இளைஞர் கேட்கின்றனர்
தற்புணர்ச்சி பழக்கம் எந்தளவுக்கு வினைமையானது?
“தற்புணர்ச்சிப் பழக்கம் கடவுளுடைய பார்வையில் தவறாக இருக்குமா என்று யோசிக்கிறேன். எதிர்காலத்தில், நான் விவாகம் செய்துகொண்டால் அது என்னுடைய உடல் மற்றும்/அல்லது மன ஆரோக்கியத்தைப் பாதிக்குமா?”—15 வயது மெலிசா.
இந்தக் கேள்விகள் அநேக இளைஞரைத் தொல்லைப்படுத்துகின்றன. கரணம்! தற்புணர்ச்சி, அல்லது பாலுறவு உணர்ச்சிகளை வேண்டுமென்று தாங்களாகவே ஊக்குவிப்பது என்பது பரவலாகக் காணப்படுகிறது. அறிக்கைகளின்படி, 97 சதவிகித ஆண்களும் 90 சதவிகிதத்துக்கும் கூடுதலான பெண்களும் 21 வயதை எட்டுவதற்கு முன்பு தற்புணர்ச்சி செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் இந்தப் பழக்கம் பாலுண்ணிகள் முதல் வலிப்பு நோய்கள் மற்றும் மனக்கோளாறுகள் வரையான நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
என்றபோதிலும், தற்புணர்ச்சியால் உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டிருப்பதாக நவீன மருத்துவ ஆராய்ச்சி நிரூபிக்கவில்லை. வில்லியம் மாஸ்டர்ஸ் மற்றும் வர்ஜீனியா ஜான்சன் கூறுகிறார்கள்: தற்புணர்ச்சிப் பழக்கம், அடிக்கடி ஈடுபட்ட ஒரு பழக்கமாயிருந்தபோதிலும் மனக்கோளாறு ஏற்படுத்துவதாக மருத்துவ ஆதாரம் கிடையாது.”
என்றாலும் இந்தப் பழக்கத்தின் வினைமையான நன்மை குறித்து அநேக கிறிஸ்தவ இளைஞர்கள் அக்கறையாயிருக்கின்றனர். “நான் அதில் [தற்புணர்ச்சியில்] ஈடுபடும்பொழுது யெகோவாவுக்கு முன்பாகத் தவறுவதாக உணர்வதுண்டு.” என்று ஒரு இளைஞன் எழுதினான் “நான் சில சமயங்களில் அதிக சோர்வடைந்தேன்.” மற்றொரு இளைஞன் “தற்புணர்ச்சி மன்னிக்கப்படமுடியாத பாவமா?” என்று கேட்டான்.
பைபிள் என்ன சொல்லுகிறது?
விவாகத்துக்கு முன் பாலுறவு கொள்ளுதல் (வேசித்தனம்), ஓரினப்புணர்ச்சி, விபச்சாரம் மற்றும் மிருகப்புணர்ச்சி போன்ற பாலுறவு சம்பந்தப்பட்ட மீறுதல்களைப் பைபிள் வினைமையான பாவங்கள் என்று கண்டனம் செய்தபோதிலும், தற்புணர்ச்சி குறிப்பிடவில்லை. (ஆதியாகமம் 39:7-9; லேவியராகமம் 18 :20.22; 1 கொரிந்தியர் 6:9,10) பைபிள் காலங்களில் தற்புணர்ச்சி கிரேக்கரின் உலகில் பொதுவாக இருந்த ஒரு பழக்கம். இந்தப் பழக்கத்தை விவரிக்க பல கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், இவற்றில் எந்த ஒரு வார்த்தையும் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை.a
