-
யோசுவா 6:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஆனால், அழிக்க வேண்டிய எந்தப் பொருளின் பக்கத்திலும் போகாதீர்கள்.+ அப்படிப் போனால், அழிக்க வேண்டிய பொருள்கள் எதையாவது ஆசைப்பட்டு எடுத்துக்கொள்வீர்கள்.+ இதனால், இஸ்ரவேலர்களின் முகாமுக்கே அழிவைக் கொண்டுவந்துவிடுவீர்கள். அது அடியோடு அழிந்துபோகும்படி செய்துவிடுவீர்கள்.+ 19 எல்லா வெள்ளியும் தங்கமும் செம்புப் பொருள்களும் இரும்புச் சாமான்களும் யெகோவாவுக்குச் சொந்தமானவை, பரிசுத்தமானவை.+ அவை யெகோவாவின் பொக்கிஷத்தில் சேர வேண்டும்”+ என்று சொன்னார்.
-
-
ஏசாயா 23:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 யெகோவா 70 வருஷங்களின் முடிவிலே தீருவிடம் தன்னுடைய கவனத்தைத் திருப்புவார். அவள் மறுபடியும் தன்னுடைய தொழிலை ஆரம்பிப்பாள். உலக ராஜ்யங்கள் எல்லாவற்றோடும் விபச்சாரம் செய்வாள். 18 ஆனால், அவளுக்குக் கிடைக்கும் லாபமும் கூலியும் சேமித்து வைக்கப்படாது. அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக ஆகும்; யெகோவாவின் ஜனங்களுக்குப் போய்ச் சேரும். அதனால் அவர்கள் வயிறார சாப்பிடுவார்கள், சிறந்த துணிமணிகளை உடுத்திக்கொள்வார்கள்.+
-