விசுவாசத்திற்கு சவாலாயிருக்கும் ஒரு மருத்துவ நிலையை எதிர்பட நீங்கள் தயாராயிருக்கிறீர்களா?
இன்றோ அல்லது நாளையோ ஒரு மருத்துவமனையில் இருக்கும்படியான சத்தியத்தைப் பற்றி எவரும் அதிகம் சிந்திப்பதில்லை. இருந்தபோதிலும் . ‘சமயமும் எதிர்பாரா நிகழ்ச்சிகளும் நம் அனைவருக்கும் சம்பவிக்கின்றன.’ (பிர. 9:11) ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள நீங்கள் விரும்பும் முறையாக மருத்துவ சிகிச்சையை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், ஒரு விபத்தின் காரணமாக நீங்கள் உணர்வற்ற நிலைக்குள்ளாகி, மருத்துவமனைக்கு விரைவாக எடுத்துச் செல்லப்பட்டாலும். தேவையில்லா இரத்தம் ஏற்றுவதிலிருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆம் ஒரு விபத்தோ அல்லது திடீரென மோசமாகும் ஆரோக்கிய நிலையோ திடிரென்று உங்களை உங்கள் விசுவாசத்திற்கு ஒரு சவாலை முகமுகமாய் எதிர்படச் செய்யக்கூடும்.
2. எந்தக் காரணத்திற்காகவோ நீங்கள் ஒரு மருத்துவமனையில் இருக்க நேர்ந்தால். அங்குள்ள ஒருவர் இரத்தம் ஏற்றுதல் இல்லாவிடில் நீங்கள் மரித்துப் போவீர்கள் என்று உங்களிடம் சொன்னால், உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் நிலைமையை இந்தக் கூற்று உண்மையாகப் பிரதிநித்துவம் செய்கிறது என்று அவசரப்பட்டு ஏற்றுக்கொள்வீர்களா? உங்களுக்கு இரத்தம் வேண்டாம் நீங்கள் முழுமையாக நிச்சயித்திருக்கிறீர்களா? உங்கள் விசுவாசத்திற்கான இந்தச் சவாலை நீங்கள் எதிர்ப்பட்டு ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ தயாராய் இருக்கிறீர்களா?—அப். 15:28, 29.
3. ஆவிக்குரிய வகையில் கறைப்படுத்தும் விரும்பப்படாத இரத்தமேற்றுதலை வெற்றிகரமாக எதிர்ப்பது, ஓர் உறுதியான நிச்சய நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறது. இரத்தத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்ற தெளிவான புரிந்துகொள்ளுதலின்பேரில் அப்பேர்ப்பட்ட நிச்சயம் சார்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அக்கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு, உங்களைவிட அந்நிலையைப் பற்றி அதிகமாக அறிந்திருப்பதாக உரிமைபாராட்டும் ஒருவரால் நீங்கள் எளிதில் அச்சுறுத்தப்பட்டு அவர் விரும்பும்படி செய்யக்கூடும். இரத்தத்தைப் பற்றி கடவுளைவிட மருத்துவர்கள் ஒருவேளை அதிகம் அறிந்திருக்கலாம் என்ற சிந்தனைக்குத் தவறாக வழிநடத்தப்படுவீர்களா? வெறும் மானிடர்கள் என்ன சொன்னாலும், இந்தச் சூழ்நிலைகளில், யெகோவாவின் கண்களில் “எது சரியானதோ” அதைச் செய்ய “உறுதியான முடிவெடுக்க” நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள். (உபா. 12:23-25) ஆனால் இந்தச் சவாலை நீங்கள் மாத்திரமே தனிமையில் எதிர்பட வேண்டுமா?—பிர. 4:9-12.
மருத்துவமனை தகவல் சேவைகளும் மருத்துவமனை தொடர்பு குழுக்களும்
4. இரத்தம் ஏற்றும் பிரச்னையை எதிர்படுகையில் உதவி தேவைப்படுவோர்க்கு உதவி செய்ய, சங்கம் புரூக்லினில் மருத்துவமனை தகவல் சேவைகள் என்பதை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் உள்ள பெரிய நகரங்களில் 100 மருத்துவமனை தொடர்பு குழுக்களையும் அது நிறுவியிருக்கிறது. இந்தக் குழுக்கள் இந்த வேலைக்காக விசேஷமாக பயிற்றுவிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட மூப்பர்களால் ஆனவை.
5. மருத்துவமனை தகவல் சேவைகள் உலகமுழுவதும் 3,600-க்கும் மேற்பட்ட மருத்துவ பத்திரிகைகளை ஆராய்ச்சி செய்து அநேகவிதமான இரத்தமற்ற அறுவை மருத்துவம் மற்றும் சிகிச்சையின் கிடைக்கக்கூடிய தன்மையையும், திறம்பட்ட தன்மையையும் பற்றி தகவல்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. இது பின்னர் இந்த மருத்துவ முன்னேற்றங்களைப் பற்றிய தகவல்களை, மருத்துவமனை தொடர்பு குழுக்களுக்கும், ஆரோக்கிய நலன்மையங்களுக்கும் மேலும் சில மருத்துவர்களுக்கும் அளிக்கிறது. (சில சமயங்களில் மருத்துவமனை தகவல் சேவைகள், இரத்தமில்லாமல் என்ன செய்யப்படலாம் என்பதைக் காட்டும் மருத்துவ கட்டுரைகளை அனுப்பி மருத்துவமனையில் நடந்துகொண்டிருக்கும் சர்ச்சைகளை தீர்த்திருக்கிறது.) இது நம் வழக்குகளை கூடுதலான உட்பார்வையுடன் நோக்க நீதிபதிகளுக்கு உதவியாயிருக்கும் சாதகமான வழக்குமன்றத் தீர்ப்புகளை குழுக்களுக்கு அறிவிக்கிறது. இரத்தமேற்றுதல் பிரச்னைகள் எழும்புகையில் குழுக்கள் உபயோகிப்பதற்கு, 7,000-க்கும் மேற்பட்ட ஒத்துழைக்கும் மருத்துவர்களைப் பற்றிய பதிவுகளை இது காத்து வருகிறது.