தற்புணர்ச்சி பைபிளில் நேரடியாகக் கண்டனம் செய்யப்படவில்லை என்பதால். இந்தப் பழக்கம் தீங்கற்றது என்பதைக் குறிக்குமா? நிச்சயமாக இல்லை! கடவுளுடைய நோக்குநிலையைக் குறித்து கவலைப்படாத ஆட்களுங்கூட இந்தப் பழக்கத்தை அனுகூலமானதாகக் கருதுவதில்லை. உதாரணமாக, டாக்டர் ஆரோன் ஹாஸ். தங்கள் பாலுறவு பழக்கத்தைக் அனகூலமானதாகக் கருதவில்லை. உதாரணமாக, டாக்டர் ஆரோன் ஹாஸ், தங்கள் பாலுறவு பழக்கத்தைக் குறித்து 625 வாலிபர்களைப் பேட்டிக்கண்டு அறிக்கை செய்ததாவது: “தற்புணர்ச்சியில் ஈடுபட்ட பெரும்பான்மையான இளைஞர்கள் குற்ற உணர்வுடையவர்களாக, வெட்கத்துக்குரிய செயலாக, அசுத்தமான ஒன்றாக, மூடத்தனமானதாக அல்லது இயல்புக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உணர்ந்தனர்.” நிச்சயமாகவே, தற்புணர்ச்சி அசுத்தமான ஒரு பழக்கம், ஆனால் பைபிள் பிரகாரம் “அசுத்தம்” என்ற பதம் வினைமையான தன்மை வாய்ந்த காரியங்களை உட்படுத்துவதாயிருந்தாலும், வேசித்தனம் அல்லது மற்ற பாலுறவு சம்பந்தப்பட்ட வினைமையான ஒழுக்கக்கேட்டுடன் வகைப்படுத்துவதற்கில்லை.—எபேசியர் 4:9.
என்றபோதிலும், வினைமையான பாலுறவு ஒழுக்கக்கேடு சம்பந்தமான பைபிள் தடைகளைக் கடைப்பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதைக் கடவுள் அறிந்திருக்கிறார். எனவே, பாலுறவு ஒழுக்கக்கேட்டை எப்படித் தவிர்க்கலாம் என்று அவர் ஆலோசனை கொடுக்கிறார். அவர் ‘பிரயோஜனமானதை உனக்குப் போதிக்கிறார்.’ (ஏசாயா 48:17) இந்த அசுத்தமான பழக்கத்தைப் பலமாக எதிர்ப்பதன் மூலமாக “உங்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்” என்று அவருடைய வார்த்தையின் நியமங்கள் குறிப்பாய்க் காட்டுகின்றன, ஏனென்றால் இது அடிப்படையாக. . .
“மோகத்தைத் தூண்டுகிறது”
“ஆகையால் . . மோகம். . . ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயங்களை அழித்துப்போடுங்கள்.” என்று பைபிள் துரிதப்படுத்துகிறது. (கொலோசெயர் 3:5) இந்த “மோகம்” வளரிளமைப்பருவத்தின்போது இளைஞரின் பலர் உணரும் புதிய பாலின உணர்ச்சிகள் அல்ல. இதைக் குறித்து நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஒருவர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழக்குமளவுக்கு இந்த உணர்ச்சிகள் வளரும்போது வேட்கை வினைமையான பாலுறவு ஒழுக்கக்கேட்டிற்கு வழிநடத்தியிருக்கிறது. இதைப் புவுல் ரோமர் 1:26,27-ல் விவரிக்கிறார்.b
