உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 103 பக். 238-பக். 239 பாரா. 2
  • “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • கஷ்டமான வாழ்க்கை தொடங்குகிறது
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • பூமியைப் படைத்த நோக்கம் விரைவில் நிறைவேறும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 103 பக். 238-பக். 239 பாரா. 2
பெரியவர்களும் பிள்ளைகளும் பூஞ்சோலையில் சந்தோஷமாக இருக்கிறார்கள்

பாடம் 103

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

‘இனி அழுகை, வலி, வியாதி, மரணம் எதுவுமே இருக்காது. அவர்களுடைய கண்ணீரையெல்லாம் நான் துடைத்துவிடுவேன். முன்பு நடந்த கெட்ட விஷயங்கள் எல்லாம் அவர்களுக்கு மறந்துவிடும்’ என்று யெகோவா சத்தியம் செய்தார்.

ஆதாம்-ஏவாளுக்கு ஏதேன் தோட்டத்தை ஒரு வீடாக யெகோவா  கொடுத்தார். அதில் அவர்கள் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் தங்கள் பரலோக அப்பாவை வணங்கி, இந்தப் பூமி முழுவதையும் தங்களுடைய பிள்ளைகளால் நிரப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. இருந்தாலும், அவருடைய நோக்கம் மாறவில்லை. அவர் கொடுத்த வாக்குகள் அப்படியே நிறைவேறும் என்று இந்தப் புத்தகத்தில் படித்தோம். அவர் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்தபடியே, அவருடைய அரசாங்கத்தின் மூலம் இந்தப் பூமிக்கு அருமையான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.

பெரியவர்களும் பிள்ளைகளும் காட்டு மிருகங்களும் பூஞ்சோலையில் ஒன்றாக இருக்கிறார்கள்

சீக்கிரத்தில் சாத்தானும், அவனுடைய பேய்களும் கெட்ட ஆட்களும் அழிந்துவிடுவார்கள். அப்போது உயிரோடு இருக்கிற எல்லாரும் யெகோவாவை வணங்குவார்கள். வியாதியோ மரணமோ வராது. தினமும் காலையில் புதுத் தெம்போடு எழுந்திருப்போம். ஒவ்வொரு நாளும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பூமி பூஞ்சோலையாக மாறும். எல்லாருக்கும் நல்ல உணவும், பாதுகாப்பான வீடுகளும் கிடைக்கும். யாருமே கொடூரமாக இருக்க மாட்டார்கள், அடிதடியில் இறங்க மாட்டார்கள். எல்லாரும் அன்பாக இருப்பார்கள். காட்டு மிருகங்கள் நம்மைப் பார்த்து பயப்படாது, நாமும் அவற்றைப் பார்த்து பயப்பட மாட்டோம்.

இறந்தவர்களை யெகோவா உயிரோடு எழுப்ப ஆரம்பிக்கும்போது நம் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது! அந்தக் காலத்தில் வாழ்ந்த ஆபேல், நோவா, ஆபிரகாம், சாராள், மோசே, ரூத், எஸ்தர், தாவீது போன்றவர்களை நாம் வரவேற்போம். இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக ஆக்குவதற்கு அவர்களும் நம்மோடு சேர்ந்து வேலை செய்வார்கள். நாம் ஆர்வத்தோடு செய்வதற்கு எப்போதுமே நிறைய வேலைகள் இருக்கும்.

நீயும் அங்கே இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். நீ நினைத்தே பார்க்காத வழிகளில் அவரைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வாய். அதனால், நாம் யெகோவாவிடம் ஒவ்வொரு நாளும் நெருங்கிப் போகலாம், இன்றும் என்றென்றும்!

“எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்.”—வெளிப்படுத்துதல் 4:11

கேள்விகள்: கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யும்போது இந்தப் பூமியில் என்னென்ன மாற்றங்கள் வரும்? நீ இந்தப் புத்தகத்தில் படித்த யாரைப் பூஞ்சோலை பூமியில் பார்க்க ஆசைப்படுகிறாய்?

வெளிப்படுத்துதல் 21:3, 4; யோபு 33:25; நீதிமொழிகள் 2:21, 22; ஏசாயா 11:2-10; 33:24; 65:21; மத்தேயு 6:9, 10; யோவான் 5:28, 29; 17:3

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்