பக்கம் இரண்டு
பயத்தை அடக்கி ஆளலாம் 3-11
சில பொருட்களைப் பார்த்து, சில நிகழ்ச்சிகளை நினைத்து அளவுக்குமீறி அச்சம் கொள்வதே ஃபோபியா (Phobia). இந்நோய் லட்சக்கணக்கான மக்களை படாதபாடு படுத்துகிறது. ஆனாலும் அவர்களால் பயத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
கருந்துளைகள்—விஞ்ஞானிகள் உண்மையில் கண்டுபிடித்துவிட்டார்களா? 14
ஒரு காலத்தில் பிரகாசமான நட்சத்திரங்களாக இருந்து, மறைந்து போய், அவற்றின் காந்த சக்தியாலேயே நசுக்கப்பட்டு ஒன்றுமில்லாமை என்ற நிலைக்குப்போன நட்சத்திரங்கள் இருக்கின்றனவா?
என்னால் ஏன் கவனம் செலுத்த முடியவில்லை? 18
கவனத்தை ஒருமுகப்படுத்துவது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? அப்படியென்றால் அதைக்குறித்து நீங்கள் என்ன செய்யலாம்?