“நன்றி உரை”
ஜப்பானிலுள்ள ஓர் இளம் மாணவி அதையே தெரிவிக்க விரும்பினாள். தான் வாசித்த விழித்தெழு! கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளுக்கு பள்ளியில் விசேஷித்த பரிசுகளைப் பெற்றிருந்ததாக அவள் விவரித்தாள்.
“அது வரையிலுமாக, அந்தத் தகவல்களை என் தலையில் சேமித்து வைக்காமல் அந்தப் பத்திரிகைகளை என் வீட்டில் சேமித்து வைத்திருந்தேன். அந்தப் பத்திரிகைகள் எனக்கு எவ்வளவு பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன என்பதை நான் யோசித்தபோது, ‘இந்தப் பத்திரிகைகளைத்தான் நான் வாசிக்காமல் இருந்திருக்கிறேன்,’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். வருத்த உணர்ச்சிகள் என்னை மேற்கொண்டன. அப்போதிருந்து, நான் வாசிக்க வேண்டியபடி அந்தப் பத்திரிகைகளை வாசித்து வந்திருக்கிறேன்,” என்று அவள் மேலுமாகச் சொன்னாள்.
போற்றுதலுடன், இந்த மாணவி மேலுமாக எழுதினாள்: “நான் பள்ளியில் எதிர்ப்படுகிற வெவ்வேறு சோதனைகளைக் கையாளுவதற்கு உதவுவதில் இந்தப் பத்திரிகைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட அருமையான கட்டுரைகளை எப்போதும் அளித்து வருகிறதற்காக உங்களுக்கு நன்றி. தொடர்ந்து அவற்றைப் பெறும்படி நான் எதிர்நோக்கி இருப்பேன்.”
வீட்டிலும் பள்ளியிலும் இளைஞர் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிற கட்டுரைகளை, விழித்தெழு! ஒழுங்காகப் பிரசுரித்து வருகிறது. விழித்தெழு! பிரதி ஒன்றைப் பெறவோ அல்லது உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு பைபிள் அடிப்படையான பதில்களைக் காண உங்களுக்கு உதவும்படி யாராவது ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்திக்கவோ நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35, Near Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.