விழித்தெழு! தேர்வுக்கு அடிப்படை
தென் அமெரிக்க தேசமாகிய சூரினாமில் மாணவர்கள் ஜூலை 1993-ல் அவர்களுடைய உயர் நிலைப்பள்ளி நுழைவுத் தேர்வு சிறுபுத்தகத்தைத் திறந்தபோது, விழித்தெழு! பத்திரிகையின் ஒழுங்கான வாசகர்களுக்கு ஒரு அனுகூலமிருந்ததை அவர்கள் கண்டார்கள். இது ஏனென்றால் கல்வித்துறையின் தேர்வுக்குழு அமைச்சகம் தயாரித்திருந்த 36 பக்க சிறுபுத்தகத்தில் சுமார் பாதிக் கேள்விகள் விழித்தெழு!-வின் இரண்டு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
பக்கங்கள் 1 முதல் 9 ஜனவரி 8, 1993 விழித்தெழு!-வில் தோன்றியிருந்த “குடிசைப்பகுதி மிகுந்த நகரங்கள்—வாழ்க்கைப் போராட்டங்கள் நிறைந்த நகர்ப்புறத்தில் கொடிய காலங்கள்” கட்டுரையை முக்கியப்படுத்திக் காட்டியிருந்தது. அந்தப் பொருளின்பேரில் புரிந்துகொள்ளும் சக்தியைச் சோதனைசெய்த 21 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. தேர்வு சிறுபுத்தகத்தில் பக்கங்கள் 10 முதல் 16, ஜனவரி 8, 1993 விழித்தெழு!-வில் தோன்றிய “கேப்பிபெரே—படைப்பின் கோளாறா அல்லது அதிசயமா?” என்ற கட்டுரையின் பேரில் 14 கேள்விகளைக் கொண்டிருந்தன.
“தேசம் முழுவதிலும் வாசகத்தைப் புரிந்துகொள்ளும் மாணவர்களின் சக்தியைச் சோதிக்க இந்தக் கட்டுரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பள்ளி அதிகாரிகள் சரியான இலக்கணத்துக்கும் சுருக்கமான எழுத்துக்கும் விழித்தெழு!-வை ஒரு மாதிரியாக கருதுவதைக் காட்டுகிறார்கள்,” என்பதாக சூரினாமின் மேற்கத்திய பகுதியிலுள்ள ஒரு தலைமை ஆசிரியர் குறிப்பிட்டார்.
விழித்தெழு! பிரதி ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது இந்த விஷயத்தைக் குறித்து கலந்துபேச உங்களுடைய வீட்டுக்கு எவராவது ஒருவர் வருவதை நீங்கள் விரும்பினாலோ, தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot No A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.