6. மருத்துவமனை தகவல் சேவைகள், மருத்துவமனை தொடர்பு குழுக்களின் பயிற்சியையும், வேலையையும் மேற்பார்வையிடுகிறது. அவைகள் இருக்கும் நகரங்களில், மருத்துவமனை தொடர்பு குழுக்கள் மருத்துவமனையில் பணிபுரிபவர்களோடு தங்களுக்குள்ள உறவை மேம்படுத்த ஒழுங்காகத் தகவல்களை அனுப்புகின்றன. இந்தப் பணியாளர்களை கணக்கெடுப்புச் செய்து இரத்தம் உபயோகிக்காமல் நமக்கு சிகிச்சையளிக்கும் கூடுதலான மருத்துவர்களை கண்டுபிடிக்கின்றனர். இந்தச் சகோதரர்கள் உங்களுக்கு உதவியளிக்க தயாராயிருக்கின்றனர், ஆனால் அதை அவர்கள் மிகவும் திறம்பட்ட வகையில் செய்வதற்கு அஸ்திபாரத்தைப் போட, நீங்கள் எடுக்கவேண்டிய தீர்வுக்குரிய முன்னேற்பாடான படிகள் உள்ளன.
தீர்வுக்குரிய முன்னேற்பாடான படிகள்—அவற்றை நீங்கள் இதுவரை எடுத்திருக்கிறீர்களா?
7. முதலில் குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட மருத்துவ கோரிக்கை பத்திரம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு—தேதி, கையோப்பமிடப்பட்டு மற்றும் சாட்சியிடப்பட்டு இருக்கிறத என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். சில சகோதரர்கள் தேதியில்லாத மற்றும்/அல்லது சாட்சிகள் இல்லாத பத்திரத்தோடு மருத்துவமனைக்கு வருகையில் அதன் செல்லுபடியாகும் தன்மை சவாலுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய முழுக்காட்டப்படாதப் பிள்ளைகள் எல்லாரும் பூர்த்திசெய்யப்பட்ட அடையாள அட்டைகளை வைத்திருக்கின்றனரா? அப்படியில்லையென்றால், உங்கள் பிள்ளை சம்பந்தப்பட்ட ஓர் அவசரநிலை எழுகையில் மருத்துமனை பணியாளர்கள் இரத்தத்தைப் பற்றி உங்கள் நிலைநிற்கை என்ன என்பதையும் யாரை அழைப்பது என்பதையும் எவ்வாறு அறிவார்கள்?
8. எல்லாரும் இந்தப் பத்திரங்களை தங்களுடன் எல்லா நேரங்களிலும் வைத்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்வதற்கு முன், ஆம், விளையாட்டு மைதானம் அல்லது பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வதற்கு முன்பும்கூட அவர்களிடம் இது இருக்கிறதா என்று கவனியுங்கள். இந்தப் பத்திரங்களை வேலைசெய்யுமிடத்தில் விடுமுறை சமயங்களில் அல்லது கிறிஸ்தவ மாநாட்டின்போதும் நம்முடன் இருக்கிறதா என்று நாம் அனைவருமே நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். அவைகள் இல்லாமல் ஒருபோதும் இருக்காதீர்கள்!
9. நீங்கள் கவலைக்கிடமான நிலையில் ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை அறைக்குள் உணர்வற்ற மற்றும்/அல்லது உங்களால் பேசமுடியாத நிலையில் இருந்தால் உங்களுக்கு என்ன நிகழக்கூடும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உங்களிடம் அந்தப் பத்திரம் இல்லையென்றால், உங்கள் சார்பாகப் பேசுவதற்கு ஓர் உறவினரோ அல்லது மூப்பரோ இன்னும் வரவில்லையென்றால், உங்களுக்கு ‘இரத்தம் தேவை’ என்று முடிவுசெய்யப்பட்டால், உங்களுக்கு இரத்தம் ஏற்றப்படுவதற்கு அதிக சாத்தியமிருக்கிறது. விசனப்படத்தக்க வகையில், இது சிலருக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆனால் நம்மோடு அந்தப் பத்திரம் இருந்தால், அது நமக்காகப் பேசும், நம் விருப்பத்தைத் தெரிவிக்கும்.