ஆனால் தற்புணர்ச்சி இந்த இச்சைகளை “அழித்துப்போடுகிறது” அல்லவா? மாறாக, ஓர் இளைஞன் கூறியபடி: “தற்புணர்ச்சியில் ஈடுபடுகையில், நீங்கள் தவறான ஆசைகளை மனதில் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். அது உங்களுக்குச் செய்வதெல்லாம், அவற்றிற்கான உங்கள் வேட்கையை வளர்க்கிறது.” இனசம்பந்தமான இன்பத்தை வளர்ப்பதற்கு ஒழுக்கக்கேடான கற்பனை பயன்படுத்தப்படுகிறது. (மத்தேயு 5:27,28) அதற்கேற்ற சந்தர்ப்பம் கிடைத்தால், நீங்கள் எளிதில் வேசித்தனத்திற்குள் இழுக்கப்படக்கூடும். வேசித்தனத்தில் ஈடுபட்ட பின்பு ஒரு இளைஞன் இப்படியாக வருத்தப்பட்டான்: “ஒரு பெண்ணுடன் உறவுகொள்ளாமலேயே, தற்புணர்ச்சியின் மூலம் என் மோகத்தைத் தணித்துவிடக்கூடும் என்பதாக நான் ஒரு சமயத்தில் நினைத்தேன். ஆகிலும் அதைச் செய்வதற்கான பலமான ஆடை என்னை மேலும் அதிகமாக மேற்கொள்வதைக்கண்டேன்.” உண்மை என்னவெனில், தற்புணர்ச்சியில் ஈடுபட்ட இளைஞரில் பெரும்பாண்மையினர் வேசித்தனத்திலும் ஈடுபட்டவர்களாயிருந்தனர் என்பதை ஒரு தேசிய சுற்றாய்வு காண்பிக்கிறது. அவர்களுடைய எண்ணிக்கை இருந்தவர்களைவிட 50 சதவிகிதம் அதிகமாயிருந்தது அந்தப் பழக்கம் நிச்சயமாகவே அவர்களுடைய “மோகத்” தூண்டுதலைத் தணித்திடவில்லை!
ஒழுக்க சம்பந்தமாக ஆபத்தான சூழ்நிலையிலிருக்கும்போது உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம் என்று நீங்கள் ஏன் உங்கள் ஆசைகளை அதிகரிக்கச் செய்து ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ள வேண்டும்? வேசித்தனத்தில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகையில், நீங்கள் உண்மையிலேயே முடியாது என்று சொல்கிறவர்களாயிருப்பீர்களா?
மனசம்பந்தமாகவும் உணர்ச்சிசம்பந்தமாகவும் அசுசிப்படுத்துகிறது
தற்புணர்ச்சிப் பழக்கம் மனசம்பந்தமாக ஊறுவிளைவிக்கும் சில மனப்பான்மைகளை விதைக்கிறது. (2 கொரிந்தியர் 11:3-ஐ ஒப்பிடவும்) இந்தப் பழக்கம் தன்னுடைய உடலை பாலுறவு இன்பத்துக்கு மட்டுமே பயன்படுத்துவதற்குரிய பொருளாக எண்ணும்படி கற்பிக்கிறது. தற்புணர்ச்சியில் ஈடுபடுகையில் ஒருவன் தன்னுடைய சொந்த சரீர உணர்ச்சிகளில் மட்டுமே ஆழ்ந்துவிடுகிறான்—இது முற்றிலும் சுயவிருப்பப்போக்கு, பாலுறவு என்பது அன்பிலிருந்து பிரிக்கப்படுவதோடுகூட, அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான மறு செயலாகிவிடுகிறது. ஆனால் பாலுறவு சம்பந்தப்பட்ட ஆசைகள் பாலுறவுகளில் திருப்தி காணும்படியாக, ஒரு ஆணுக்கும் அவனுடைய மனைவிக்குமிடையே அன்பின் வெளிக்காட்டாக இருக்கும்படியாகவே கடவுள் நோக்கங்கொண்டார்.—நீதிமொழிகள் 5:15-19.
