-
மத்தேயு 3:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அந்தக் காலத்தில், யோவான்+ ஸ்நானகர்* யூதேயாவின் வனாந்தரத்துக்கு வந்து, 2 “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது”+ என்று பிரசங்கித்துக்கொண்டிருந்தார்.+ 3 இவரைப் பற்றித்தான் ஏசாயா தீர்க்கதரிசி+ இப்படிச் சொல்லியிருந்தார்: “‘யெகோவாவுக்கு* வழியைத் தயார்படுத்துங்கள், அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்’ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வதைக் கேளுங்கள்!”+
-
-
மாற்கு 1:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில், “(இதோ! என்னுடைய தூதுவரை உனக்கு முன்னால் அனுப்புகிறேன், அவர் உன் பாதையைத் தயார்படுத்துவார்.)+ 3 ‘யெகோவாவுக்கு* வழியைத் தயார்படுத்துங்கள், அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்!” என்று எழுதப்பட்டிருக்கிறது. 4 அதன்படியே யோவான் ஸ்நானகர்,* பாவ மன்னிப்புக்காக மனம் திருந்த வேண்டுமென்றும், அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றும் வனாந்தரத்தில் பிரசங்கித்துவந்தார்.+
-