இளைஞர் கேட்கின்றனர்
சூதாட்டம் உண்மையில் அவ்வளவு கேடுள்ளதா?
பன்னிரண்டு வயது ஆன்ட்ருவும் பத்து வயது ஜூலியனும் இறுதியில் தங்களுடைய பெற்றோரின் பார்வையிலிருந்து மறைந்தனர். அவர்களின் குடும்பம் ஒரு படகு சுற்றுலாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது, மேலும் இந்தப் பையன்கள் படகில் இருந்த அநேக சூதாட்ட இயந்திரங்களினால் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய ஆர்வத்தைக் கண்டு, தங்களுக்குத்தாங்களே இயந்திரங்களை இயக்கிப் பார்க்கும்படியாக ஓர் ஆட்டமுறையாள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாணயத்தைக் கொடுத்தார். பிரச்னை? அவர்கள் அந்த இயந்திரங்களுக்கு அருகில் செல்லக்கூடாது என அவர்களுடைய பெற்றோர் தடையுத்தரவு போட்டிருந்தனர்.
இருந்தபோதிலும் ஆன்ட்ருவும் ஜூலியனும் பெற்றோரால் பிடிபடும் ஆபத்தை எதிர்ப்பட தீர்மானித்தனர். பெற்றோரின் எச்சரிக்கை காதுகளில் ரீங்காரமிட்டபோதிலும், அவர்கள் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி சூதாடினர்—அவர்களுடைய பணத்தை இரண்டு மடங்காக ஆக்கினர்! பிறகு மற்றொரு முறையும் விளையாடினர். இந்தத் தடவை வெற்றியினால் பொழிந்த அதிகமான பணத்தினால் மிகவும் திகைப்படைந்தனர்! ‘இது எவ்வாறு அவ்வளவு ஆபத்தானதாக இருக்கமுடியும்?’ என அவர்கள் நினைத்தனர். ‘பணம் சம்பாதிப்பதற்கு இது எவ்வளவு எளிதாக இருக்கிறது! சூதாட்டம் உண்மையில் அவ்வளவு கேடுள்ளதா?’
சூதாட்டம் பரவலாக இருக்கும் நாடுகளில் உள்ள அநேக இளைஞர் உணர்ந்தவிதமாகவே, ஆன்ட்ருவும் ஜூலியனும் இதில் அவ்வளவு கேடில்லாததாக உணர்ந்தனர். இந்த விஷயத்தில் வயதுவந்தவர்கள் சிலர் வைத்த முன்மாதிரியைப் பார்க்கும்பொழுது இதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கிறது. அநேகர் சூதாடுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய இந்தப் பழக்கத்தை நேர்மையானது என நிரூபிப்பதற்கு உண்மைபோல் தோன்றுகிற சாக்குப்போக்குகளைச் சொல்கிறார்கள். எடுத்துக்காட்டாக, லாட்டரிகளிலிருந்து வரும் இலவசமானப் பணம் நல்ல நோக்கங்களுக்கு உதவும் என்பதைச் சுட்டிக்காட்டி, சூதாட்டம் அதிகமாக நன்மையையே தருகிறது என்று சொல்கிறார்கள். (ஆனால் இது, அறநிலைக்கு ஒரு போதமருந்து வியாபாரியின் நன்கொடை, அவனுடைய போதமருந்து தொழிலை நேர்மை என நிரூபிக்கிறது என்று வாதாடுவதைக் காட்டிலும் வேறெந்த அர்த்தத்தையும் கொடுப்பதாயில்லை!) இன்னும் மற்றவர்கள் சூதாட்டம், வாழ்க்கைக்கு ஒரு புத்துயிரளிக்கக்கூடிய கேடுவிளைவிக்காத வேடிக்கை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு என வாதாடுகின்றனர்.
எப்படியானாலும், பிரிட்டன் மற்றும் ஐயர்லாந்து நாடுகளில், மற்ற நாடுகளைப் போலவே, ஆயிரக்கணக்கான இளைஞர் சூதாடிகளாக ஆகியிருக்கிறார்கள். மேலும் குறைவான முயற்சியில் அதிகமான பணம் சம்பாதிக்கும் எண்ணம் உனக்கு ஒருவேளை மிகவும் கவர்ச்சியூட்டுவதாக இருக்கும்.
