உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 8:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 சவுலோ, ஒவ்வொரு வீடாகப் புகுந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய்ச் சிறையில் அடைத்து, சபையைக் கொடூரமாகத் துன்புறுத்திவந்தான்.+

  • அப்போஸ்தலர் 22:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இந்த மார்க்கத்தை* சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டியிழுத்துக் கொண்டுபோய்ச் சிறையில் அடைத்தேன், அவர்களைத் துன்புறுத்தினேன், அவர்கள் கொல்லப்படும்படி செய்தேன்.+

  • அப்போஸ்தலர் 26:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். முதன்மை குருமார்களிடமிருந்து அதிகாரம் பெற்று,+ பரிசுத்தவான்கள் பலரைச் சிறையில் அடைத்தேன்.+ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கச் சம்மதம் தெரிவித்தேன். 11 எல்லா ஜெபக்கூடங்களுக்கும் போய் அவர்களைப் பல தடவை தண்டித்தேன், விசுவாசத்தை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தினேன். அவர்கள்மேல் பயங்கர வெறியோடு இருந்ததால் வேறு நகரங்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்.

  • கலாத்தியர் 1:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 நான் யூத மதத்தில் இருந்தபோது எப்படி நடந்துகொண்டேன் என்று நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள்.+ கடவுளுடைய சபையைப் பயங்கரமாகத் துன்புறுத்திக்கொண்டும் பாழாக்கிக்கொண்டும் இருந்தேன்.+

  • 1 தீமோத்தேயு 1:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 என்னைப் பலப்படுத்திய நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவுக்கு நன்றியோடு இருக்கிறேன். ஏனென்றால், அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு என்னை நியமித்தார்.+ 13 முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்.+ ஆனாலும், அறியாமையின் காரணமாக நான் விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதால் அவர் என்மேல் இரக்கம் காட்டினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்