அவரது சந்தேகம் தீர்க்கப்பட்டது
கரிபியன் தீவான ஜமைக்காவில் வசிக்கும் ஓர் இளைஞரை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்தபோது, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதையே அவர் மிகவும் சந்தேகித்தார்; மேலும் பைபிள் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதையும்கூட அவர் மறுத்தார். இருந்தாலும், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை தயக்கத்துடன் பெற்றுக்கொண்டார். சாட்சிகள் அவரை மறுபடியுமாக பலமுறை சந்தித்தனர்; ஆனால் இறுதியில், தான் அழைக்கும்போது வந்தால் போதுமென சொல்லிவிட்டார்.
“பல மாதங்களுக்குப் பிறகு அவர் ஃபோன் செய்து அநேக கேள்விகளைக் கேட்டார். ஆனால் அப்போதும்கூட பைபிளிலிருந்து கொடுக்கப்பட்ட பதில்களை குறைகூறிக்கொண்டே இருந்தார்” என சாட்சிகள் கூறினர்.
காலப்போக்கில், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் அந்த இளைஞருக்குக் கொடுக்கப்பட்டது; மேலும் அவரோடு வாராந்தர பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. கொஞ்ச காலத்திற்குள்ளாகவே அவர் சொன்னதாவது: “இப்படிப்பட்ட ஒரு படிப்பு ஏன் அவசியம் என்பது இப்போது எனக்குப் புரிகிறது.” கற்றுக்கொண்ட காரியங்களின்பேரில் அந்தளவுக்கு ஆர்வம் அதிகரித்ததால், வாரத்திற்கு இருமுறை படிப்பு நடத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். விரைவில் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் தவறாமல் வர ஆரம்பித்தார்.
பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? புத்தகத்தையும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தையும் படிப்பதன் மூலம் லட்சக்கணக்கானோரின் விசுவாசம் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகங்களின் ஒரு பிரதியை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினாலோ உங்களோடு எவராவது வீட்டு பைபிள் படிப்பை நடத்தும்படி விரும்பினாலோ Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ 5-ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள விலாசங்களில் பொருத்தமான ஒன்றிற்கோ தயவுசெய்து எழுதுங்கள்.
[படத்திற்கான நன்றி]
பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? புத்தகத்தின் அட்டை: எஸ்தர் புத்தகத்தின் மூன்றாம் நூற்றாண்டு பப்பைரஸ் மற்றும் எபிரெய சுருள்: The Trustees of the Chester Beatty Library, Dublin; மகா அலெக்ஸாண்டரின் தலையுருவச் சிலை: Musei Capitolini, Roma