விழித்தெழு! பத்திரிகைக்காக நன்றியுள்ளவர்களாயிருத்தல்
இந்தப் பத்திரிகையின் அநேக வாசகர்கள் பல பொருட்களின்பேரில் அவர்களுக்குக் கிடைக்கும் அறிவொளிக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். தென் பிரான்ஸ்சில் உள்ள யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒருவரும் அவருடைய மனைவியும் தாங்கள் ஒரு விழித்தெழு! பத்திரிகையைக் கொடுத்துவிட்டு வந்த ஓர் ஆளிடமிருந்து ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றனர்.
“அன்புள்ள ஐயா மற்றும் அம்மையீர்
“கூடிய எல்லா சந்தர்ப்பங்களிலும்கூட கடவுளின் தலையிடுதலைப் பார்க்க வேண்டும் என்ற நம்முடைய சிறிய விருப்பத்தைத் திருப்திப்படுத்துவதைவிட செய்வதற்குக் கடவுளுக்கு வேறு அநேக காரியங்களுண்டு என்று நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். நான் இதுபோன்ற கருத்தை ஏற்றுக்கொள்வதில்லையென்றாலும், நான் வெளியே செல்லவிருந்த சமயத்தில் நீங்கள் வந்து சேர்ந்தது வெறுமெனே ஒரு தற்செயலான நிகழ்ச்சியைவிட அதிகம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஆகஸ்ட் 8, 1990-ன் விழித்தெழு! பிரதியைப் பெறுவதற்கு மாத்திரம்தான் எனக்குச் சமயம் இருந்தது. அதைத் தவறவிட்டிருந்தால் எனவே ஒரு பெருத்த ஏமாற்றமாய் இருந்திருக்கும்!
“மனித அரசாட்சி தராசுகளில் நிறுத்தப்பட்டுள்ளது” என்ற தொடர் கட்டுரையில் இருந்த விவேகமான ஆய்வு என்னுடைய அக்கறையைக் கவர்ந்து என்னை ஆச்சரியப்படவைத்தது. அந்தத் தொடர் கட்டுரை அளிக்கப்பட்டிருந்த முறைக்கு என்னுடைய உறுதியான சம்மதத்தைத் தெரிவிக்கிறேன். . எனவே நான் இனிவருகிற விழித்தெழு! பிரதிகளைப் பெறுவதற்காக ஏற்பாடு செயயும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொடர்வரிசைக் கட்டுரையில் எதையும் தவறிவிட நான் விரும்பவில்லை.”
யெகோவாவின் சாட்சிகள் 40 லட்சத்திற்கும் அதிகமான பைபிள் மாணாக்கர்களைக் கொண்ட ஒரு சர்வதேசீய அமைப்பாகும். இவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகம், கடவுளுடைய வார்த்தை, அதன் நிறைவேற்தத்தின் போக்குப் போன்றவற்றைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளும்படி அவர்களுக்குப் போதிப்பதற்காக தங்களை அற்பணித்திருப்பவர்கள். கூடுதல் தகவல்களுக்கோ அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்புக்கோ Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India,என்ற முகவரிக்கோ அல்லது பக்கம் 5-ல் குறிப்பிட்டுள்ள பொருத்தமான விலாசத்துக்கோ எழுதுங்கள்.