6 ஆனால், என்மேல் விசுவாசம் வைக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை* அவனுடைய கழுத்தில் கட்டி, ஆழமான கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது.+
15 நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் சகோதரனுக்கு மனசங்கடத்தை உண்டாக்கினால், நீங்கள் அன்பாக நடந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.+ உங்கள் உணவின் காரணமாக அவனை அழித்துவிடாதீர்கள்; அவனுக்காகவும்தானே கிறிஸ்து இறந்தார்.+