சூதாட்டம்—மறைந்திருக்கும் ஆபத்துக்கள்
எனினும் இளைஞருக்கு சில மெய்யான ஆபத்துக்களைச் சூதாட்டம் எழுப்புகிறது. அறிக்கைகள் “சூதாட்ட வியாபாரிகளைப்” பற்றியும் “சூதாட்டம் கொண்டுவரக்கூடிய பயங்கரங்கள், கேடுவிளைவிக்காத விளையாட்டு வெறியாகும்போது அது ஒரு நபரை நடைபிணமாக மாற்றிவிடும்” என்பதைப் பற்றியும் பேசுகிறது. தி பஸ் (The Buzz) (ஒரு பிரிட்டிஷ் தொலக்காட்சி மெய்விளக்கத் திரைப்படம்) சொல்கிற பிரகாரம், சூதாட்டம் பிள்ளைகளின் மத்தியில் “பள்ளிக்கு மட்டம்போடுவது [பள்ளி வகுப்புகளைத் தவிர்ப்பது], வன்முறை, வலிந்து பறித்தல் மற்றும் திருடு, சூதாட்ட வெறி, விபசாரம் மேலும் சில உச்சநிலைகளில், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி போன்றவற்றிற்கு வழிநடத்தக்கூடும்.” உண்மையில் இந்தச் சூதாட்டம் கேடுவிளைவிப்பதில் இவ்வளவு திறனுள்ளதாக இருக்கிறது என்பது மெய்-வாழ்க்கை அனுபவங்களினால் நிரூபிக்கப்படுகிறது.
“நான் ஏறக்குறைய பதினொன்று வயதானபோது சூதாட ஆரம்பித்தேன்,” என்று ஏடிரியன் சொல்கிறான். “நான் என் மாமா மற்றும் மாமன்மகனோடு, இயந்திரமுயல்-வேட்டைநாய் விளையாட்டுவகைப் போட்டிகளில் பணயம்வைத்து விளையாடப் போனன். ஆரம்பத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் மேலும் அடிக்கடி வெற்றியும் பெற்றேன்.” ஏடிரியனின் மீதான பாதிப்பு? அவன் விளக்குகிறான்: “பணம்பெறுவதற்காக என் தகப்பனிடம் கதைக்கட்டுவதில்—பொய்சொல்வதில்—எனக்கு எந்தவித தயக்கமும் இருந்ததில்லை, மேலும் நான் வளரிளமைப் பருவத்தை முடிக்கும் முன்பே, என்னுடைய சூதாட்டப் பழக்கத்திற்குத் தேவையான பணத்தை, என் அப்பாவின் கடையிலுள்ள கல்லாப்பெட்டியிலிருந்து திருடுவதைப் பற்றி எனக்கு எந்தவித மனவுறுத்துதலும் இருந்ததில்லை.”
ஏடிரியன் மற்றொரு விரும்பத்தகாத விளைவைச் சுட்டிக்காட்டுகிறான். அவன் சொல்கிறான்: “நீ எளிதில் சோம்பேறியாக மாறிவிடுவாய். ஏனென்றால் மிகவும் நேர்மையாக வேலைசெய்ததினால் சம்பாதித்தப் பணத்தை சூதாட்டத்தினால் வருவதாக நீ நினைக்கும் பணத்தோடு ஒப்பிடும்போது சிறுதொகையாக தோன்றக்கூடும்.”—நீதிமொழிகள் 13:4; பிரசங்கி 2:24 ஒப்பிடவும்.
ராபர்ட் (அவருடைய உண்மையானப் பெயரல்ல) பன்னிரண்டு வயதில் சூதாட ஆரம்பித்தான். இவன் இன்னும் மற்றொரு அபாயத்திற்கு நம்முடைய கவனத்தைத் திருப்புகிறான்: “நீ மூடநம்பிக்கை உள்ளவனாக மாறக்கூடும்.” அவன் விளக்கினான்: “எங்களுடைய கடையில் அப்பா சூதாட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தார். அவை எப்படி வேலைசெய்கின்றன என்பதை நான் அறிந்திருந்தேன். இருந்தபோதிலும் விளைவைப் பாதிக்க முயற்சிசெய்வதில் நான் மூடநம்பிக்கையோடு ஏதோவொரு முறையில் விசை இயக்கியை அழுத்திப்பிடித்தேன் அல்லது வெற்றிபெற்றத் தொகயைச் சில சமயம்வரை அந்தப் பணம்வெளிவரும்தட்டிலேயே விட்டுவைத்தேன். சிலர் அந்த இயந்திரங்களோடு நிஜமாகவே பேசினார்கள்.” ஆம், அநேக சூதாடிகள் மெய்மறந்தவகையில் அதிர்ஷ்ட தேவதையின் மூடத்தனமான வணக்கத்தாராக ஆனார்கள்—இந்தப் பழக்கம் கடவுளால் கண்டிக்கப்படுகிறது.—ஏசாயா 65:11.