10. அதனால்தான் மருத்துவ பத்திரம், மருத்துவ கைவளை அல்லது கழுத்து மாலையைவிட மேலானது. இவை நம் நிலைக்கான பைபிள் அடிப்படையிலான காரணங்களை விளக்காது. மேலும் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது சரியென ஒப்புக்கொள்ளும் கையொப்பங்களையும் கொண்டிருக்காது. கானடா வழக்குமன்றத் தீர்ப்பு ஒரு சகோதிரியின் பத்திரத்தைப் பற்றி சொன்னது: “நான் உணர்வற்ற நிலையிலோ இருந்தால், இரத்தம் ஏற்றுதலை ஒத்துக்கொள்ள முடியாது என்பதை மருத்துவர்களுக்கும், சிகிச்சையளிப்பவர்களுக்கும் தெரிவிப்பதற்கு முடிந்த ஒரே வழியை [நோயாளி] கடைப்பிடித்திருக்கிறார்.” எனவே அது இல்லாமல் ஒருபோதும் இருக்காதீர்கள்!
11. நம் மருத்துவ கோரிக்கை அவசரநிலைமைகளை சமாளிப்பதற்கு முக்கியமாக தயாரிக்கப்பட்டிருப்பதால், தேர்ந்தெடுப்புக்குரிய அறுவை மருத்துவத்தில் நீங்களே உங்கள் சொந்த தனிப்பட்ட, அதிக விரிவான, முன்னேற்பாடான கோரிக்கையை எழுவது ஞானமாக இருக்கும். (நமது மருத்துவ கோரிக்கை அடிப்படையில்) இதில் அறுவை மருத்துவமுறை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையின் பெயர்கள் போன்ற திட்டவட்டமான குறிப்புகளை நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இதைச் செய்வதும், நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் சிகிச்சையை இவ்வாறு உறுதிசெய்துகொள்வதும் உங்களுடைய உரிமை. நீங்களோ உங்கள் மருத்துவரோ மோசமானப் பிரச்னைகளை எதிர்பார்க்காவிட்டாலும், எதிர்பாராத நிலைமைகள் உருவாகும்போது இந்தக் கோரிக்கை பின்பற்றப்பட வேண்டும் என்று விளக்குங்கள்.—நீதி. 22:3.
12. அடுத்த முக்கியமான படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அவசர சிகிச்சையின் போது நீங்கள் எதிர்ப்படவேண்டிய அவசியமான மருத்துவ பணியாளர்களிடம் பேசுவதாகும். யாரிடம் நீங்கள் விசேஷமாக பேசவேண்டும்?
மருத்துவப் பணியாளர்களிடம் பேசுங்கள்
13. மருத்துவக்குழு: இச்சமயத்தில் மனிதனுக்காக பயம் மேலோங்கிவிடக்கூடாது. (நீதி. 29:25) நீங்கள் நிச்சயமற்றவர்களாக தோற்றமளித்தால், யாராவது ஒருவர் நீங்கள் உண்மையற்றவரென ஒருவேளை முடிவெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அவசர அறுவை மருத்துவம் தேவைப்படுகையில் நீங்களோ அல்லது மிக நெருங்கிய குடும்ப அங்கத்தினரோ உறுதியுடன் சில நேரடியான கேள்விகளை அறுவை மருத்துவ குழுவின் தலைவரிடம் கட்டாயம் கேட்க வேண்டும். ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால்: குழு நோயாளியின் விருப்பத்தை மதிக்குமா? எல்லாச் சூழ்நிலைகளிலும் இரத்தமின்றி சிகிச்சை அளிக்குமா? இதைக் குறித்து உறுதியளிக்கப்படாமல் நீங்கள் நன்றாக பாதுகாக்கப்படமாட்டீர்கள்.
14. தெளிவாகவும் கண்ணியமான உறுதியோடும் உங்கள் விருப்பங்கள் என்ன என்பதைக் கூறுங்கள். உங்கள் பிரச்னைக்கு மாற்று வகையான இரத்தமற்ற மருத்துவம் கையாளப்பட வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தைத் தெளிவாக்குங்கள். அமைதலோடும் நம்பிக்கையோடும் உங்களுடைய சொந்த முன்னேற்பாடாக எழுதப்பட்ட மருத்துவ கோரிக்கையையும், பெறுவதிலிருந்து மருத்துவமனை விடுவிக்கப்படுவதற்குரிய நமூநாவையும் கலந்தாலோசியுங்கள். உங்கள் விருப்பங்களோடு வேலைசெய்ய அறுவை மருத்துவர் விருப்பமற்றவராக இருந்தால், மற்றொரு மருத்துவரை உங்களுக்காக கண்டுபிடிக்குமாறு மருத்துவமனை நிர்வாகியை நீங்கள் கேட்டால் நேரத்தை சேமிப்பீர்கள். அது அவருடைய வேலையின் ஒரு பாகமாகும்.
