‘கொந்தளிக்கும் கடலிலிருந்து கரை சேர்க்கும் ஓடம்’
இவ்விதம்தான் காவற்கோபுர பத்திரிகையைப் பற்றி யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த ஈகார் என்ற 22 வயது இளைஞர் விவரித்தார். சென்ற வருடம் அவருடைய கடிதத்தில் இவ்விதம் குறிப்பிட்டிருந்தார்:
“நான் காவற்கோபுர பத்திரிகையை சில மாதங்களுக்கு முன்புதான் வாசிக்க ஆரம்பித்தேன். புதிய பத்திரிகைகளை மட்டுமல்ல, 1991-ஆம் ஆண்டு முதற்கொண்டு வெளிவந்திருக்கும் பத்திரிகைகளையும் படித்துவருகிறேன். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, கொந்தளிக்கும் கடலைப் போன்ற இவ்வுலகில் அவை கரை சேர்க்கும் ஓடங்களாக இருக்கின்றன.
“மிஷனரிகளை பற்றி நீங்கள் வெளியிட்ட கட்டுரைகள் என் மனதைக் கவர்ந்தன. அதன் காரணமாகவே இக்கடிதத்தை எழுதுகிறேன். முதலாவது, நான் ஒரு யெகோவாவின் சாட்சி ஆக முடியுமா என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நான் ஒரு கத்தோலிக்கன் என்பதைக் குறிப்பிடவேண்டும்; ஆனால் உங்கள் மதம் மற்ற எல்லா மதங்களைவிட சிறந்தது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் வேறு எந்த மதமும் இவ்வளவு சிரமமெடுத்து தேவனுடைய வார்த்தையை பரப்புவது கிடையாது.
“நான் கத்தோலிக்கனாக இருப்பது உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், நான் எப்படி ஒரு யெகோவாவின் சாட்சியாகலாம் என்பதை தெரிவிக்க முடியுமா? எனக்கு இருக்கிற ஆசையெல்லாம், எப்படியாவது பெல்கிரேடில் முழுக்காட்டப்பட வேண்டும் என்பதுதான். அது முடியும் என்றால் எப்போது வரவேண்டும் என்பதையும், முழுக்காட்டப்படுவதற்கு வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்பதையும் தெரிவிக்கவும். ஆனால் அது முடியாதென்றால் எங்கே முழுக்காட்டப்பட முடியும் என்பதையும் அதற்காக யாரை அணுக வேண்டும் என்பதையும் தெரிவிக்கவும்.
“அடுத்ததாக, எப்படி மிஷனரியாகலாம் என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதுவும் முழுக்காட்டுதல் எடுத்தவுடனேயே அதற்கான பயிற்சியை ஆரம்பிக்கலாமா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதற்காக சில வருடங்கள் ஊழியம் செய்ய வேண்டுமா? . . .
“தயவுசெய்து என்னுடைய கடிதத்தை சாதாரணமாக எடைபோட வேண்டாம். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களிடம் தெரிவிப்பதற்கு சிறந்த வழி மிஷனரி ஊழியம் செய்வதே என்று நினைக்கிறேன்.”
ஒவ்வொரு காவற்கோபுர பத்திரிகையிலும் பக்கம் 2-ல், அதன் நோக்கம் என்ன என்று இவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறது: “சக மனிதரை ஒடுக்குகிறவர்களைக் கடவுளுடைய ராஜ்யம் வெகு சீக்கிரத்தில் அழித்து, இந்தப் பூமியை பரதீஸாக மாற்றிடும் என்ற நற்செய்தியின் மூலம் எல்லா மக்களுக்கும் ஆறுதலளிக்கிறது.” உங்களுக்கு இப்பத்திரிகையின் ஒரு பிரதி தேவைப்பட்டாலோ அல்லது உங்கள் வீட்டிற்கே ஒருவர் வந்து பைபிளைப் பற்றி இலவசமாய் கலந்துரையாட நீங்கள் விரும்பினாலோ தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35 Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கோ பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பொருத்தமான விலாசத்திற்கோ எழுதுங்கள்.