சூதாட்ட வெறி
மற்றொரு நயவஞ்சகமான ஆபத்து சூதாட்டம் ஆரம்பத்தில் இருந்திராத ஒரு வெறித்தன்மையைப் பெற வைப்பதாகும். “16 வயதிற்குட்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோரினால் ஒவ்வொரு வருடமும் கேம்பிளர்ஸ் அனானிமஸுக்கு [தங்கள் வெறியிலிருந்து விடுபட சூதாடிகளுக்கு உதவிசெய்யும் ஓர் அமைப்புக்கு] எடுத்துச்செல்லப்படுகிறார்கள், மேலும் பிரிட்டனில் தற்போது அறிவிக்கப்பட்ட எண்ணிக்கைகளின் விகிதம் . . . வெறுமென ஒரு குத்துமதிப்பாக கருதப்படுகிறது.” (தி பஸ்) எவ்வளவு தூரத்திற்கு அவர்கள் அடிமையாகலாம்? ஓர் அறிக்கை சொன்னது: “அவர்கள் ஒருமுறை அடிமையாகிவிட்டால், பின்பு அவர்கள் வெற்றியடைந்துகொண்டிருந்தாலும் தோல்வியடைந்துகொண்டிருந்தாலும் சூதாட்டம் ஆடியே ஆகவேண்டும்.”
ஒரு பெண் சூதாடுவதற்கு ஒவ்வொரு நாளும் £90 பணத்தைச் ($140 அமெரிக்க டாலர்கள்) செலவிடுவதைப் பார்த்ததை ராபர்ட் நினைவில்கொண்டுவருகிறார். ஓர் இளம்வயது சூதாடி, துளைவிளிம்பில்-காசுபோடுவதனால்-இயங்கும்-இயந்திரம் என்று பிரிட்டனில் அழைக்கப்படுகிற ஆதாயம் தரும்-சூதாட்ட-இயந்திரங்கள் மீதான தன்னுடைய சூதாட்ட வெறியைத் தணிப்பதற்குப் பணத்தைப் பெறுவதற்காக அவ்வளவு வெறிகொண்டதன் காரணமாக, தன்னுடைய தாயையும் கொலச் செய்ய முயற்சி செய்தான்! மிகவும் சிறிய வயதிலேயே சூதாட ஆரம்பித்த பேடீ என்பவன், தன்னுடைய சூதாட்டப் பழக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் அதேவிதமான இயலாமையைக் கொண்டிருந்தான். “நான் ஒரு சூதாட்டக் குடும்பத்தில் வளர்ந்தவன்,” என்று அவன் நினைவுகூருகிறான். “நான் எதிலும் எல்லாவற்றிலும் சூதாட முடியும். நான் பெரியவனாகி திருமணம் செய்தபோது, என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு உணவளிக்க நான் பயன்படுத்தியிருக்கவேண்டிய பணத்தைச் சூதாட்டத்தில் பயன்படுத்தினேன், மேலும் இது என்னைத் தற்கொலைச் செய்யப்போகும் நிலைக்குக் கொண்டுசென்றது.”
துளைவிளிம்பு சூதாட்ட இயந்திரங்களின் வஞ்சிக்கும் திறன்
எந்த வகையான சூதாட்டமும் இதைப்போன்ற கொடிய விளைவுகளைக் கொடுக்கக்கூடும், ஆனால் இன்று இளைஞருக்கான மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று இந்தத் துளைவிளிம்பு சூதாட்ட இயந்திரமாகும். இது “இளம் சூதாடிகளைப் பொருத்தவரை இப்பொழுது கருதப்படுகிற ஒரு பெரிய பிரச்னையாக,” இருப்பதாக ஜர்னல் ஆஃப் கேம்பிளிங் பிஹேவியர், ஸ்பிரிங், 1989, என்ற பத்திரிகை சொல்கிறது. இந்த இயந்திரங்கள், மிகவும் தெளிவாக ஓராயுதமுள்ள கொள்ளைக்காரர்களாக சித்தரிக்கப்படுகின்றன, இவை “தந்திரமான மற்றும் கவர்ச்சிமிக்க இயந்திரங்கள்” என தி பஸ் சொல்கிறது. “நீங்கள் அதிகமாக விளையாடினால், இன்னும் விளையாடவேண்டும் என்று விரும்பும் சாத்தியமும் அதிகமாக இருக்கிறது.”
