-
எபிரெயர் 11:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 விசுவாசத்தால்தான் ஆபிரகாம், தான் சோதிக்கப்பட்டபோது+ ஈசாக்கைப் பலி கொடுக்கும் அளவுக்குப் போனார். வாக்குறுதிகளைச் சந்தோஷத்தோடு பெற்றிருந்த அவர், தன்னுடைய ஒரே மகனைப் பலி கொடுக்க முன்வந்தார்.+ 18 “ஈசாக்கின் வழியாக உருவாகும் சந்ததிதான் உன்னுடைய சந்ததி என்று அழைக்கப்படும்” என்று அவருக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் அப்படிச் செய்ய முன்வந்தார்.+ 19 ஏனென்றால், இறந்தவனை மறுபடியும் கடவுளால் உயிரோடு எழுப்ப முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், மரணத்திடமிருந்து அவனைப் பெற்றுக்கொண்டார்; எதிர்காலத்தில் நடக்கவிருந்த சம்பவத்துக்கு இது ஓர் அடையாளமாக இருந்தது.+
-