இந்த நோக்குநிலையை இழந்துவிடுவது, எதிர்பாலினத்தவருடன் சரியான உறவைக் கொண்டிருப்பதில் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் அவர்கள் உணர்வுகள் மிகுந்த மனிதராக நோக்கப்படுவதற்கு மாறாக பாலுறவுக்குரிய பொருட்களாக நோக்கப்படக்கூடும். பாலுறவு ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதற்கான கருவிகளாக மற்றவர்களைப் பயன்படுத்த முற்படக்கூடும். தற்புணர்ச்சி கற்பிக்கும் தவறான மனப்பான்மைகள் ஒருவருடைய “ஆவியை” அல்லது பலமான மன சிந்தையை அசுசிப்படுத்தக்கூடும் நல்ல காரணத்திற்காகவே, கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு துரிதப்படுத்துகிறது: “பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) உண்மைதான், விவாகத்துக்குப் பின் பெரும்பான்மையான தம்பதிகள் தற்புணர்ச்சியால் விளைந்த பிரச்னைகளைச் சரிசெய்துகொள்ள முடிந்திருக்கிறது என்றாலும் இந்தப் பிரச்னைகளில் சில எவ்வளவு கடினமானவையாகவும் தொடரக்கூடியவையாகவும் இருந்திருக்கின்றன, அநேக சமயங்களில் விவாகமான தம்பதிகள் ஒருவரையொருவர் அனுசரித்துச்செல்வதைப் பாதித்திருக்கின்றன என்று பலரின் அனுபவங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
ஆனால் ஒருவர் இந்தக் கெட்ட பழக்கத்தை மேற்கொள்ள உழைக்கையில் பொதுவாக வெற்றி கண்டாலும் இந்தப் பிரச்சனை அவருக்குத் தொடர்ந்து இருக்கிறதென்றால், அப்பொழுது என்ன?
குற்ற உணர்வின்பேரில் சமநிலையான நோக்கு
பாவச் செயல் பாவமாக இருந்தபோதிலும், நம்முடைய பாவச் செயல்களின் வினைமையான தன்மையில் வித்தியாசம் இருப்பதாகக் கடவுள் நோக்குகிறார். மற்றும் அவர் அதிக இரக்கமுள்ள தேவன். “யெகோவாவே, நீர் நல்லவர், மன்னிக்கச் சித்தமாயிருக்கிறவர், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவரிடத்திலும் மிகுந்த கிருபையுடையவர்.” (சங்கீதம் 86:5) ஒரு கிறிஸ்தவன் தற்புணர்ச்சியில் ஈடுபடும்போது, அவனுடைய இருதயம் அநேகமாய் தன்னையே கண்டனம் செய்கிறது. என்றபோதிலும் “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்,” என்று பைபிள் கூறுகிறது. (1 யோவான் 3:20) நம்முடைய பாவங்களைவிட அதிகத்தைப் பார்க்கிறார். காரியங்களை அறிந்திருக்கும் மேன்மைதானே மன்னிப்புக்கான நம்முடைய உள்ளான வேண்டுதல்களுக்குச் செவிகொடுக்கச் செய்கிறது. இளம் பெண் ஒருத்தி எழுதினாள்: “நான் ஓரளவுக்குக் குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டேன், ஆனால் யெகோவா எவ்வளவு அன்பான தேவன் என்றும், அவர் என்னுடைய இருதயத்தை வாசித்து என்னுடைய எல்லா முயற்சிகளையும் உள்நோக்கங்களையும் அவர் அறிந்திருக்கிறார் என்றும் நான் தெரிந்திருப்பதுதானே, சில சமயங்களில் நான் தவறும்போது அளவுக்கு மிஞ்சி சோர்ந்துவிடாதபடிச் செய்கிறது.” தற்புணர்ச்சியை மேற்கொள்ள போராடுவதுதானே நீங்கள் வினைமையான பாவமாகிய வேசித்தனத்தில் ஈடுபடமாட்டீர்கள் என்பதல்ல.
