-
மல்கியா 3:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 “இதோ, நான் என்னுடைய தூதுவரை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன்னால் போய் என் வழியைத் தயார்படுத்துவார்.+ நீங்கள் ஆர்வத்தோடு தேடுகிற உண்மையான எஜமான் திடீரென்று தன்னுடைய ஆலயத்துக்கு வருவார்.+ நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்கிற ஒப்பந்தத்தின் தூதுவரும் வருவார். அவர் நிச்சயமாக வருவார்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
-
-
லூக்கா 1:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அதோடு, கடவுளுக்கு முன்னே போய், எலியாவுக்கு இருந்த அதே ஆர்வத்துடிப்போடும் வல்லமையோடும் செயல்படுவான்;+ தகப்பன்களின் உள்ளத்தைப் பிள்ளைகளுடைய உள்ளத்தைப் போல மாற்றுவான்;*+ கீழ்ப்படியாதவர்களைத் திருத்தி நீதிமான்களைப் போல் ஞானமாக நடப்பதற்கு உதவி செய்வான்; இப்படி, யெகோவாவுக்கு* ஏற்ற ஒரு ஜனத்தைத் தயார்படுத்துவான்”+ என்று சொன்னார்.
-