15. மயக்கமருந்து கொடுப்பவர்: அறுவைமருத்துவத்திற்கு முன் நீங்கள் மருத்துவ குழுவிலுள்ள எல்லாரிடமும் பேசுவதற்கான தேவையிருக்கிறது, நீங்கள் இந்த மருத்துவரிடம் பேசுவதற்கான தேவையிருக்கிறது. நீங்கள் இந்த மருத்துவரிடம் பேசுவதற்கு தவறக்கூடாது. அறுவைமருத்துவர் அறுவைசெய்கையில், உங்களை உயிரோடு வைத்திருப்பதற்கான உத்தரவாதம் இருக்கு இருப்பதால், இரத்தத்தை உபயோகிப்பது போன்ற இப்பேர்ப்பட்ட விஷயங்களில் மயக்கமருந்து கொடுப்பவர்தான் தீர்மானங்களைச் செய்கிறார். அறுவை மருத்துவரிடம் பேசுவதன் மூலம் மட்டுமே நீங்கள் முழுமையாக பாதுகாக்கப்பட போவதில்லை. ஆகையால் நீங்கள் உங்கள் நிலையைக் குறித்து மயக்கமருந்து கொடுப்பவரிடம் பேசி அவரை நம்ப வைக்க வேண்டும், இது மதிக்கப்படுமா அல்லது மதிக்கப்படாதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.—லூக்கா 18:3-5 ஒப்பிடுக
16. அறுவை மருத்துவத்திற்கு முன் இரவில் மயக்கமருந்து கொடுப்பவர் நோயாளியை சிறிது நேரம் சென்று பார்ப்பது தான் சாதாரண பழக்கமாயிருப்பதாக தெரிகிறது—இரத்தம் விஷயத்தில் உங்கள் நிலைநிற்கையை அவர் எதிர்ப்பவராக இருந்தால், அப்பொழுது அது அதிக தாமதமாகிவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை மருத்துவத்தில், நீங்கள் முன்பாகவே நன்கு பேசுவதற்கு ஓர் ஒத்துழைக்கும் மயக்கமருந்து கொடுப்பவரை முன்பாகவே தேர்ந்தெடுக்குமாறு அறுவைமருத்துவரை வற்புறுத்துங்கள். உங்களுடைய விருப்பங்களோடு ஒத்துப்போக முதல் நபருக்கு விருப்பமில்லையென்றால் மற்றொருவரை கண்டுபிடிக்க அப்பொழுது நேரம் இருக்கும். உங்களுடைய அறுவை மருத்துவத்திற்காக உங்களுக்கு திருப்திகரமான மயக்கமருந்து கொடுப்பவரைப் பெற்றுக் கொள்ளும் இந்த உரிமையை யாராவது உங்களிடம் பேசி தவிர்க்கும்படியாக விட்டுவிடாதீர்கள்.
17. இவையெல்லாவற்றிற்கும் உங்கள் மாற்றமுடியாத நிலைநிற்கையை நீங்கள் தெளிவாக்க வேண்டும்: இரத்தம் இல்லை. பிறவகையான இரத்தமற்ற கையாளுமுறைகளை உங்களுக்கு பயள்படுத்துமாறு கேளுங்கள். நீங்கள் அறிந்த, இரத்தத்திற்கு பதிலாக உபயோகிக்கப்படக்கூடிய மருந்துகளைக் குறிப்பிடுங்கள். உங்களுடைய விஷயத்தில் இவைகள் உபயோகமற்றவை என மருத்துவக் குழு உணர்ந்தால், சாத்தியமாகக்கூடிய மற்றவைகளை மருத்துவ பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்யுமாறு அவர்களைக் கேளுங்கள். அவர்கள் விரும்பினால், உங்கள் மூப்பர்களிடம் கேட்டு லோனாவலா கிளைக்காரியாலயத்தில் உள்ள மருத்துவமனை தகவல் சேவைகளோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு சில தகவல்களை நீங்கள் பெற்றுத்தரலாம் என அவர்களுக்கு உறுதியளியுங்கள்.
உங்கள் உரிமைகளை செயற்படுத்துதல்
18. மருத்துவ மனையில் சேர்க்கப்படுகையில் உங்களை கையோப்பமிடும்படியாக கேட்கும் பொறுப்பிலிருந்து விடுதலை நமூனாவையும், இணக்க நமூனாவையும் கவனமாக கூர்ந்து ஆராயுங்கள். சில சமயங்களில், உங்கள் விருப்பங்களை அவர்கள் மதிப்பார்கள் என குறிப்பிட்டவுடனேயே தொடர்ந்து வரும் பத்தியில் அவர்கள் பிரச்னைகளை எதிர்படுகையில் மருத்துவமனை “உயிரைக்காக்கும்” சிகிச்சையை அளிக்க முடியும் என்பதற்கு கையோப்பமிடுபவர் ஒத்துக்கொள்கிறார் என்று அறிவிக்கும், அது இரத்தத்தை உட்படுத்தக்கூடும். அப்பேர்ப்பட்ட எந்தக் கூற்றுகளையும் அடித்துவிடவும், இரத்தத்தை உட்படுத்தாமல் இருக்கும் வகையில் அக்கூற்றுகளை மாற்றி அமைக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. நீங்கள் அதை செய்யமுடியாது என நர்சுகள் ஒருவேளை உங்களிடம் சொல்லக்கூடும், ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யலாம்! அப்பேர்ப்பட்ட நமூனா அவர்களோடு செய்யும் ஓர் ஒப்பந்தமாகும் என்றும் நீங்கள் ஒத்துக்கொள்ளாத ஓர் ஒப்பந்தத்தை நீங்கள் கையோப்பமிட முடியாது என்றும் விளக்குங்கள். உங்கள் விருப்பத்திற்கு எதிராக யாராவது ஒருவர் உங்களை கையோப்பமிடும்படி வற்புறுத்த முயற்சி செய்தால், அந்த ஆரோக்கிய நலன் மையத்தின் நிர்வாகி மற்றும்/அல்லது நோயாளியின் பிரதிநிதியிடம் பேசவேண்டும் என்பதாகக் கேளுங்கள்.