எமது துணைப் பத்திரிகையாகிய காவற்கோபுரம் பிப்ரவரி 15,1954 பின்வருமாறு குறிப்பிட்டது: நம்முடைய முன்னான வாழ்க்கை போக்கில், நம்மை ஆழமாக பாதித்திருக்கும் ஏதோ ஒரு கெட்ட பழக்கத்தில் நாம் அறியாமலேயே பலமுறை இடறிவிழக்கூடியவர்களாக இருக்கலாம், அப்பொழுது நாம் சோர்வுறவும் தகுதியற்றவர்களாய் இருப்பதாகவும் எண்ணக்கூடும்” . . நீங்கள் சோர்ந்துவிட வேண்டாம். மன்னிக்கக்கூடாத பாவத்தை இழைத்துவிட்டதாக முடிவுசெய்துவிட வேண்டாம். அவ்விதமே நீங்கள் எண்ணிட வேண்டும் என்பது சாத்தானின் நோக்கம். நீங்கள் உங்களையே சலித்துக்கொண்டு வேதனைப்படுவதுதானே நீங்கள் வெகு தூரம் சென்றுவிடவில்லை என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. மனத்தாழ்மையுடன், உள்ளான மனதுடன் கடவுளிடமாகத் திரும்பி, அவருடைய மன்னிப்பைப் பெற்று அவரால் சுத்திகரிக்கப்படுவதற்கு உதவி கேட்கத் தயங்காதீர்கள். கஷ்டத்திலிருக்கும்போது தன் தகப்பனிடம் திரும்பும் ஒரு பிள்ளையைப் போன்று நீங்கள் அவரை அணுகுங்கள். ஒரே பலவீனத்தில் எத்தனை முறை இடறினாலும். யெகோவா தேவன் உங்களிடம் தயவு காண்பிப்பார், ஏனென்றால் அவருடைய தகுதியற்ற தயவு அவ்வளவுக்குப் பெரியது, மற்றும் நீங்கள் உண்மையாக இருந்தால். சுத்தமான மனசாட்சியைப் பெற்றுக்கொள்ளும் உணர்வை அவர் உங்களுக்குத் தருவார்.” (g87 9/8)
a [அடிக்குறிப்புகள்]
ஓனான் ‘தன் வித்தைத் தரையிலேயே விழவிட்டுக் கெடுத்ததால்’ கடவுள் அவனை அழித்தார். என்றபோதிலும் குறுக்கிடப்பட்ட உடலுறவாக அது இருந்தது, தற்புணர்ச்சி அல்ல. மேலும் ஓனான் தன்னுடைய சகோதரனின் குடும்ப வாரிசு தொடர்ந்திருக்கச் செய்வதற்கு தன்னலங்கருதி தன் தமையன் மனைவியை விவாகம் செய்துகொள்ளாதிருந்ததால் அழிக்கப்பட்டான். (ஆதியாகமம் 38:1-10) லேவியராகமம் 15:16-18-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் “இந்திரியம் கழிவு” தற்புணர்ச்சியைக் குறிப்பிடவில்லை, ஆனால் இரவு நேரத்திலே தூக்கத்திலேற்படும் இந்திரியக் கழிவு சம்பந்தமாகவும் விவாக உடலுறவு சம்பந்தமாகவும் இருக்கிறது.
b “மோகம்” என்பதற்கான பூர்வ கிரேக்க வார்த்தை (பே‘த்தாஸ்) முதல் நூற்றாண்டு சரித்திராசியனாகி ஜோஸிபஸால் போத்திப்பாரின் மனைவியைக் குறித்து விவரிக்கும்போது பயன்படுத்தப்பட்டது; அவள் “அளவு கடந்த மோகம்” (பே‘த்தாஸ்) கொண்டதால் இளைஞனாகிய யோசேப்புடன் சயனிக்க முயன்றாள்; மற்றும் அம்னோன் “இச்சை வளர, மோகத்தால் (பே‘த்தாஸ்) தூண்டப்பட்டு, தன்னுடைய சகோதரியைக் கெடுத்தான் [கற்பழித்தான்].” போத்திபாரின் மோகமும் அம்னோனின் மோகமும் கட்டுக்கடங்காததாயிருந்தது.—ஆதியாகமம் 39:7-12; 2 சாமுவேல் 13:10-14.
[பக்கம் 21-ன் படம்]
தற்புணர்ச்சி பலமான குற்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் கடவுளுடைய மன்னிப்புக்கான உள்ளான ஜெபமும், இந்தப் பழக்கத்தை எதிர்த்து மேற்கொள்ளுவதற்கான கடின உழைப்பும் ஒரு நல்ல மனசாட்சியை ஏற்படுத்தக்கூடும்