‘அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தன’
பிப்ரவரி 22, 1995, விழித்தெழு!-ல் வெளிவந்த “மாதவிடாய் முடிவுறும் பருவம்—அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்,” என்ற கட்டுரைத்தொடரைப் பற்றி அ.ஐ.மா.-லுள்ள கென்டகியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் கருத்துரைக்கையில், எழுதியதாவது: “நான் சமீபத்தில் இந்தப் பொருளின் பேரில் நடந்த மூன்று மணிநேர கருத்தரங்கிற்குச் சென்றேன். இரண்டு பெரிய மருத்துவமனைகளின் கல்வி இலாக்காவால் அது நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி அதிக தகவல் நிறைந்ததாக இருந்தது, ஆனால் நான் மூன்று மணிநேரம் கருத்தரங்கில் கற்றுக்கொண்டதைவிட 30 நிமிடங்களில் விழித்தெழு!-வை வாசித்ததன்மூலம் அதிகத்தைக் கற்றுக்கொண்டேன் (அதற்காக $15 செலவும் ஆகவில்லை).”
விழித்தெழு!-வின் மற்றொரு வாசகர் குறிப்பிட்டார்: “கடந்த மூன்றாண்டுகளில் மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் பேரில் எண்ணற்ற புத்தகங்களையும் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். அதற்குப்பிறகு விடையளிக்கப்படாத கேள்விகள் எப்போதும் என் மனதில் இருந்தன. இந்தப் பொருளின் பேரிலான என்னுடைய அனைத்துக் கேள்விகளுக்கும் உங்களுடைய கட்டுரைகள் பதிலளித்தன.”
விழித்தெழு! இன்றைய பிரச்சினைகளை மேற்கொள்வதற்கு உதவும் தகவலை அதன் வாசகருக்கு அளிக்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக, சமாதானமுள்ள ஒரு புதிய உலகைப்பற்றிய சிருஷ்டிகரின் வாக்குறுதியில் நம்பிக்கையை இது வளர்க்கிறது. இந்தப் பத்திரிகையின் வெளியீட்டாளர்களான யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப்பற்றியும் நடவடிக்கைகளைப்பற்றியும் அதிகமாகக் கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால், தயவுசெய்து அவர்களுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்துடன் தொடர்புகொள்ளுங்கள், அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்ட விலாசங்களில் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஒன்றிற்கு எழுதுங்கள்.