினார்; அவர்களை அவமானப்படுத்தி கொள்ளைக்காரர்களின் கையில் விட்டுவிட்டார். கடைசியில், அவர்களைத் தன் முன்னாலிருந்தே நீக்கிவிட்டார்.

  • எசேக்கியேல் 23:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 நீ ஒரு விபச்சாரியைப் போலத் தேசங்களின் பின்னால் அலைந்தாய்.+ அவர்களுடைய அருவருப்பான சிலைகளை வணங்கி உன்னைத் தீட்டுப்படுத்தினாய்.+ அதனால்தான், உனக்கு இந்தக் கதி வரும். 31 உன்னுடைய அக்காவைப் போலவே நீ நடந்துகொண்டாய்.+ அதனால், அவளுடைய கிண்ணத்தை உன் கையில் கொடுப்பேன்.’+

  • ஆமோஸ் 2:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவா சொல்வது இதுதான்:

      ‘யூதா திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.

      யூதா ஜனங்கள் யெகோவாவின் சட்டத்தை* ஒதுக்கித்தள்ளினார்கள்.

      அவருடைய விதிமுறைகளை அசட்டை செய்தார்கள்.+

      முன்னோர்கள் நம்பிய அதே பொய்களை நம்பி வழிவிலகிப் போனார்கள்.+

       5 அதனால், நான் யூதாவுக்குத் தீ வைக்கப்போகிறேன்.

      எருசலேமின் கோட்டைகள் சாம்பலாகும்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்