தனிப்பட்ட பிரதிகளை அவர்கள் விரும்பினர்
இத்தாலியிலுள்ள மிலன் லனாடெ விமானநிலையத்தில் பணிபுரிகிற யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தை தன்னுடன் வேலைக்கு எடுத்துச் சென்றார். அவருடைய உடன் வேலையாட்களில் அநேகர், இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை வரலாற்றின் பேரிலான இந்தப் பிரசுரத்தின் தனிப்பட்ட பிரதி ஒன்றை தாங்கள் பெற விரும்புவதாக சொன்னார்கள். சில நாட்களுக்குப் பின்னர், கேட்டுக்கொள்ளப்பட்ட புத்தகங்களை அந்தச் சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தபோது, பல்வேறு விமான நிறுவனங்களில் உள்ள பணியாளர்களும் அந்தப் புத்தகத்தைப் பெற விரும்புவதாகச் சொன்னதை அவருடன் வேலைசெய்பவர் ஒருவர் கூறினார். ஆகவே, அதைப் பெற விரும்புகிற அனைவருடைய பட்டியல் ஒன்றை போடும்படி அந்தச் சாட்சி அவளிடம் கேட்டார். சில நாட்களுக்குப் பின்பு அந்தப் பட்டியல் அவரிடம் கொடுக்கப்பட்டது.
கேட்டுக்கொள்ளப்பட்ட அநேக புத்தகங்கள் உடனடியாக கிடைக்கவில்லை, ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பின்பு அந்தச் சாட்சி அவற்றை பெற்றார். அவரும் அவருடைய உடன் சாட்சியும் அந்தப் பட்டியலிலுள்ள ஒவ்வொருவரையும் சந்தித்தனர். மொத்தமாக 461 புத்தகங்கள் கொடுக்கப்பட்டன! அவை விநியோகிக்கப்பட்டுவருகையில், அருகாமையில் வசிக்கிற சாட்சிகளால் 13 பேருக்கு பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கும்படி சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த 448 பக்க தடித்த அட்டையுள்ள புத்தகத்தின் பிரதி ஒன்றை நீங்கள் பெறவிரும்பினால், அல்லது இலவச வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நடத்தப்படும்படி விரும்பினால், தயவுசெய்து Watchtower, H-58, Old Khandala Road, Lonavla, 410 401, Mah., அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்ட பொருத்தமான முகவரிக்கு எழுதுங்கள்.