உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 1/8 பக். 25
  • உலகத்தின் பாகமாய் இல்லையா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தின் பாகமாய் இல்லையா?
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • சர்ச் ஏன் செல்வாக்கை இழந்து வருகிறது?
    விழித்தெழு!—1996
  • கிழக்கு ஐரோப்பா ஒரு சமய மறுமலர்ச்சி?
    விழித்தெழு!—1991
விழித்தெழு!—1995
g95 1/8 பக். 25

உலகத்தின் பாகமாய் இல்லையா?

ஜெர்மனியில் உள்ள விழித்தெழு! நிருபர்

“நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:16) இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் அரசியல் விவகாரங்களிடமாக கொண்டிருந்த முழுமையான நடுநிலைமையை இந்த வார்த்தைகளினால் விவரித்தார். கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டிக் கொள்பவர்கள் இந்தத் தராதரத்துக்குரிய பொருத்தமான தகுதிகளை உடையவர்களாய் இருக்கின்றனரா?

முன்னாள் ஜெர்மன் மக்களாட்சிக் குடியரசின் விஷயத்தில் கிறிஸ்தவமண்டலத்தின் தொடர்பைக் குறித்து பின்வரும் செய்தித்தாள் குறிப்புகளை சிந்தித்துப் பாருங்கள். அது 1990-ல் கலைக்கப்படும் வரை ஒரு கம்யூனிஸ ஆட்சியால் ஆளப்பட்டு வந்தது.

• “இப்போது ஜெர்மன் மக்களாட்சிக் குடியரசில் லூத்தரன் சர்ச் சமாதானமான புரட்சிக்குத் தாயாக சிறிது காலத்துக்கு மகிமையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், லூத்தரன் சர்ச்சின் மதிப்பைக் குறித்து பொதுமக்களின் எண்ணம் விரைவாக குறைந்து கொண்டே போவதாக தோன்றுகிறது. அது அந்த ஆட்சிக்கு தூண் போன்று ஆதரவு தருவது போல் அநேகருக்கு தோன்றுகிறது. ஸ்டாசி (மாநில பாதுகாப்பு சேவை) நடவடிக்கைகளுக்குரிய இடமாக சர்ச் இருந்தது.”—டி சிட், நவம்பர் 1991.

• “சர்ச் பணியாளர்களும் சர்ச் வட்டாரத்தில் இருப்போரும் ஸ்டாசி-யோடு தொடர்பு கொண்டிருப்பதைக் குறித்து பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த லூத்தரன் சர்ச்சுகள் குழப்பமடைந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றன.”—அஃபன்ங்கலிஷா கமன்ட்டரி, ஜனவரி 1991.

• “பாதிரிமார்கள் அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருப்பதால் முன்பு இருந்ததைப் போல் தங்கள் சபையாரிடமாக அக்கறை காண்பிப்பதில்லை போன்ற குறைகளை [லூத்தரன்] சர்ச் தலைவர்கள் கேட்கின்றனர்.”—சுட்டோய்ஷி சிட்டுன், பிப்ரவரி, 1990.

• “இரண்டு ஜெர்மன் மாநிலங்களின் அரசியல் உறவுகளில் [லூத்தரன்] சர்ச் எப்போதும் உதவியளிக்கும் பங்கை வகித்திருக்கிறது என்று [ஜெர்மன் கூட்டாட்சி குடியரசின் முன்னாள் ஜனாதிபதி] விட்செக்கர் கூறினார்.”—வெட்டர்அவுர் சிட்டுன், பிப்ரவரி 1992.

லூத்தரன் சர்ச் மட்டும் அரசியல் விவகாரங்களில் தலையிடவில்லை. “ஏறக்குறைய ஒவ்வொரு புராட்டஸ்டன்ட் சர்ச் அமைப்புக்குள்ளும் ஸ்டாசி ஏஜென்டுகள் ஊடுருவிப் பரவியிருக்கின்றனர்,” என்று தி யூரோப்பியன் அறிக்கை செய்தது. “கம்யூனிஸ அதிகாரிகளோடு ஒப்பந்த நோக்குடன் கலந்து பேசுவதில் புராட்டஸ்டன்ட் சர்ச்சின் தலைவர்” என்று மான்ஃபிரெட் ஸ்டால்பி என்பவரை தி யூரோப்பியன் விவரிக்கிறது. அவர் தன் கருத்தை ஆதரித்து பேசுபவராய் பின்வருமாறு சொன்னார்: “நான் அவ்வாறு செய்வது எங்களுடைய குறிக்கோளை முன்னேற்றுவித்திருந்தால் சாத்தானோடு கைகளைக் குலுக்கியிருப்பேன்.”

இத்தாலியில் குற்றமிழைக்கும் இரகசிய அமைப்புக்கும் குருமார்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவைக் குறித்து லண்டனின் கார்டியன் அறிக்கை செய்தது. அது குறிப்பிட்டது: “சர்ச்சும் காச நாஸ்ட்ரா என்ற குற்றமிழைக்கும் இரகசிய அமைப்பும் இவ்வளவு காலம் வரை சமாதானமாக கூடி வாழ்ந்ததனால், குற்றப் பொறுப்பில் சர்ச்சுக்குப் பங்கு உண்டு என்று சர்ச்சின் மீது அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டது.”

முன்னாள் மாநில பாதுகாப்பு குழுவோடு சில ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் பாதிரிகள் உடந்தையாயிருந்து வேலை செய்ததைக் குறித்து டோரன்டோ ஸ்டார் ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது. அந்த அறிக்கை சொல்கிறது: “கம்யூனிஸ ஆட்சியோடு சர்ச் ஒத்துழைத்ததைக் குறித்து வெளிப்படுத்தப்பட்டவை அனைத்தும் சீர்கேடான விஷயங்களைத் தெரிவிக்கின்றன . . . மாநில பாதுகாப்பு குழுவிலிருந்து வரும் செய்திகள் . . . மூத்த சர்ச் அதிகாரிகள் தங்கள் சொந்த நியமங்களுக்கு உண்மையற்றவராய் இருந்தது மட்டுமல்லாமல் வெளி நாட்டிலிருந்த மதத் தலைவர்களையும் அவமதிப்புக்கு உள்ளாக்க தயங்கவில்லை.”

கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் தொடர்ந்து அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கையில், இவ்வுலகத்தின் பாகமாயிருக்கக்கூடாது என்று இயேசு கொடுத்த கட்டளையை மெய்க் கிறிஸ்தவ மதம் கடைப்பிடித்து வருகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்