உயர் தொழில்நுட்ப மருத்துவ முறையில் தவறாக நோய்க்கணிப்பு
ஒரு மருத்துவர் உங்களுக்கு இன்ன நோய் இருக்கிறது என்று தன்னுடைய நோய்க்கணிப்பு காண்பிக்கிறது என்று கூறினால் அவருடைய கணிப்பு சரியானது என்று நீங்கள் நிச்சயமாயிருப்பீர்களா? எல்லாச் சமயத்திலும் அப்படி இருப்பதில்லை என்று கானடா தேசத்தின் செய்தித்தாள் தி குளோப் அண்டு மெய்ல் (The Globe and Mail) சொல்லுகிறது! “சாவுக்குரிய காரணம் குறித்து சாவுக்குப் பின் செய்யப்படும் ஆய்வின் பலன்களை மருத்துவர் அறிக்கை செய்யும் காரணத்துடன் ஒப்பிடும்போது, மருத்துவர் 10 முதல் 30 சதவிகிதம் தவறாக இருந்திருக்கிறார் என்று காண்பிக்கிறது.” இது உயர் தொழில்நுட்ப நோய்க்கணிப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டபோதிலும் இப்படியாக இருந்திருக்கிறது. அக்கறைக்குரிய விதத்தில், அப்படிப்பட்ட பொறிகளில் அளவுகடந்தவிதத்தில் சார்ந்துவிடுவதுதானே பிரச்னையின் ஒரு பாகம் என்கிறார் டாக்டர் T.F. மெக்எலிகாட், நோய்க்குறியியல் நிபுணர்களின் கானடா கழகத்தின் தலைவர்.
“இப்பொழுது அதிக உயர்ந்த ரக நோய்க் கணிப்பு முறைகள் தோன்றியிருப்பதால், சாவுக்குப் பின் காரணத்தைத் தெரிந்து கொள்வதில் அதிகம் இல்லை,” என்கிறார். அவர் தொடர்ந்து சொல்லுவதாவது: “ஊகிப்பு சரியல்ல என்று நினைக்கிறேன்.” அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளையும் பற்றி தினசரி வெளிப்படுத்தியதாவது, “ஏறக்குறைய 20 சதவிகித மரணத்துக்கேதுவான நோய்கள் தவறாக கணிக்கப்பட்டிருக்கிறது.”
உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் பல்கலைக்கழகக் கற்பிக்கும் மருத்துவமனையில், சாவுக்குப் பின்பு காரணாகாரியத்தின் ஆய்வுகளின் ஒரு 30 ஆண்டு ஆராய்ச்சி “கண்டுபிடித்ததாவது, நோய்க்கணிப்பு சரியாக இருக்கும் சாத்தியத்தை அதிகப்படுத்துவதற்கு மாறாக, உயர் தொழில்நுட்ப மருத்துவ பரிசோதனைகளில் நம்பிக்கை . . . சில நோயாளிகளில் நோயைத் தவறாகக் கணித்திருக்கிறது.” மற்றும் கானடாவில் வின்னிபெக்கிலுள்ள ஒரு மருத்துவமனையில், 1983-ல் சாவுக்குப் பின்பு செய்யப்படும் ஆய்வின் பலன்களில் 13 சதவிகிதத்தில் ஒரு பெரிய அளவான நோய்க்கணிப்புக் குறை காணப்பட்டது, அது மரணத்துக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், நோயளிக்கு நீடித்த ஆயுளை அல்லது சுகத்தையும் கொடுத்திருக்கும்.
மற்றொரு வின்னிபெக் மருத்துவமனையில், 200 சடலங்களில் மரணத்துக்கான காரணம் அறிய மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு “சொன்னதாவது, இன்ன நோய் என்று கணிக்கப்பட்டதில் 24 சதவிகிதத்தினருக்கு வித்தியாசமான நோய் இருந்திருக்கிறது. மரணத்துக்கு முன்னால் அவர்களுடைய நோய் சரியாகக் கணிக்கப்பட்டிருந்தால், 10 சதவிகிதத்தினரின் நிலைமை வித்தியாசமாயிருந்திருக்கும்.” இந்த வியப்புக்குரிய உண்மைகளைப் பார்க்கும்போது, வினைமையான உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தனிப்பட்ட மருத்துவரின் கருத்தை நாடுவது ஞானமானது. (g88 12⁄8)