-
2 நாளாகமம் 14:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 ஆசாவும் அவருடைய ஆட்களும் எத்தியோப்பியர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள். கேரார்வரை+ அவர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டே போனார்கள். யெகோவாவும் அவருடைய படைவீரர்களும் எத்தியோப்பியர்களை அடியோடு அழித்துப்போட்டார்கள், ஒருவர்கூட உயிர்தப்பவில்லை. அதன் பின்பு, யூதா வீரர்கள் ஏராளமான பொருள்களை அவர்களிடமிருந்து கைப்பற்றி வந்தார்கள்.
-
-
2 நாளாகமம் 20:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 செத்துக்கிடந்தவர்களிடம் இருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு போவதற்காக யோசபாத்தும் மக்களும் வந்தார்கள். அங்கே ஏகப்பட்ட பொருள்களும் துணிமணிகளும் நல்ல நல்ல சாமான்களும் இருப்பதைப் பார்த்தார்கள். இதற்குமேல் சுமக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட பொருள்களை எடுத்துக்கொண்டார்கள்.+ பொருள்கள் எக்கச்சக்கமாக இருந்ததால் அதையெல்லாம் அள்ளிக்கொண்டு போகவே மூன்று நாட்கள் ஆனது.
-
-
சகரியா 2:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 கடவுள் தன்னுடைய பெயருக்கு மகிமை சேர்த்த பின்பு, உங்களைச் சூறையாடிய தேசங்களிடம்+ என்னை அனுப்பினார். பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.+ 9 இப்போது நான் அந்தத் தேசங்களுக்கு எதிராக என் கையை ஓங்குவேன். அவர்களுடைய அடிமைகளே அவர்களைச் சூறையாடுவார்கள்.’+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவாதான் என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்.
-