அறிமுகம்
இந்தப் பூமி ஒரு பெரிய அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள நாம் ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்தப் பூமியில் இருக்கிற குடிநீர், கடல்கள், காடுகள், ஏன் காற்றுக்கூட பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மோசமாகிக்கொண்டு போகிறது. இப்படியே போனால் நம் பூமிக்கு என்ன ஆகும்? கவலைப்படாதீர்கள்! ஒன்றும் ஆகாது. அதை எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லலாம்? அதற்கு சில காரணங்களைப் பார்க்கலாம்.