22 இஸ்ரவேலின் 300 வீரர்களும் ஊதுகொம்புகளை ஊதிக்கொண்டே இருந்தபோது, முகாமிலிருந்த எதிரிகள் எல்லாரும் ஒருவரை ஒருவர் வாளால் வெட்டிக் கொல்லும்படி+ யெகோவா செய்தார். அந்தப் படைவீரர்கள் சேரெராவுக்கு நேராக பெத்-சித்தா வரையிலும், தாபத்துக்குப் பக்கத்திலுள்ள ஆபேல்-மெகொல்லாவின்+ எல்லை வரையிலும் ஓடினார்கள்.