-
மத்தேயு 6:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அதனால், நீங்கள் தானதர்மம்* செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போலத் தம்பட்டம் அடிக்காதீர்கள்.* மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஜெபக்கூடங்களிலும் தெருக்களிலும் அவர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.
-
-
மத்தேயு 23:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 வெளிவேஷக்காரர்களான+ வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப்+ போல் இருக்கிறீர்கள்; அவை வெளியே அழகாகத் தெரிகின்றன, உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளாலும் எல்லா விதமான அசுத்தங்களாலும் நிறைந்திருக்கின்றன. 28 அதுபோலவே, நீங்கள் மனுஷர்களுக்கு முன்னால் நீதிமான்களாகத் தெரிகிறீர்கள், ஆனால் உங்களுக்குள்ளே போலித்தனமும் அக்கிரமமும்தான் நிறைந்திருக்கின்றன.+
-
-
லூக்கா 18:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 தங்களை நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களைத் துளியும் மதிக்காத சிலருக்காக இந்த உவமையையும் அவர் சொன்னார்:
-