உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 2/8 பக். 32
  • ஒரு—ரஷ்ய பெண்ணின் நம்பிக்கை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு—ரஷ்ய பெண்ணின் நம்பிக்கை
  • விழித்தெழு!—1998
விழித்தெழு!—1998
g98 2/8 பக். 32

ஒரு—ரஷ்ய பெண்ணின் நம்பிக்கை

ரஷ்யாவில் உள்ள உக்டா என்ற நகரத்தில் வசிக்கும் 15 வயது பெண் நல்ல நிலைமைகள் பூமியில் வரவேண்டும் என்ற தன் மனமார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தினாள்; இந்நகரத்தின் ஜனத்தொகை 1,00,000-க்கும் அதிகம்; இது மாஸ்கோவிற்கு வடகிழக்கிலே 1,200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கீழ்க்கண்ட கடிதத்தின் மூலம் ரஷ்யாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு இதை அவள் தெரியப்படுத்தினாள்:

“என்னுடைய தோழி எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்குவதாகக் குறிப்பிட்டாள். எனக்கு உங்களுடைய புத்தகங்கள், பத்திரிகைகள், சிற்றேடுகள் ஆகியவற்றை படிப்பதற்கு ரொம்ப பிடிக்கும். எப்படி எனக்கு இந்த ஆர்வம் வந்தது என்பதை விளக்குகிறேன். ரேடியோ மற்றும் டெலிபோன் பில்களை கட்டுவதற்காக தந்தி அலுவலகத்திற்கு சென்றேன், அங்கே தரையில் ஒரு துண்டுப்பிரதியைக் கண்டெடுத்தேன். வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்? என அது தலைப்பிடப்பட்டிருந்தது. அதையெடுத்து, தூசிகளைத்தட்டி வாசிக்க ஆரம்பித்தேன்.

“ஜனங்களுக்கு இருக்கும் தொல்லைகளையும் துன்பங்களையும் பற்றி வாசித்தேன்; அந்தத் துண்டுப்பிரதியின் வெளிப்பக்கம் பரதீஸில் வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கும் என்பதைப் பற்றிய வாக்குறுதியை படமாக சித்தரித்திருந்தது. என்றோ ஒருநாள் அது வரும் என்று நம்புகிறேன். எல்லாருமே சந்தோஷமாகவும், திருப்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைக் காண உண்மையில் விரும்புகிறேன். அதோடு, இறந்த உறவினரை பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன். . . . பூமியில் பரதீஸில் வாழும் நம்பிக்கையைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதைப் பற்றிய தகவல்கள் சிலவற்றை, அல்லது புத்தகங்களை எனக்கு அனுப்பும்படி உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். அதற்கான விலையையும் தபால் செலவையும் தந்துவிடுகிறேன்.”

ஒரு பரதீஸிய பூமியில் வாழும் பைபிள் அடிப்படையிலான நம்பிக்கையைப் பெற உங்களுக்கு உதவும் புத்தகங்களை நீங்களும் பெற்றுக்கொள்ள முடியும். கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பினால் அல்லது யாராவது ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்து இலவசமாக பைபிள் படிப்பு நடத்த விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India என்ற விலாசத்திற்கோ அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்