13அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு* எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.+ ஏனென்றால், கடவுளுடைய அனுமதி இல்லாமல் எந்த அதிகாரமும் இல்லை.+ தனக்குக் கீழ்ப்பட்ட ஸ்தானங்களில் இருக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்திருக்கிறார்.+
5 அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல், இந்த உலகத்தில் இருக்கிற உங்கள் எஜமான்களுக்குப் பயத்தோடும் மரியாதையோடும் உண்மை மனதோடும் கீழ்ப்படிந்து நடங்கள்.+