9 கடைசியாக, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கின் கையையும் காலையும் கட்டி, அந்த விறகுகள்மேல் படுக்க வைத்தார்.+
12 அப்போது அவர், “உன் மகனைக் கொன்றுவிடாதே, அவனுக்கு ஒன்றும் செய்துவிடாதே. நீ கடவுள்பயம் உள்ளவன் என்று இப்போது நான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால், எனக்காக உன்னுடைய ஒரே மகனைக் கொடுப்பதற்குக்கூட நீ தயங்கவில்லை”+ என்று சொன்னார்.