உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ypq கேள்வி 3 பக். 9-11
  • என் அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசலாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என் அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசலாம்?
  • இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்
  • இதே தகவல்
  • அன்புக்கு ஏங்கி
    விழித்தெழு!—2006
  • சோகத்தில் வாடிய சகோதரிகள் ‘இஸ்ரவேல் வீட்டைக் கட்டியவர்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • எங்களுடைய செழுமையான ஆவிக்குரிய சொத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • அரியதொரு கிறிஸ்தவ சுதந்தரிப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும்
ypq கேள்வி 3 பக். 9-11
அப்பா பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு இளைஞன் வேறு பக்கமாகத் திரும்பிக்கொள்கிறான்

கேள்வி 3

என் அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசலாம்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

உங்களுடைய அப்பா அம்மாவோடு ஒத்துப்போகக் கற்றுக்கொண்டால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: அன்று புதன்கிழமை ராத்திரி. 17 வயதுள்ள ஜெஃப், தன்னுடைய வேலையை முடித்துவிட்டான். இப்போது கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறான். டிவியை ஆன் செய்துவிட்டு தனக்குப் பிடித்த சேரில் சாய்கிறான்.

அப்போது, அவனுடைய அப்பா கதவுக்குப் பக்கத்தில் வருகிறார். அவனைப் பார்த்ததும், அவருக்குக் கோபம் வருகிறது.

“ஜெஃப்ரி! ஹோம்வர்க் செய்ய தம்பிக்கு உதவி செய்யாம டிவி பார்த்துகிட்டு ஏன் நேரத்த வீணாக்குற? சொல்றதை நீ கேட்குறதே கிடையாது!”

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டார்” என்று அப்பாவுடைய காதில் விழும்படி ஜெஃப்ரி முணுமுணுக்கிறான்.

கொஞ்சம் முன்னால் சாய்ந்தபடி, “நீ இப்போ என்ன சொன்ன?” என்று அவனுடைய அப்பா கேட்கிறார்.

பெருமூச்சு விட்டபடி, “ஒண்ணும் இல்ல அப்பா” என்று ஜெஃப் சொல்கிறான்.

இப்போது அவனுடைய அப்பாவுக்குப் பயங்கர கோபம் வருகிறது. “இப்படி பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காத!” என்று அவர் கடுமையாகச் சொல்கிறார்.

ஜெஃப்ரியுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், இப்படிப் பேசுவதை எப்படித் தவிர்த்திருப்பீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

உங்களுடைய அப்பா அம்மாவிடம் பேசுவது கார் ஓட்டுவதுபோல்தான்! ரோட்டில் ஏதாவது தடை வந்தால், நீங்கள் வேறு வழியாகப் போகலாம்.

உதாரணத்துக்கு:

“என்னோட அப்பாகிட்ட பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று லியா சொல்கிறாள். “சிலசமயம், அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசுனதுக்கு அப்புறம், ‘நீ இவ்வளவு நேரம் என்கிட்டயா பேசிக்கிட்டு இருந்த’னு கேட்பார்” என்று அவள் சொல்கிறாள்.

லியாவுக்கு குறைந்தபட்சம் மூன்று வழிகள் இருக்கின்றன.

  1. அப்பாவிடம் கத்தலாம்.

    “எவ்வளவு முக்கியமான விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன், கவனிங்க!” என்று கத்தலாம்.

  2. பேசுவதை நிறுத்திவிடலாம்.

    தன்னுடைய பிரச்சினையைப் பற்றி பேசுவதை லியா நிறுத்திவிடலாம்.

  3. சரியான நேரத்துக்காகக் காத்திருந்து பின்பு அதைப் பற்றி பேசலாம்.

    லியா அவளுடைய அப்பாவிடம் பிறகு பேசலாம் அல்லது அவளுடைய பிரச்சினையைப் பற்றி அப்பாவுக்குக் கடிதம் எழுதலாம்.

இதில் எதைச் செய்தால் நன்றாக இருக்குமென்று லியாவுக்குச் சொல்வீர்கள்?

இதைக் கவனியுங்கள்: லியாவுடைய அப்பா எதைப் பற்றியோ யோசித்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான், அவளுடைய பிரச்சினை அவருக்குப் புரியவில்லை. அவள் முதல் வழியைத் தேர்ந்தெடுத்தால், ஏன் கத்துகிறாள் என்று அவருக்குப் புரியாமல் போகலாம். அவள் பேசுவதையும் அவர் கேட்காமல் போய்விடலாம். அதோடு, அவருக்கு மரியாதை காட்டுவது போல அது இருக்காது. (எபேசியர் 6:2) இந்த வழி, லியாவுக்கும் சரி, அவளுடைய அப்பாவுக்கும் சரி, பிரயோஜனமாக இருக்காது.

