“ஓர் அறிவுக் கருவூலம்”
நைஜீரியாவிலுள்ள, லாகோஸின் பத்திரிகையான தநியூஸ்-ல் வேலைசெய்யும் ஒரு மனிதர் அந்த நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு எழுதி, விழித்தெழு!-வை மேற்கண்ட வார்த்தைகளில் வர்ணித்தார். அவர் விவரித்ததாவது:
“ஒவ்வொரு சமயமும் விழித்தெழு!வின் ஒரு பிரதியை வாசிக்கும்போது, உங்களுக்கு எழுதவேண்டும் என்று நான் தூண்டப்படுகிறேன். ஆனால் அநேக சமயங்களில் நான் கடிதம் எழுத ஆரம்பிக்கும் தறுவாயில், அந்த பத்திரிகையின் இன்னொரு நல்ல, உண்மையில் மேம்பட்ட, ஒரு பிரதி வந்து மறுபடியும் என்னை மெய்மறக்கச் செய்துவிடும்.
“நான் சொல்வதன் அர்த்தம் என்ன? என்னை பொறுத்தவரையில் விழித்தெழு! ஓர் அறிவுக் கருவூலம். இவ்வளவு மதிப்புமிக்கதும், அழகானதும், சமநிலையானதும், திறம்பட்ட விதத்தில் வடிவமைக்கப்பட்டதுமான ஒரு பிரசுரத்தை நான் அதிகம் பார்த்ததில்லை. அது மனிதவர்க்கத்திற்கு ஒரு விலைமதிக்கமுடியாத பரிசு.
“என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நான் சொல்ல விரும்புவதெல்லாம்: உங்களுக்கு கோடி நன்றி. இந்த அருமையான வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.”
விழித்தெழு! வாசிப்பதனால் நீங்களும் பயனடைவீர்கள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். நீங்கள் இன்னொரு பிரதியை பெற விரும்பினால் அல்லது பைபிளைப் பற்றி உங்களுடன் கலந்துபேச ஒருவர் உங்கள் வீட்டிற்கு வர விரும்பினால், தயவுசெய்து Watch Tower, Niederselters, Am Steinfels, D-65618 Selters, Germany என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.