24 ஆனால் அந்த நாட்களில், அந்த உபத்திரவத்துக்குப் பின்பு, சூரியன் இருண்டுவிடும், சந்திரன் ஒளி கொடுக்காது,+25 வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும், வான மண்டலங்கள் அசைக்கப்படும்.
25 அதோடு, சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்.+ கடல் சீற்றத்தாலும் கடல் கொந்தளிப்பாலும் என்ன செய்வதென்று தெரியாமல் பூமியிலுள்ள தேசத்தாரெல்லாம் தத்தளிப்பார்கள்.
12 அவர் ஆறாவது முத்திரையை உடைப்பதைப் பார்த்தேன்; அப்போது, பயங்கர நிலநடுக்கம் உண்டானது; ரோமத்தாலான* கறுப்பு துக்கத் துணியைப் போல் சூரியன் கறுப்பானது; சந்திரன் முழுவதும் இரத்தம்போல் சிவப்பானது.+