19. இப்பேர்ப்பட்ட காரியங்களை நீங்கள் செய்யலாமா? ஆம், நீங்கள் செய்யலாம். எனவே, ஒரு நோயாளியாக உங்கள் உரிமைகளை அறிந்திருங்கள். இந்த மனித உரிமைகள் ஒரு மருத்துவ மனையினுள் நுழைகையில் அதன் முன்வாயிலில் விட்டுவிடப்படுவதில்லை. சிகிச்சைப் பெறுவதற்காக நீங்கள் அவைகளை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை, யாராவது உங்களிடம் வேறுவிதமாக சொல்ல அனுமதியாதீர்கள்.
20. அப்பேர்ப்பட்ட உரிமைகளில் ஒன்று தெரிந்து இணங்கும் உரிமை என்று அழைக்கப்படுகிறது, உங்களுடைய அனுமதியின்றி எந்தவிதமான சிகிச்சையும் உங்களுக்குக் கொடுக்கக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. உங்களுக்கு விருப்பமானால் எல்லாச் சிகிச்சையையும்கூட மறுக்கலாம். சிகிச்சைக்கான உங்களுடைய இணக்கம் எதிர்பாரா எல்லா அபாயங்கள் உட்பட மருத்துவக் குழு என்ன செய்ய திட்டமிட்டிருக்கின்றனர் என்ற தெளிவான விளக்கத்திற்குப் பின் இருக்க வேண்டும். அடுத்து, கிடைக்கக்கூடிய மாற்று சிகிச்சை முறைகளைப் பற்றி அவர்கள் உங்களுக்குச் சொல்ல வேண்டும். உங்களுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகு, என்ன சிகிச்சை உங்களுக்கு விருப்பமோ அதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
21. நீங்கள் இணங்கும் காரியங்களைப் பற்றி நிச்சயமாயிருக்க, உங்களுக்கு விளங்காத எந்த ஒரு காரியத்தையும் பற்றி நீங்கள் நல்ல கேள்விகள் கட்டாயம் கேட்க வேண்டும், விசேஷமாக பெரிய வார்த்தைகள் அல்லது மருத்துவப் பதங்களை மருத்துவமனை பணியாளர்கள் உபயோகித்தால் எப்படிச் செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு மருத்துவர் “பிளாஸ்மா” (இரத்த நீர்) உபயோகிக்க தான் விரும்புவதாக கூறினால், அவர் “பிளாஸ்மா கன அளவை விரிவாக்குதலை”ப் பற்றி குறிப்பிடுகிறார் என்ற முடிவுக்கு கபடமற்று நீங்கள் வரலாம், ஆனால் அது அப்படியில்லை. ஒத்துக்கொள்வதற்கு முன் கேளுங்கள்: “அது இரத்தத்தில் அடங்கிய பகுதியா?” அவர் மேற்கொள்ளும் ஏதாவது முறையைப் பற்றி கேளுங்கள்: “அந்த சிகிச்சை இரத்தப் பொருட்கள் உபயோகிப்பதை உட்படுத்துமா?” அவர் பயன்படுத்த விரும்பும் ஏதோவொரு கருவியைப் பற்றி அவர் விவரித்தால், கேளுங்கள்: “இந்தக் கருவியை உபயோகிக்கும் சமயத்தில் என் இரத்தம் எந்தச் சமயத்திலாவது சேமித்து வைக்கப்பட்டிருக்குமா:”
22. மேலே உள்ளவற்றை எல்லாம் செய்துவிட்ட பின்பும், உங்களுடைய நிலைநிற்கைக்கு இன்னும் ஒத்துழைப்பு இல்லாவிடில் அல்லது எதிர்ப்பும்கூட இருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உதவிக்காக கேட்பதற்கு தயங்காதீர்கள். சிலர் உதவிக்காக நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் உயிரையே அபாய நிலையில் வைத்திருக்கின்றனர்.
தேவையான நேரத்தில் மதிப்பு வாய்ந்த உதவி
23. தேவையான உதவியைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பின்வரும் முறையை கவனியுங்கள்: (1) நீங்களோ அல்லது நீங்கள் நேசிப்பவரோ தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அவசர அறுவை மருத்துவத்தை எதிர்ப்பட்டால், மருத்துவமனை இரத்தம் உபயோகிக்க விரும்புவதால் எதிர்ப்பு இருக்கும்போது; அல்லது (2) உங்களுடைய மருத்துவ நிலையோ அல்லது நீங்கள் நேசிப்பவருடைய நிலையோ கவலைக்கிடமாக படுமோசமானால்; அல்லது (3) ஒரு பிள்ளையின் (அல்லது ஓர் ஆள்) விஷயமாக மருத்துவர், நர்ஸ் அல்லது நிர்வாகி ஒரு வழக்குமன்ற ஆணையை பெறப்போவதாகக் கூறினால், பின்னர்:
24. நீங்கள் ஏற்கெனவே இதைச் செய்யாவிடில், உங்கள் உள்ளூர் மூப்பர்களை அழையுங்கள். (இரத்தத்தின் பேரில் நம் நிலைநிற்கையின் காரணமாக, ஆரோக்கிய நலன் வசதிக்காக நாம் எப்போதாவது செல்ல வேண்டுமென்றால் அதைக் குறித்து நம் மூப்பர்களை விழிப்பாக இருக்கச் செய்வது ஞானமான காரியமாகும்.) அடுத்து, தேவை என நினைத்தால், லோனாவலா கிளைக்காரியாலயத்தில் உள்ள மருத்துவமனை தகவல் சேவைகளை மூப்பர்கள் அழைப்பார்கள்.—ஏசா. 32:1, 2.
