உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w87 7/1 பக். 27
  • ஒன்பதே நாட்களில்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒன்பதே நாட்களில்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • இதே தகவல்
  • சபை புத்தகப் படிப்பு
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • ராஜ்ய மன்ற கட்டுமானம்—பரிசுத்த சேவையின் ஒரு முக்கிய அம்சம்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • வணக்கத்துக்காக ஒன்றுகூடி வரும் இடங்கள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • சமுதாயத்திற்கு பயனுள்ளது
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
w87 7/1 பக். 27

ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை

ஒன்பதே நாட்களில்!

“ஆச்சரியம்! இந்த வார்த்தை கனடாவில் வான்கூவரிலுள்ள ஒரு தீவில், ஆகஸ்ட் 14, 1985 அன்று வெளிவந்த செய்தித்தாளின் தலையங்கமாக இருந்தது. 25,000 சதுர அடி (2,300 சதுர மீட்டர்) மாநாட்டு மன்றத்தை ஒன்பதே நாட்களில் கட்டி முடித்ததை அந்தச் செய்திக் குறிப்பு விவரித்தது.

கடந்த பத்து ஆண்டுகளாக, யெகோவாவின் சாட்சிகள் உள்ளூர் ராஜ்ய மன்றங்களை வெகு சீக்கிரத்தில் கட்டும் கலையை விருத்தி செய்திருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளின் வான்கூவர் தீவின் மாநாட்டு மன்றம் இப்போது கனடா நாட்டில் சபை தொகுதிகளுக்கான வட்டார மாநாடுகளை நடத்துவதற்குக் கட்டப்பட்ட இரண்டாவது கட்டடமாக இருந்தது. புத்தம் புதிய இந்தக் கட்டடம், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள காஸிடியில், எட்டு ஏக்கர் (3 ஹெக்டேர்) நிலப்பரப்பில் நிற்கிறது. உயர்ந்த இலையுதிரா மரங்கள் அழகான பின்திரைப் போன்றிருக்கிறது, கட்டடத்தின் பின்புறம் ஒரு அழகான ஓடை ஓடுகிறது. 900 பேர் உட்காரும் வசதிகொண்ட மன்றம், 250 பேர் உட்கார்ந்து சாப்பிடும் உணவு அருந்தும் பகுதி, ஒரு சிற்றுண்டிச்சாலை, முழுக்காட்டுதல் கொடுப்பதற்கான சிறிய குளம், உள்ளூர் சபைகள் உபயோகிக்கும் 200 பேர் உட்காரும் ராஜ்ய மன்றம் ஆகியவை அடங்கியிருக்கின்றன. கட்டட வேலையில் பங்கு கொண்டவர்களுங்கூட அது ஒன்பதே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டதை நம்ப முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

என்றபோதிலும், ஒன்பது நாள் கட்டட வேலைக்கு முன்னதாக ஏராளமான தயாரிப்பு வேலைகள் செய்யப்பட்டன. கொட்டும் மழையிலே அந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த கட்டடம் சேதமாகாமல் முழுவதுமாகப் பிரிக்கப்பட்டது. வாலண்டியர்களாக வேலை செய்தவர்கள் அக்டோபர் மாத குளிரில் செங்கேதுரு மரங்களை—தடியான செவ்வக மரப் பலகையை கூரை வேயுவதற்காகச் சேமிக்க வேண்டியதாயிருந்தது. குழாய் சம்பந்தப்பட்ட வேலைகள், மின்சார இணைப்பு போன்ற காரியங்கள் அமைக்கப்பட வேண்டியதாயிருந்தது. கட்டடத்திற்குரிய நிலபரப்பு ஆயத்தப்படுத்தப்பட்டு 25,000 சதுர அடி கான்கிரீட்டும் போடப்பட வேண்டியதாயிருந்தது.

