உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 4/8 பக். 31
  • தப்பிச்சென்ற ஸ்டீன்பாக்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தப்பிச்சென்ற ஸ்டீன்பாக்
  • விழித்தெழு!—1993
  • இதே தகவல்
  • துப்பாக்கிகள் ஒரு மரண வழி
    விழித்தெழு!—1991
  • காலெஜியன்டுகள்—பைபிள் ஏற்படுத்திய மாற்றம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இனவெறுப்பை மேற் கொள்ளுதல்
    விழித்தெழு!—1989
  • ஆப்பிரிக்க மொழி பைபிள்களை உருவாக்குவதில் எட்டிய மைல்கற்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
விழித்தெழு!—1993
g93 4/8 பக். 31

தப்பிச்சென்ற ஸ்டீன்பாக்

தென் ஆப்பிரிக்காவிலுள்ள விழித்தெழு! நிருபர்

ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய மான் வகையைச் சேர்ந்த ஸ்டீன்பாக், இயல்புணர்ச்சியினால், சுகாதாரத்தைக் குறித்து வியக்கத்தக்க ஒரு மாதிரியை வைக்கிறது. “ஸ்டீன்பாக்கின் ஒரு தனிச்சிறப்புவாய்ந்த பண்பானது, அது தன்னுடைய கழிவை அல்லது சிறுநீரை வெளியேற்றுவதற்கு முன்பாக, முதலாவதாக தன்னுடைய முன் குளம்புகளைக் கொண்டு ஓர் இடத்தைச் சுத்தப்படுத்துகிறது. அதற்குப்பிறகு அந்த இடத்தின்மீது மண்ணைச் சுரண்டுவதன் மூலம் கவனமாக அந்தக் கழிவுகளை மூடுகிறது,” என்று வனத்தில் தென் ஆப்பிரிக்க விலங்குகள் (South African Animals in the Wild) என்ற புத்தகத்தில் பேராசிரியர் ஜான் ஸ்கின்னர் விளக்குகிறார். ஆம், இந்தச் சிறிய உயிரினம் இஸ்ரவேலின் போர்ச்சேவகர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்திற்கு அப்பால் செல்கிறது. (உபாகமம் 5:1; 23:13, 14) அதன் சிறுநீரையும் அது மூடுகிறது.

ஸ்டீன்பாக்கின் புலனறிவுள்ள கழிவறைப் பழக்கம் அதன் நேர்த்தியான தோற்றத்திற்கு பொருந்துகிறது. “எனக்கு இந்த ஸ்டீன்பாக், ஆப்பிரிக்க மான்களிலேயே கவர்ச்சிவாய்ந்ததாகவும் மிக அதிகமாக விரும்பத்தக்க ஒன்றாகவும் எப்பொழுதும் இருந்திருக்கிறது,” என்று லாரென்ஸ் வான் டெர் போஸ்ட் எழுதினார். ஆப்பிரிக்காவின் கலஹாரி பாலைவனத்திலுள்ள கடும்பசியடைந்த வேட்டுவ இனத்தவரின் ஒரு தொகுதிக்காக ஒரு ஸ்டீன்பாக்கைச் சுடுவதற்கு வான் டெர் போஸ்ட் எவ்விதமாக முயற்சி செய்தார் என்பதை வேடனின் இருதயம் (The Heart of the Hunter) என்ற தன்னுடைய புத்தகத்தில் அவர் வர்ணிக்கிறார். “அவனுடைய மெல்லிய காதுகள் என்னுடைய திசையை நோக்கி நேராக இருந்தன, அவனுடைய பெரிய கருஞ்சிவப்பு கண்கள் அகல திறந்து, முற்றிலுமாக பயமில்லாமல் இருந்தன, வாழ்க்கையின் இந்தத் தொலைதூரப் பகுதியில் அவ்வளவு வினோதமான ஒரு தோற்றத்தை ஆச்சரியத்துடன் காண்கையில் சிறப்புடையதாய் இருந்தது. . . . அவன் விழிப்பூட்டப்படுவதற்கு முன்பாக அல்லது அவனுடைய சாதுவான தோற்றம், இந்த மென்மையான உயிரினத்தைச் சுடுவதற்கான என்னுடைய ஆசையைப் பலவீனப்படுத்துவதற்கு முன்பாக நான் விரைவில் சுட்டேன். அவ்வளவு குறுகிய ஒரு தூரத்தில் என்னுடைய குறியைத் தவறவிடுவேன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் நான் என்னுடைய குறியைத் தவறவிட்டேன். என்னுடைய கனத்த துப்பாக்கியிலிருந்து வந்த வெடிப்போசையின் அதிர்ச்சி, அவனுடைய செவிகளின் கூரிய கூச்சுணர்வைத் தவிர்ப்பதற்கு அந்தச் சிறிய மான் மென்மையான தலையைப் பலமாக அசைக்கத்தான் செய்தது,” என்பதாக இந்த ஆய்வுப்பயணி எழுதினார்.

அநேக வெடிகுண்டுகளுக்குப் பிறகு, மனித கூட்டுறவு ஆபத்தானது என்று அந்தச் சிறிய மான் எண்ணி தப்பினது. தேவையான ஓர் உணவை இழந்தபோதிலும், வான் டெர் போஸ்ட்-ன் பசியுள்ள வேட்டுவ இனத் தோழர்கள் மகிழ்வூட்டப்பட்டார்கள். ஏன்? ஸ்டீன்பாக்கினுடைய பழக்கவழக்கங்களுக்காக வேட்டுவ இனத்தவர் அதிக மரியாதையுடையவர்களாக இருந்தார்கள், இந்த ஸ்டீன்பாக், அவர்கள் நடக்கும்படி எதிர்பார்த்தபடியே நடந்தன. “நீண்ட வெப்பமான நாள் முழுவதுமாக, என்னுடைய துப்பாக்கியின் மறுபடியும் மறுபடியுமான வெடிச்சத்தத்தின் மத்தியிலும் தொந்தரவடையாமல் நின்று கொண்டிருந்த அந்தச் சாதுவான சிறிய மானின் காட்சிக்கு என்னுடைய மனது திரும்பினது,” என்று வான் டெர் போஸ்ட் தொடர்ந்து கூறுகிறார். (g93 1/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்