உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 3/8 பக். 4
  • அந்த புனித இலை பிரபலமாகியது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அந்த புனித இலை பிரபலமாகியது
  • விழித்தெழு!—1987
  • இதே தகவல்
  • புகையிலையும் தணிக்கையும்
    விழித்தெழு!—1990
  • புகையிலை ஒழுக்கமா?
    விழித்தெழு!—1992
  • உண்மைகளை எதிர்படுதல்: இன்று புகையிலை
    விழித்தெழு!—1987
  • லட்சக்கணக்கான உயிர்கள் புகையோடு போகின்றன
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 3/8 பக். 4

அந்த புனித இலை பிரபலமாகியது

மூன்று நூற்றாண்டுகளாக, புகையிலை ஐரோப்பியர்களுக்கு மருந்தாகவே இருந்தது. ஊத்தை நாற்றம் முதல் மேல் தோல் தடிப்பு நோய் வரையாக பிணிகளுக்கு மருத்துவர்கள் இதன் இலைகளை மருந்து சீட்டில் எழுதிக் கொடுத்தார்கள். சமுதாயக் கொண்டாட்டங்களில் அமெரிக்க மேலை இந்திய தீவினர் பக்குவப்படுத்தப்படாத சுருட்டை புகைப்பதை கொலம்பஸும் அவனுடைய மாலுமிக் குழுவும் பார்த்தபோதுதானே எல்லாம் ஆரம்பமாயின. 1942-ல் இவர்களே புகையிலையைப் பார்த்த முதல் ஐரோப்பியர்கள் ஆவர்.

கொலம்பஸுக்கு வெகு காலத்துக்கு முன்பே பெரும்பாலும் அமெரிக்காவின் எல்லா பண்டைய மக்களும் புகையிலையை புனிதமானதாகக் கருதினார்கள். பண்டையக் காலத்தில், புகைப்பிடித்தல் என்பது பில்லி சூனிய மருத்துவர்கள் மற்றும் பூசாரிகளின் உரிமையாகவும் வேலையாகவும் இருந்தது. பயபக்தியோடு செய்யப்படும் சமுதாய சடங்குகளின்போது தெய்வீக காட்சிகளை தோன்றச் செய்வதற்கு அதன் மயக்கமூட்டும் பாதிப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். “புகையிலை அவர்களுடைய கடவுட்களோடு நெருங்கிய வகையில் சம்பந்தப்பட்டதாக இருந்தது. அவர்களுடைய மத சடங்குகளில் மட்டுமல்ல, ஆனால் அவர்கள் செய்த பண்டுவம் அல்லது மருத்துவத்தில் இது சம்பந்தப்பட்டிருந்தது. இவை அனைத்துமே ஏதோ ஒரு வழியில் அவர்களுடைய மதத்தோடு தொடர்புடையவையாக இருந்தன” என்பதாக சரித்திராசிரியர் W.F. ஆக்ஸ்டன் குறிப்பிடுகிறார், ஆனால் ஸ்பானிய மற்றும் போர்ச்சுகலின் ஆய்வுப் பயணிகளின் கண்ணில் முதலில் பட்டது புகையிலையின் மருத்துவ உபயோகமாக இருந்தபோதிலும், விரைவிலேயே சிற்றின்பத்துக்காக அது பயன்படுத்தப்படலாயிற்று.

“நான் ஒரு சிகரெட்டை புகைத்து சர் வால்டர் ராலியை சபிப்பேன்,” என்று பீட்டல்ஸ் இசைக்குழுவின் ஜான் லெனனும் பால் மக்கார்டனியும் பாடினார்கள். “ஆங்கில நாட்டு மக்கள் மத்தியில், சிற்றின்பத்துக்காக புகைப்பதை மிகச் சிறப்பாக பிரச்சாரம் செய்தவர்” என்பதாக அழைக்கப்பட்ட சர் வால்டர், ஐயர்லாந்திலிருந்த தனக்கு சொந்தமான நிலத்தில் புகையிலையை பயிர் செய்தார். நாகரீகமான சமுதாயத்தினர் இந்த பழக்கத்தை விரும்பும்படிச் செய்ய அவர் தன்னாலானதை எல்லாம் செய்தார். புகையிலை தொழிலதிபர்களையும் “சிகரெட் நூற்றாண்டின்” விளம்பரதாரர்களையுமே அவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்.

சர் வால்டரின் மந்திரம் அல்ல, ஆனால் ஐரோப்பாவில் நடைபெற்ற முப்பது ஆண்டுகால யுத்தமே 17-ம் நூற்றாண்டை “புகைக்குழாயின் பொற்கால”மாக ஆக்கியது என்பதாக ஜெரோம் E. ப்ரூக்ஸ் சொல்லுகிறார். “முக்கியமாக போரின் மூலமாகவே புகைப் பிடிக்கும் பழக்கம் கண்டம் முழுவதிலுமாகவும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கும் பரவியது என்று அவர் ஆணித்தரமாகச் சொல்லுகிறார். இதை ஒத்த ஒரு சம்பவமே சிகரெட் யுகத்தை ஆரம்பிக்க இருந்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்