Branch Specific
உங்களுக்குத் தெரியுமா?
(கொடுக்கப்பட்ட பைபிள் இடக்குறிப்புகளில் இந்த வினாடிவினாவுக்கான விடைகளைக் காணலாம்; பக்கம் 27-ல் விடைகள் அச்சிடப்பட்டுள்ளன. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட, “வேதாகமத்தின்பேரில் உட்பார்வை” [ஆங்கிலம்] என்ற பிரசுரத்தை ஆராய்ந்து பாருங்கள்.)
1. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வடக்கு எல்லையும் பலஸ்தீனாவின் அருகிலுள்ள மிக உயர்ந்த இடமுமாக விளங்குவது எது? (யோசுவா 12:1)
2. யெகோவாவுடைய எந்த குணம் மனிதரிலும் இருப்பது விரும்பத்தக்கது. ஆனால் அது பலவீனத்திற்கு அடையாளம் அல்ல. (சங்கீதம் 18:35, NW)
3. யெகோவாவின் தூதன் ஒரே இரவில் எத்தனை அசீரிய படைவீரர்களைச் சங்கரித்தார்? (2 இராஜாக்கள் 19:35)
4. இயேசுவின் பாதங்களில் விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை ஊற்றி அதை தன்னுடைய தலை மயிரால் துடைத்தது யார்? (யோவான் 12:3)
5. ஆண் குழந்தைகளைக் கொல்லும்படியான பார்வோனின் கட்டளையை அசட்டை செய்து பின்னால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்ற அந்த எபிரெய மருத்துவச்சிகளின் பெயர் என்ன? (யாத்திராகமம் 1:15-21)
6. தன்னுடைய 41 வருட ஆட்சியின்போது ஒருசில சமயங்களில் தவறாக நடந்துகொண்டபோதிலும், உண்மையுள்ள ராஜாக்களில் ஒருவராக கருதப்பட்ட யூதாவின் ராஜா யார்? (1 இராஜாக்கள் 15:14, 18)
7. திரும்ப நிலைநாட்டப்படுவதைக் குறித்த ஒரு தீர்க்கதரிசனத்தில் எந்த மிருகம் “மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்” என்பதாக சொல்லப்பட்டது? (ஏசாயா 65:25)
8. சோதோமின் வாலிபர் முதல் கிழவர்வரை எல்லா மனிதரும் ஏன் லோத்தின் வீட்டைச் சூழ்ந்தனர்? (ஆதியாகமம் 19:4, 5)
9. சாமுவேலின் ஜெபத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பெலிஸ்தர் முறிந்தோடும்படி யெகோவா எதை உபயோகித்து அவர்களை கலங்கடித்தார்? (1 சாமுவேல் 7:9, 10)
10. இஸ்ரவேலரை போக அனுமதிப்பதற்கு பார்வோனிடம் மோசே கூறிய காரணம் என்ன? (யாத்திராகமம் 5:1)
11. எந்த கனிதரும் மரத்தின் கிளை சமாதானத்திற்கு அடையாளமாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது? (ஏசாயா 17:6-ஐக் காண்க.)
12. யோவான் எழுதிய ஐந்து பைபிள் புத்தகங்களில் எந்த புத்தகம் முதலில் எழுதப்பட்டது?
13. “தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்” என நீதிமொழிகளில் சொல்லப்படுவது யார்? (நீதிமொழிகள் 12:4)
14. தனக்கு தகுதியிருந்தும் 80 வயதாகிவிட்டதன் காரணமாக, தாவீது ராஜாவால் பலனளிக்கப்படுவதை மறுத்தது யார்? (2 சாமுவேல் 19:31-36)
15. அடையாள எண்ணிக்கையில் எவ்வளவு தூதர்களை சாத்தான் தவறாக வழிநடத்தியிருக்கிறான்? (வெளிப்படுத்துதல் 12:4)
வினாடி வினாவுக்கான விடைகள்
1. எர்மோன் மலை
2. மனத்தாழ்மை
3. 1,85,000
4. மார்த்தாள், லாசருவின் சகோதரியாகிய மரியாள்
5. சிப்பிராள், பூவாள்
6. ஆசா
7. சிங்கம்
8. விருந்தினராக வந்த தேவதூதர்களின் கற்பை சூறையாடுவதற்காக
9. இடிமுழக்கத்தை
10. வனாந்தரத்திலே யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடுவதற்கு
11. ஒலிவ மரம்
12. வெளிப்படுத்துதல்
13. “குணசாலியான ஸ்திரீ”
14. ரோகிலிம் ஊரைச் சேர்ந்த கீலேயாத்தியனாகிய பர்சிலா
15. மூன்றில் ஒரு பங்கு