29 அப்போது, சீஷர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை+ யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்குச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.+ 30 அதன்படியே, நிவாரணப் பொருள்களை பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்து அங்கிருந்த மூப்பர்களுக்கு அனுப்பினார்கள்.+