“உலகப் பெருந்தவறுகள் ஏழு”
“உலகப் பெருந்தவறுகள் ஏழு” என்று தான் அழைத்த ஒரு பட்டியலை மோகன்தாஸ் காந்தி உருவாக்கினார் என்பதாகச் சொல்லப்படுகிறது. அவையாவன:
• உழைக்காமல் ஈட்டிய செல்வம்
• மனச்சாட்சி இல்லாத இன்பம்
• பண்பு இல்லாத அறிவு
• நல்லொழுக்கம் இல்லாத வணிகம்
• மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம்
• தியாகம் இல்லாத வணக்கம்
• அடிப்படைக்கொள்கை இல்லாத அரசியல்
அவருடைய பேரன் அருண் காந்தி, எட்டாவதாக ஒன்றைச் சேர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது:
• பொறுப்புகள் இல்லாத உரிமைகள்
இன்னும் சிலவற்றை நீங்கள் ஆலோசனையாகக் கூறலாம். ஆனால், இந்தப் பட்டியல் நிச்சயமாகவே சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கிறது. இப் ‘பெருந்தவறுகளுக்குத்’ தீர்வாக பைபிள் கூறும் பதில், இரண்டு கட்டளைகளில் அடக்கிக் கூறப்பட்டுள்ளது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், ‘உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக’ என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.”—மத்தேயு 22:37-40.
[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]
UPI/Corbis-Bettmann