-
அப்போஸ்தலர் 9:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 சவுலோ, எஜமானின் சீஷர்களை இன்னமும் மிரட்டிக்கொண்டும் கொல்லத் துடித்துக்கொண்டும் இருந்தான்.+ அதனால் அவன் தலைமைக் குருவிடம் போய், 2 இந்த மார்க்கத்தை*+ சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் தமஸ்கு நகரத்திலிருந்து எருசலேமுக்குக் கட்டியிழுத்து வருவதற்காக, அந்த நகரத்திலிருந்த ஜெபக்கூடங்களுக்குக் கொடுக்க அனுமதிக் கடிதங்களைக் கேட்டு வாங்கினான்.
-
-
அப்போஸ்தலர் 26:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 நாசரேத்தூர் இயேசுவின் பெயருக்கு விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டும் என்பதில் நானும்கூட உறுதியாக இருந்தேன். 10 அதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். முதன்மை குருமார்களிடமிருந்து அதிகாரம் பெற்று,+ பரிசுத்தவான்கள் பலரைச் சிறையில் அடைத்தேன்.+ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கச் சம்மதம் தெரிவித்தேன். 11 எல்லா ஜெபக்கூடங்களுக்கும் போய் அவர்களைப் பல தடவை தண்டித்தேன், விசுவாசத்தை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தினேன். அவர்கள்மேல் பயங்கர வெறியோடு இருந்ததால் வேறு நகரங்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்.
-
-
1 தீமோத்தேயு 1:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 என்னைப் பலப்படுத்திய நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவுக்கு நன்றியோடு இருக்கிறேன். ஏனென்றால், அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு என்னை நியமித்தார்.+ 13 முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்.+ ஆனாலும், அறியாமையின் காரணமாக நான் விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதால் அவர் என்மேல் இரக்கம் காட்டினார்.
-