நீ வெல்வதைவிட இழந்துபோவதே அதிகமாக இருக்கிறது என்பதைச் சான்றுகள் ஊர்ஜிதப்படுத்தும்பொழுது, ஒரு விளையாட்டு எவ்வளவு கவர்ச்சியுள்ளதாக இருந்தபோதிலும் அதை விளையாடுவதில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? இளைஞர் இன்று (Young People Now) என்ற பத்திரிகை உங்களுடைய வெற்றியின் வாய்ப்புகளை இவ்வாறு விளக்கியது: “ஒரு சூதுவாதற்றவனுக்கு வெற்றிபெறும் வாய்ப்பைக் கொடதே,” என்பது முதுமொழி. “ஆதாயம்-தரும்-சூதாட்ட இயந்திரம் வெற்றியைக் கொடுப்பதில்லை . . . சராசரியாக ஒரு சூதாட்ட இயந்திரத்தில் நீங்கள் £10.00 போட்டீர்கள் (என்றால்), அது £7.00-ஐ வைத்துக்கொண்டு, உங்களுக்கு £3.00-ஐத் தரும்.”
மார்க் கிரிஃப்த்ஸ், இளைஞரின்மீது சூதாட்டத்தின் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர், அறிவிக்கிறார்: “ஆதாயம்தரும் சூதாட்ட இயந்திரத்திலிருந்து பணம் உண்டாக்குவதற்கு ஒரே வழி, ஓர் இயந்திரத்தைச் சொந்தமாக்கிக்கொள்வதாகும்.” இப்படிப்பட்ட வீணான நடவடிக்கையில் ஈடுபடுவது உங்களுக்குச் சரியானதாகத் தோன்றுகிறதா?
எனினும், இந்தச் சூதாட்ட இயந்திரங்கள் உங்களை மேலுமதிகமாக விளையாட்டிற்கு அடிமையாக்கும் சூழ்ச்சித்திறனோடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எப்படி? வெறுமென வெற்றிக் கோட்டை மட்டும் காண்பிக்காமல், மூன்று பயன்தரும் அடையாளங்களின் கோடுகளைக் காண்பிப்பதன் மூலம்! இளைஞர் இன்று விளக்குகிறது: “வெற்றிதரும் கோடுகளுக்கு மேலும்கீழும் உள்ள கோடுகள் விளையாடுபவர்களுக்குச் ‘சிறிதளவே தவறினர்’ என்ற ஒருவித போலி நம்பிக்கையைத் தருவதன்மூலம் அவர்களை மறுபடியும் முயற்சிசெய்யும்படித் தூண்டுகிறது.” அந்த மயிரிழையில் தவறியது என்றழைக்கப்படுகிற நிலை, இரண்டு வெற்றிகொண்டுவரும் அடையாளங்கள் மற்றும் இழக்கவைக்கும் மூன்றாவது ஆகியவை, சூதாடுபவரால் பெரும்பாலும் “வெற்றிக்கு மிக அருகாமையாகவே” நினைக்கப்படுவதால் அவர் திரும்பத்திரும்ப அடிக்கடி முயற்சிசெய்ய தூண்டப்படுகிறார்.
ஆனால் இது சூதாட்ட தொழிலின் ஒரு விசேஷித்த பண்பாகும். இழந்துவிட்டிருப்பதற்கு பதிலாக மயிரிழையில்-தவறிவிட்டீர்கள் என்று நீங்கள் உணரும்படி ஒரு போலி நம்பிக்கையைக் கொடுக்கும் விதத்தில் சூதாட்ட இயந்திரங்களையும் சூதாட்ட விளையாட்டுகளையும் உற்பத்தியாளர்கள் வடிவமைக்கிறார்கள்! நீங்கள் ஏறக்குறைய வென்றுவிட்டீர்கள்! “வெற்றிக்கு” மிக அருகில் வந்துவிட்டதாக நீங்கள் வெற்றிசெருக்கை உணர்வதினால் இது உங்களைத் தொடர்ந்து விளையாடும்படி கட்டுப்படுத்துகிறது. இதற்கும் மேலாக, மின்னுகிற விளக்குகள் மற்றும் வசீகரிக்கும் தொனிகள் மேலும் விளையாட உங்களை தூண்டிவிட்டு—தொடர்ந்து விளையாடும்படி செய்து—மற்றும் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கவும் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிற பலமான மனதைக்கவரும் அழுத்தங்களை உணர ஆரம்பிக்கிறீர்கள்.