கடைசியில் எல்லாம் தயாராக இருந்தது. ஆகஸ்ட் 3, சனிக்கிழமையன்று பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட தின வாக்கியத்தை வாசித்து சிந்தித்தப் பிறகு, காலை 8 மணிக்கு வாலண்டியர்கள் தங்கள் கைகளில் சுத்தியல்கள் வைத்துக்கொண்டு கான்கிரீட் பலகைகள் மத்தியில் நின்றார்கள். “சகோதரர்களே, சுத்தியலால் ஆணிகளை அடிக்கத் தொடங்குங்கள்,” என்று ஒலி பெருக்கிகளில் அழைப்பு வந்தது. ஆணிகள் மீது ஏராளமான சுத்தியல்களின் அடிகள் விழுந்தன, கிட்டத்தட்ட 4,500 வாலண்டியர்கள் வேலை செய்தனர், அநேக வாலண்டியர்களும் அவர்களுடைய குடும்பங்களும் ஐக்கிய மாகாணங்களிலிருந்தும், மற்றும் சிலர் வெகு தொலைவில் நியு ஃபவுன்ட்லாண்டிலிருந்தும் நார்வே மற்றும் இங்கிலாந்திலிருந்தும் வந்தனர். தயவு காட்டின அயலகத்தார் தங்களுடைய வயல் வெளியைத் தங்கும் வசதிகளைக்கொண்ட வாகனங்களையும் கார்களையும் நிறுத்துவதற்கு வசதி செய்துகொடுத்தனர். மனையைச் சுற்றி 35 ஏக்கர்களுக்கு (14 ஹெக்டேர்) கூடாரங்கள், தங்கும் வசதிகளைக் கொண்ட வாகனங்கள், டிரக்குகள் மற்றும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

பார்வையாளர்கள் அதிகமாய்க் கவர்ந்திழுக்கப்பட்டனர். ஒரு கான்ட்ராக்டர் தன்னுடைய வேலையாட்கள் வேலையைக் கவனிக்கும்படியும் அங்கு நிலவிய சூழ்நிலையை அனுபவிக்கும்படியும் அவர்களை அழைத்துக்கொண்டு வந்தார். தயவாக நடந்துகொண்ட அயலகத்தார் காய்கறிகளை உணவு தயாரிக்கும் இலாக்காவிற்குக் கொடுத்தனர், அது ஒழுங்காக வேலையாட்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்தது. மற்ற அயலகத்தார் அங்கு தேவையாக இருந்த வேலைகளில் கலந்து கொண்டனர். மனையை வந்துபார்த்த ஒருவர் சொல்லுகிறார்: “கடவுள் உங்களுடைய ஜனங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை நான் நிச்சயமாய்க் காண்கிறேன்.” இவர் இப்போது யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து, நல்ல முன்னேற்றத்தைக் காண்பித்து வருகிறார்.

லேடிஸ்மித் செமேனஸ் க்ராணிக்கல் என்ற ஒரு செய்தித்தாள் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டது: “நீங்கள் மத பற்றுமாறாதத் தன்மை உடையவர்களாயிருந்தாலுஞ்சரி இல்லாவிட்டாலுஞ்சரி, காஸிடியில் கடந்த ஒன்றரை வாரங்களாக 25,000 சதுர அடி மாநாடு மன்றத்தைக் கட்டும் வேலையில் விடாமல் கலந்துகொண்ட 4,500 யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே அப்பேர்ப்பட்டவர்கள் என்று போற்றப்பட தகுதியுள்ளவர்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும், . . . இதை உற்சாக மனதுடையவர்களாயும் வாக்குவாதம், பிரிவினைகள் இல்லாமலும் மற்றும் சுய-மகிமை தேடிக்கொள்ளாமலும் செய்வதுதானே உண்மை கிறிஸ்தவத்தின் அறிகுறியாக இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 11, மாலை 6 மணியளவில் கட்டி முடிக்கப்பட்ட எழில் மிகுந்த இயற்கைக் காட்சியின் பின்னணியில் மாநாடு மன்றத்தில் முதல் கூட்டம் நடத்தப்பட்டது. (w86 6/1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்