ரோட்டில் காருக்கு முன்னால் ஒரு தடை இருக்கிறது

ரோட்டில் ஏதாவது தடை வந்தால் பயணத்தை நிறுத்தாமல் வேறு வழியாகப் போவதுபோல், உங்களுடைய அப்பா அம்மாவிடம் நல்ல விதமாகப் பேச வேறு வழியைக் கண்டுபிடிக்கலாம்

இரண்டாவது வழி சுலபமாக இருந்தாலும், அது ஞானமான வழி என்று சொல்ல முடியாது. ஏன்? பிரச்சினையைச் சமாளிக்க, லியா அவளுடைய அப்பாவிடம் பேச வேண்டும். அவர் லியாவுக்கு உதவ வேண்டுமென்றால், அவளுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அமைதியாக இருந்தால் இந்த இரண்டையுமே சாதிக்க முடியாது.

மூன்றாவது வழியில், அப்பா அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக அவரிடம் பேச அவள் முயற்சி செய்யாமல் இருக்கவில்லை. அதைப் பற்றி, இன்னொரு சமயத்தில் பேச முயற்சி செய்கிறாள். ஒருவேளை, அப்பாவுக்குக் கடிதம் எழுத வேண்டுமென்று அவள் முடிவு செய்தால், அவள் நிம்மதியாக உணர்வாள்.

கடிதம் எழுதும்போது, சொல்ல நினைப்பதை அவளால் சரியாகச் சொல்ல முடியும். அதை வாசிக்கும்போது, அவள் என்ன சொல்ல நினைக்கிறாள், அவளுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை அவளுடைய அப்பாவால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த வழி, லியாவுக்கும் அவளுடைய அப்பாவுக்கும் பிரயோஜனமாக இருக்கும். அப்பாவிடம் நேரில் பேசினாலும் சரி, கடிதம் மூலம் பேசினாலும் சரி, “சமாதானத்தை உண்டாக்குகிற காரியங்களை நாடிச்செல்” என்ற பைபிள் ஆலோசனையைப் பின்பற்றுவதாக இருக்கும்.—ரோமர் 14:19.

லியாவுக்கு வேறு என்ன வழிகள் இருக்கின்றன?

வேறு ஏதாவது வழி இருந்தால் அதைப் பற்றி இங்கே எழுதுங்கள். அந்த வழியைப் பின்பற்றினால் என்ன நடக்கும் என்றும் எழுதுங்கள்.

பைபிள் தரும் ஞானமான ஆலோசனைகள்

“உன் தகப்பனுக்கும் உன் தாய்க்கும் மதிப்புக் கொடு.”—எபேசியர் 6:2.

‘உங்கள் பேச்சு எப்போதும் இனிமையாக இருக்க வேண்டும்.’—கொலோசெயர் 4:6.

“கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும்.” —யாக்கோபு 1:19.

தவறாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் பேசாதீர்கள்!

இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்: நீங்கள் சொன்னதை எப்போதுமே உங்கள் அப்பா அம்மா சரியாகப் புரிந்துகொள்வார்கள் என்று சொல்ல முடியாது!

உதாரணத்துக்கு:

‘நீ ஏன் ஒரு மாதிரியா இருக்க’ என்று உங்களுடைய அப்பா அம்மா கேட்கிறார்கள். “அதை பத்தி பேச எனக்கு இஷ்டம் இல்ல” என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆனால், நீங்கள் சொன்னதை உங்கள் அப்பா அம்மா எப்படிப் புரிந்துகொள்வார்கள் தெரியுமா? “உங்க மேல எனக்கு அவ்வளவா நம்பிக்கை இல்ல. அந்த பிரச்சினைய பத்தி உங்ககிட்ட பேச மாட்டேன், என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசிக்கிறேன்.”

உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் அப்பா அம்மா உதவி செய்வதாகச் சொல்கிறார்கள். அப்போது, “பரவாயில்ல, அதை நானே பார்த்துக்கிறேன்” என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

  • நீங்கள் சொன்னதை உங்கள் அப்பா அம்மா எப்படிப் புரிந்துகொள்வார்கள்?

  • நீங்கள் வேறு எப்படிப் பேசியிருக்கலாம்?

என்ன செய்யலாம்?

  • அடுத்த தடவை, என்னுடைய அப்பா அம்மாவிடம் பேச விரும்பவில்லை என்றால் நான் என்ன செய்வேன்?

  • நான் பேச விரும்பாத விஷயத்தைப் பற்றி பேசச் சொல்லி அப்பா அம்மா கட்டாயப்படுத்தினால், நான் என்ன செய்வேன்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்