சரியான தீர்மானத்தை எடுத்தல்
சூதாட்டவெறியர்களாக ஆவதைத் தவிர்ப்பதற்கு மிகச்சிறந்த முறை, முதலில் சூதாடுவதைத் தவிர்ப்பதாகும். இதன் எல்லாவிதமான முறையிலும், சிறிய மதிப்புள்ள பணத்தில் பந்தயமிடுவது உட்பட, அதைத் தவிர்த்திடுங்கள். பல வாழ்நாள்-நீடித்த சூதாட்ட பழக்கம், பைசாக்களில் சூதாட ஆரம்பித்தது. மேலும், சூதாட்டம் ஆடக்கூடிய வாய்ப்பு முன்வருமாயின், மத்தேயு 7:17-ல் இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட நியமத்தை நினைத்துப்பாருங்கள்: “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.”
இதை யோசித்துப் பாருங்கள்: ஜனங்களின் வாழ்க்கையில் சூதாட்டம் உண்மையில் எதை வளரச்செய்திருக்கிறது? இது ஒருவரை சந்தோஷம், சமாதானம் மற்றும் தன்னடக்கம் போன்ற கடவுளுடைய ஆவியின் கனிகளை விருத்திசெய்ய உதவுகிறதா, அல்லது விரோதங்கள், கோபங்கள் மற்றும் பேராசைகளை உருவாக்குகிறதா? (கலாத்தியர் 5:19-23) பேராசை, தேவனால் கண்டிக்கப்படுகிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். வெறும் ஒரு பேராசையானச் செயல் உன்னை அவருடைய பார்வையில் குற்றவாளியாக ஆக்கிவிடும். சூதாடிகள் கிறிஸ்தவ இளைஞருக்குப் பொருத்தமான கூட்டாளிகளாக இருக்கிறார்களா என்பதை உனக்கு நீயே கேட்டுக்கொள். (1 கொரிந்தியர் 15:33) “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்”பதை ஞாபகத்தில் வை. (1 யோவன் 5:19) சூதாட்டம் மிகத் தெளிவாகவே பிசாசாகிய சாத்தானுடைய நோக்கத்தைச் சேவிப்பதாக இல்லையா? ஆகவே, அதில் ஈடுபட்டு ஏன் வசப்படுத்தப்பட வேண்டும்?
ஐயர்லாந்தின் தேசீய லாட்டரி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது உடனே முட்டாள்களின் மீதான வரி என்று பட்டம்சூட்டி அழைக்கப்பட்டது! இது சூதாட்டத்தை ரத்தினசுருக்கமாக விவரிக்கிறது. சூதாடியின் கனவுலகிற்குள் வசீகரிக்கப்படுவதன்மூலம் அத்தியாவசியமான வளங்களைப் பறிகொடுப்பதோடு, ஒரு முட்டாள் என்றும் கருதப்பட யார்தான் விரும்புவார்? நல்லவேளையாக, ஆன்ட்ருவும் ஜூலியனும் (ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவர்கள்) சூதாட்டம் ஏமாளியின் விளையாட்டு என்பதைக் காலப்போக்கில் உணர்ந்தனர். அவர்கள் அதனுடைய அபாயங்களை தெளிவாக அறிந்து அதைத் தவிர்க்கின்றனர். “எது எப்படியானாலும்,” அவர்கள் சொல்கிறார்கள், “சூதாட்டத்தில் உங்களுடைய பணத்தை வீணாக்குவதைவிட வாழ்க்கையில் செய்வதற்கு அநேக பயனுடையக் காரியங்கள் உண்டு.” (g91 11⁄8)
[பக்கம் 26-ன் படம்]
சில்லரைப் பணத்திற்குச் சூதாடுவதும்கூட ஒருவரை அடிமைப்படுத்திவிடும்