வெந்நீரில் குளிப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்
“வெந்நீரில் குளிப்பது, குடும்பத்தினரின் துணிமணிகளை துவைப்பது, அல்லது பாத்திரங்களைக் கழுவுவது உங்களுடைய ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும், வீட்டில் அனுதினமும் பயன்படுத்தப்படும் தண்ணீர்வழியாய்ப் புற்றுநோய் உண்டாக்கும் ஏராளமான வேதியியல் பொருட்கள் வெளியேறுகிறது என்று ஓர் ஆய்வு காண்பிக்கிறது. டிரைக்ளோரோயெத்திலின் (TCE), நிலத்தடித் தண்ணீரின் ஒரு பொதுவான நச்சுப்பொருள், மற்றும் குளோரோஃபார்ம் என்ற மயக்க வஸ்து தண்ணீரில் கலக்கப்படும் பாசிகத்தின் (குளோரின்) ஒரு உப வஸ்து. இது நீர் பருகுவதிலிருப்பதைவிட நீராவியை சுவாசிப்பதில் 50 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பொதுநல பட்டப் பள்ளியைச் சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் ஜூலியன் ஆன்டல்மன் கூறுகிறார். உதாரணமாக வெந்நீர் குளியலின்போது, நீர் தன்னில் கலந்த 50 சதவிகிதம் குளோரோஃபார்மும் 80 சதவிகித டிரைக்ளோரோயெத்திலினும் வெளிவிடுகிறது (TCE) என்றும் அவருடைய ஆய்வுகள் காண்பிக்கின்றன. வீட்டில் அதிக நேரத்தைச் செலவுசெய்யும் ஆட்களுக்கு துணிமணிகளைத் துவைத்திடும் மற்றும் பாத்திரங்களைக் கழுவிடும் இயந்திரங்களிலிருந்து வெளிவரும் இந்நச்சுவஸ்துக்களின் பாதிப்பு அதிகம் என்று ஆன்டல்மன் கூறுகிறார். சில முன்னெச்சரிக்கைகள்: சுருக்கமாகக் குளியுங்கள், சற்று குளிர்ந்த நீரைப் பயன்படுத்துங்கள், நீராவியை வெளியேற்ற முடிந்த இடங்களில் அவற்றை வெளியேற்றும் விசிறிகளைப் பயன்படுத்துங்கள்.”—சர்வதேச வனவாழ்வு (International Wildlife), ஜனவரி/பிப்ரவரி 1987. (g87 7⁄22)