25. மருத்துவமனை தகவல் சேவைகள் நீங்கள் இருக்கும் இடத்திலுள்ள ஒத்துழைக்கும் மருத்துவரை ஒருவேளை அறிந்திருக்கலாம். அல்லது உங்களுக்கு அருகாமையில் உள்ள அப்படிப்பட்ட மருத்துவரோடு நீங்கள் தொடர்பு கொள்ளும்படி செய்யலாம். கிடைக்கக்கூடிய மாற்று இரத்தமற்ற மருத்துவ சிகிச்சைமுறைகளை அவர்கள் சிபாரிசு செய்யலாம். இந்தச் சகோதரர்கள் உங்களுக்காக தீர்மானங்களைச் செய்ய முடியாது. ஆனால் அவ்வப்போது விஷயங்களின் பேரில் சங்கத்தின் நோக்குநிலையை சிந்திக்க அவர்கள் உங்களுக்கு உதவலாம். மேலும் மருத்துவரீதியிலும் சட்டப்பூர்வமாகவும் நீங்கள் தேர்ந்தெடுப்பைச் செய்ய உங்களை விழிப்புடன் இருக்கச் செய்யலாம்.
26. மருத்துவக் குழு ஒத்துழைப்பதற்கு இன்னும் மனமில்லாதிருந்தால், மருத்துவமனை அதிகாரியிடம் உங்கள் விருப்பங்களை மதிக்கும் பணியாளர்களை பதிலீடு செய்வதைப் பற்றி பேசலாம். அந்த நிர்வாகி அதைச் செய்வதற்கு தயங்கினால், மற்றொரு அறுவை மருத்துவர் இன்னொரு இடத்தில் கிடைத்து, நீங்கள் மாறிக்கொள்ளலாம் என்ற நிச்சயம் இருந்தால் மட்டுமே நிர்வாகியிடம் ஒத்துழைக்காத மருத்துவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, உங்களுக்கு சிகிச்சையளிப்பதிலிருந்து அவர்களை நீங்கள் விலக்கிவிடுகிறீர்கள் என்று தேதியிட்டு, கையோப்பமிட்ட எழுத்துமூலமாய் தெரிவித்த கூற்றைக் கொடுக்கலாம்.
27. அதை நீங்கள் செய்யலாமா? ஆம், உங்களுக்கு உரிமையிருக்கிறது. இந்த விஷயம் பின்பு நீதிபதிக்கு முன்வருமேயானால், நீங்கள் எழுத்துமூலமாய் தெரிவித்துள்ள கூற்று உங்கள் விருப்பங்களை மதித்துணருவதில் அதிகம் உதவி செய்யும். மற்ற அறுவை மருத்துவர்கள் முன்வந்து அவர்களுடைய சேவைகளை உங்களுக்கு அளிக்க இது நன்னெறி சார்ந்த வகையில் வழியைத் திறக்கும். அதிமுக்கியமாக, உங்களுடைய நிலைமை அபாயகரமாக படுமோசமாவதற்கு முன்பு இது உங்களுக்குத் தேவையான மருத்துவ கவனத்தைக் கொடுக்க உதவும். மிதமிஞ்சிய நேரம் காத்திருக்காதீர்கள்!
28. ஆரோக்கிய காப்பீடு பெறும்படியாக நாங்கள் எவருக்கும் சொல்ல முடியாது. என்றபோதிலும், போதுமான அல்லது எந்த மருத்துவத்தொகை அடக்கம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்க, சாதாரணமாக ஒத்துழைக்கும் மருத்துவரை கண்டுபிடிப்பதில் அடிக்கடி எங்களுக்கு வினைமையான பிரச்னைகள் இருந்திருக்கிறது என்பதை நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தேவைப்படும் சமயத்தில் சீக்கிரத்தில் கண்டு பிடிக்கும்படியான இடத்தில் இந்தத் தகவலை வையுங்கள்
இரத்தமேற்றுதல் பயமுறுத்தப்படும் அளவுக்கு எந்த மருத்துவ நிலையோ படுமோசமானால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பெட்டியைக் கவனிக்கவும்:
1. உங்களுக்கு உதவிசெய்ய உங்கள் சபையில் இருக்கும் மூப்பர்களை அழையுங்கள்.
2. தேவைப்பட்டால் லோனாவலா கிளைக் காரியாலயத்தில் இருக்கும் மருத்துவமனை தகவல் சேவைகளை மூப்பர்கள் அழைக்கும்படியாக செய்யுங்கள்.
3. மருத்துவர்களிடமும் மற்றவர்களிடமும் பேசுவதற்கு மூப்பர்கள் உங்களுக்கு உதவலாம்.
4. மாற்றுவகையான மருந்துகளுக்காக தற்போதுள்ள அறுவை மருத்துவர்களோடு ஆலோசிக்க மற்ற மருத்துவர்களுடன் தொடர்புகொள்ள மூப்பர்கள் உங்களுக்கு உதவலாம்.
