-
2 நாளாகமம் 36:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 வாளுக்குத் தப்பியவர்களை பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனான்.+ பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஆட்சி ஆரம்பமாகும்வரை+ அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அவர்கள் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.+ 21 இப்படி, எரேமியா மூலம் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.+ அந்தத் தேசம் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்ட ஓய்வுநாட்களுக்கு ஈடாக,+ 70 வருஷங்களுக்கு அது பாழாய்க் கிடந்தது.+
-
-
எரேமியா 25:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 இந்தத் தேசம் சின்னாபின்னமாகும். அதற்குக் கோரமான முடிவு வரும். இவர்கள் எல்லாரும் 70 வருஷங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்வார்கள்.”’+
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+
-