உலகத்தைக் கவனித்தல்
பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள்
ஐக்கிய நாடுகளின் ஒரு வெளியீடு, ஐ.நா. கிரானிக்கில் கூறுகிறது, “உலகிலேயே, ஏழ்மையான கிராமியப் பெண்கள்தான் மிகவும் அதிகமாக வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள்.” “அவர்கள் ஆண்களைப் பார்க்கிலும் அதிக நோய்வாய்ப்பட்டவர்களாயும், படிப்பறிவில்லாதவர்களாயும் இருக்கிறார்கள், மேலும் தங்களைத் தாங்களே முன்னேற்றுவிக்க ஆண்களுக்குள்ள வாய்ப்புகளை அவர்கள் பெறாதவர்களாக இருக்கிறார்கள்.” ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP), உலக வங்கி ஆகிய இரண்டு சர்வதேச வளர்ச்சி கழகங்களும் 1990-ல் உலக வறுமை நிலைமையைப்பற்றி செய்யப்பட்ட இரண்டு பெரிய ஆராய்ச்சிகள் அந்த இருண்ட முடிவிற்கே வந்தன. ஐ.நா. கிரானிக்கல் அறிக்கையிடுவதாவது, “ஒவ்வொரு வருடமும், ஏறக்குறைய ஐந்து லட்சம் பெண்கள், வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள 99 சதவிகிதமான பெண்கள் மகப்பேறின்போது மரிக்கிறார்கள்.” (g91 1/8)
சுற்றுப்புற உறுதிமொழி
“மனிதர்களாகிய நாமே நமக்கு ஓர் அபாயமாக ஆகியிருக்கிறோம். நாம் சரியான சமயத்தில் செயல்பட வேண்டும்.” அந்த அச்சுறுத்தும் வார்த்தைகள், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, மேலும் வட மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள 22 நாடுகளிலிருந்து வந்த பல்கலைக்கழக முதல்வர்கள் எடுத்த ஒரு சுற்றுப்புற உறுதிமொழியின் ஒரு பகுதியாகும். கடந்த காலத்தில் இருந்ததைப் பார்க்கிலும், தங்கள் பள்ளிகளில் சுற்றுப்புற காரியங்களைப்பற்றி அதிகமாக கற்பிக்கச் செய்வதென்றும், மேலும் சுற்றுப்புறம் பற்றிய ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி வள ஆதாரங்களை அதிகரிப்பதாகவும் அவர்கள் உறுதிமொழி கூறினார்கள். கடந்த அக்டோபரில், பிரான்ஸிலுள்ள டாலுவார்ஸில், ஒரு மாநாட்டில் கூடிய அதிகாரிகளுங்கூட “ஒரு சுற்றுப்புறத்தால் ஆதரிக்கப்பட்ட எதிர்காலத்திற்கான” பொதுவான இலக்குகளை அறிவித்தார்கள். (g91 1/8)
புகைபிடிப்பவர்களுக்கு கெட்ட செய்தி
“புகைபிடித்தலை நிறுத்துவதால் வரும் ஆரோக்கியகரமான நன்மைகள்: தலைமை அறுவை நிபுணரின் அறிக்கை, 1990” என்ற அறிக்கையை செப்டம்பர் 25, 1990-ல், ஐக்கிய மாநாடுகளிலுள்ள நோயை கட்டுப்படுத்தும் மையங்கள் வெளியிட்டன. அடையப்பெற்ற சில முக்கியமான முடிவுகளாவன: “1) புகைபிடித்தலை நிறுத்துவது எல்லா வயதைச் சேர்ந்த ஆட்களுக்கும் பெரிய அளவிலும் உடனடியாகவும் ஆரோக்கியகரமான நன்மை அளிக்கிறது . . . ; 2) தொடர்ந்து புகைபிடிப்பவர்களை விட முந்தி புகைபிடிப்பவர்களாக இருந்தவர்கள் அதிக காலம் வாழ்கிறார்கள்; 3) புகைபிடித்தலை நிறுத்துவது நுரையீரல் மற்றும் இதர புற்று நோய்கள், மாரடைப்பு, இரத்த நாள வெடிப்பால் வரும் திடீர் தாக்குதல் மேலும் நாள்பட்ட நுரையீரல் நோய் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கிறது.” (g91 1/8)
மூளைக்குத் தேவையான தூக்கம்
நமக்கு ஏன் தூக்கம் தேவைப்படுகிறது? பிரான்ஸிலுள்ள ஸ்ட்ராஸ்போர்கில் அண்மையில் நடந்த மாநாட்டில், ஒரு மாறுபட்ட கருத்தைக் கொண்ட ஊக்கக் கோட்பாடு அளிக்கப்பட்டது. ஒரு நாளின் உழைப்புகளிலிருந்து தூக்கத்தின் மூலம் புத்துயிர் பெறும் மூளையைப் பார்க்கிலும் உடலிற்கு தூக்கமானது சிறிது நன்மையே அளிக்கிறது என்று சொல்லப்பட்டது. “பல நாட்கள் தூக்கமில்லாமல் போனப் பிறகுங்கூட மனித உடல் சம்பந்தப்பட்ட வேலைகள் நடைமுறையளவில் தடையின்றி தொடர்ந்து நடக்கையில், மூளையோ வேறுபட்டிருக்கிறது” என்று பரிசோதனைகள் காட்டுவதாக தி ஜெட் (ஆங்கிலம்) அறிக்கை செய்கிறது. பரிசோதனைக்குட்பட்டவர்களில் சிலர் தூக்கத்தை இழக்க நேரிட்டபோது, ஜனங்கள் “கவனக் குறைவாலும் ஒரு காரியத்தைப்பற்றி மனதை ஒருமுகப்படுத்த இயலாமையினாலும், குறைந்த ஞாபகசக்தியாலும், மெதுவாக சிந்திப்பதாலும், ஒரு கருத்து மனதில் பதிந்து நீடித்திருக்கும் பிரச்னையாலும்” பாதிக்கப்பட்டார்கள். (g91 1/8)
பாபிலோன் திரும்பக்கட்டப்படுதல் தடைசெய்யப்பட்டது
தொங்கும் தோட்டங்களையுடைய நேபுகாத்நேச்சார் அரசரின் பிரபலமான பட்டணமாகிய பூர்வீக பாபிலோன் 2,500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் வெற்றிபெற்றவர்களின் தாக்குதலின் கீழ் வீழ்ந்தது. சுமார் பொ.ச. நான்காம் நூற்றாண்டில் முழுமையாக பாழடையும்வரை, மிகவும் சிறிய அளவில் ஒரு பாபிலோன் இருந்துவந்தது. அதனுடைய பூர்வீகப் புகழிற்கு இணையாக, ராஜரீக வலிமையின் அந்த முன்னாள் அரணை மறுபடியும் கட்டியமைக்க நவீன நாளைய ஈராக் சமீபத்தில் திட்டமிட்டது. ஆனால் தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, மத்திய கிழக்கில் நடந்த சமீப காலத்திய அரசியல் சம்பவங்கள் கட்டியமைக்கும் திட்டங்கள் மீது ஒரு தடையை கொண்டு வந்திருக்கின்றன. பாபிலோனின் முடிவைப்பற்றிய ஓர் அக்கறை தூண்டும் தீர்க்கதரிசனமானது ஏசாயா 13:19, 20-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது சொல்வதாவது, “இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை.” (g91 1/8)