5. தேவையான சிகிச்சைக்காக அதிகமாக மதிக்கும் மருத்து வசதிக்கு உங்களை மாற்றுவதற்கும் மூப்பர்கள் உங்களுக்கு உதவியளிக்கலாம்.
கவனிக்க வேண்டிய ஒருதிசைச் சார்பான கேள்விகள்
29. மருத்துவர்களும் மற்றவர்களும் கேட்கும் பொதுவாய் நல்ல நோக்கமற்ற கேள்விகள் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மருத்துவர்களாலும் (சில நீதிபதிகளாலும்) அடிக்கடி கேட்கப்படும் ஒன்று:
“‘உயிரைக் காக்கும் இரத்தமேற்றுதலை’ ஏற்றுக்கொள்வதைவிட நீங்கள் சாக விரும்புகிறீர்களா? (உங்கள் பிள்ளை சாகும்படி விடுவீர்களா?)”
30. நீங்கள் ஆம் என்று சொன்னால், அது மதக் கருத்தில் சரியானதாக இருக்கும். ஆனால் அந்தப் பதில் அநேக தடவைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டும், சில சமயங்களில் எதிரான வழக்குமன்ற தீர்மானங்களிலும் விளைவடைந்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நீங்கள் ஊழியத்தில் இல்லை என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். மாறாக தேவையான மருத்துவ சிகிச்சைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். ஆகையால், கேட்போருக்கு மருத்துவ அல்லது சட்டம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்றவாறு பதிலை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்.—சங். 39:1; கொலோ. 4:5, 6.
31. ஒரு மருத்துவர், ஒரு நீதிபதி அல்லது ஒரு மருத்துவ நிர்வாகி ஆகியோருக்கு “ஆம்” என்ற பதில் நீங்கள் ஒரு மதத் தியாகியாக இருக்க விரும்புகிறீர்கள் அல்லது உங்கள் விசுவாசத்திற்காக உங்கள் பிள்ளையை பலிகொடுக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தப்படுத்தக்கூடும். உயிர்த்தெழுதலில் உங்கள் பலமான விசுவாசத்தைப் பற்றி இந்தச் சூழ்நிலையில் அவர்களிடம் சொல்வது பொதுவாக உதவியாக இருக்காது. உயிர் ஆபத்தில் இருக்கையில், பகுத்தறிவுக்கொத்த தீர்மானங்களைச் செய்யமுடியாத மதவெறியர் என்று அவர்கள் உங்களை குற்றஞ்சாட்டலாம். பிள்ளைகள் விஷயத்தில், “உயிரைக் காக்கும்” மருத்துவ சிகிச்சை என அழைக்கப்படும் ஒன்றை வேண்டாமென மறுக்கும் புறக்கணிக்கும் பெற்றோராக உங்களைக் காண்பர்.
32. ஆனால் நீங்கள் மருத்துவ சிகிச்சையையே மறுப்பதில்லை. வெறுமென என்ன விதமான சிகிச்சை என்பதில் தான் உங்கள் மருத்துவரோடு கருத்து வித்தியாசப்படுகிறீர்கள். இந்த நிலை நிற்கை அநேகமாக அவர்களுக்கும் உங்களுக்கும் முழு காட்சியையும் மாற்றும். அது மட்டுமின்றி, இரத்தம் பாதுகாப்பானது என்றும் மேலும் அது ஒன்றுமட்டும் தான் “உயிரைக் காக்கும்” சிகிச்சை என்றும் தோற்றமளிக்கச் செய்வது அவர்கள் கொடுக்கும் தவறான வழிநடத்துதல். (இரத்தம் எவ்வாறு உங்கள் உயிரை பாதுகாக்கக்கூடும்? பக்கங்கள் 7-22-ஐ பாருங்கள்.) ஆகையால் நீங்கள் அந்தக் குறிப்பை வெகு தெளிவாக ஆக்கவேண்டும். அதை நீங்கள் எவ்வாறு செய்யலாம்? நீங்கள் இவ்வாறு பதிலளிக்கலாம்:
“நான் (என் பிள்ளை) சாகவிரும்புவதில்லை. நான் (என் பிள்ளை) சாக விரும்பினால், நான் வீட்டிலேயே இருந்திருப்பேன். நான் (என் பிள்ளை) உயிரோடிருப்பதற்காக மருத்துவ சிகிச்சை பெற இங்கு வந்தேன். எனக்கு (என் பிள்ளைக்கு) இன்னொருவகையான இரத்தமற்ற மாற்று மருத்துவ கையாளுமுறையைதான் நான் விரும்புகிறேன். இரத்தத்திற்கு பதில் உபயோகிக்கப்படக்கூடியவைகள் இருக்கின்றன.”
33. மருத்துவர்களோ அல்லது நீதிபதிகளோ அடிக்கடி கேட்ட பிற கேள்விகள்:
“வழக்குமன்ற ஆணையால் கட்டாயப்படுத்தி, இரத்தமேற்றப்பட்டதால் உங்களுக்கு என்ன நேரிடும்? நீங்கள் அதற்கு பொறுப்பாளியாகக் கருதப்படுவீர்களா?
