27 அப்போது, பர்னபா+ அவருடைய உதவிக்கு வந்து, அவரை அப்போஸ்தலர்களிடம் கூட்டிக்கொண்டு போனார்; வழியில் சவுலுக்கு எஜமான் காட்சி கொடுத்ததையும்,+ அவரோடு பேசியதையும், சவுல் தமஸ்குவில் இருந்தபோது இயேசுவின் பெயரில் தைரியமாகப் பிரசங்கித்ததையும்+ பற்றி விவரமாக அவர்களிடம் சொன்னார்.