“இரத்தமேற்றுதலை ஏற்றுக்கொள்வது அல்லது உங்கள் மீது வற்புறுத்தி ஏற்றப்பட்டது உங்களை உங்கள் மதத்திலிருந்து வெளியேற்றிவிடுமா அல்லது நித்திய ஜீவன் மறுக்கப்படும்படி செய்யுமா? உங்கள் சபையால் நீங்கள் எவ்வாறு நோக்கப்படுவீர்கள்?”
34. ஒரு சகோதரி ஒரு நீதிபதியிடம் பதிலளித்தாள்: இப்படிப்பட்ட நிலைமையில் அவர் எடுத்த தீர்மானத்திற்கு தான் பொறுப்பாளியில்லை என்று. ஒரு நோக்குநிலையிலிருந்து காண்கையில் அது சரியாக இருந்தாலும், அவள் அதற்குப் பொறுப்பாளி இல்லாததினால் தான் அந்த உத்தரவாதத்தை அவளுக்காக எடுத்துக்கொள்ள முடியும் என்ற அர்த்தத்தில் அந்த நீதிபதி இதை புரிந்துகொண்டார். இரத்தமேற்றுதலை கொடுக்க அவர் ஆணையிட்டார்.
35. இப்பேர்ப்பட்ட கேள்விகளைக் கேட்பதன் மூலம், சிலர் நீங்கள் இரத்தம் ஏற்றிக் கொள்ள மறுப்பதை சுற்றி வளைத்து வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கவனக்குறைவினால் அதை நீங்கள் அவர்களுக்குக் கொடுத்துவிடாதீர்கள்! ஆகையால் நாம் எவ்வாறு அந்தத் தவறான புரிந்து கொள்ளுதலை தவிர்க்கலாம்? நீங்கள் இவ்வாறு பதிலளிக்கலாம்:
“எந்த வழியிலாவது இரத்தம் என் மீது வற்புறுத்தப்பட்டால், கற்பழிக்கப்பட்டதைப் போன்றே அது எனக்கு இருக்கும். என் மீது வற்புறுத்தப்பட்டதால், கற்பழிக்கப்பட்டதைப் போன்றே அது எனக்கு இருக்கும். என் மீது நான் விரும்பாத அந்த தாக்குதலினால் ஏற்படும் உணர்ச்சி மற்றும் ஆவிக்குரிய சம்பந்தமான விளைவுகளினால் என் வாழ்க்கையின் மீதமுள்ள காலமெல்லாம் நான் அவதியுறுவேன். என் இணக்கமின்றி என் உடலைக் கெடுப்பதை என் எல்லாப் பலத்தைக் கொண்டும் நான் எதிர்ப்பேன். கற்பழிப்பு வழக்கில் செய்வதைப் போலவே என்னைத் தாக்கினவர்களுக்கு எதிராக குற்ற வழக்குத் தொடர்வதற்கு எல்லா முயற்சிகளும் எடுப்பேன்.”
36. வற்புறுத்தப்பட்ட இரத்தமேற்றுதலை நம் உடல்களை வெறுக்கத்தக்க விதத்தில் கெடுப்பதற்கு சமயமாய் நாம் கருதுகிறோம் என்ற பலமான தெளிவான பதிவை ஏற்படுத்த வேண்டும். இது ஒரு சாதாரண விஷயமல்ல, ஆகையால் உங்கள் நிலைநிற்கையில் உறுதியாய் நில்லுங்கள். மாற்றுவகையான இரத்தமற்ற மருத்துவம் கையாளப்பட வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை தெளிவாக்குங்கள்.
தயாராக இருப்பதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
37. தேவையில்லாத இரத்தமேற்றுதலிலிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்களை நாங்கள் விமர்சித்தோம். (குழந்தைகளும் பிள்ளைகளும் இரத்தமேற்றிக் கொள்ள பயமுறுத்தப்படும்போது எழும் பிரச்னைகளைக் கையாளுவதைப் பற்றி அதிகமான விவரம் பின்னர் கொடுக்க நாங்கள் நம்புகிறோம்.) தேவையான சமயத்தில் உதவியளிப்பதற்காக சங்கம் அன்பாக அன்பாக என்ன செய்திருக்கிறது என்பதையும் நாம் பார்த்தோம். விசுவாசத்திற்கு சவாலாயிருக்கும் ஒரு மருத்துவநிலையை எதிர்ப்பட நீங்கள் தயாராயிருக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள இந்தத் தகவலைக் கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலாவது: குடும்பமாய் கலந்தாலோசியுங்கள், விசேஷமாக ஓர் அவசர நெருக்கடி சமயத்தில் நீங்கள் என்ன சொல்வீர்கள், என்ன செய்வீர்கள் என்பதைத் தயாரிக்க இவ்விஷயங்களை ஒத்திகை பார்க்கவும்.
அடுத்து: உங்களுக்குத் தேவையான எல்லாப் பத்திரங்களும் உங்களிடம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு: ‘இரத்தத்திற்கு தொடர்ந்து விலகியிருக்க’ உங்களுடைய உறுதியான தீர்மானத்தை ஆதரிக்க யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபியுங்கள். இரத்தத்தின்பேரில் அவருடைய கட்டளைக்கு கீழ்படிதல் முடிவில்லா ஜீவனைப் பெற அவருடைய தயவை நமக்கு நிச்சயப்படுத்தும்.—அப். 15:29; நீதி 27:11,12.