உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 8/1 பக். 3
  • “ஒரு சமாதான கொள்ளைநோயா”?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “ஒரு சமாதான கொள்ளைநோயா”?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • இதே தகவல்
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • சமாதானம்—வாய்ப்புகள் என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • சமாதானம் அதை எப்படி அடையலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • சர்வதேச பாதுகாப்புக்கான மனிதனின் திட்டங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 8/1 பக். 3

“ஒரு சமாதான கொள்ளைநோயா”?

“ஒரு சமாதான கொள்ளைநோய்.” “ஓ, என்னே ஒரு சமாதான உலகம்.” “எங்கும் சமாதான மயம்.” கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் வாசகர்களை பிரமிக்கச் செய்திருக்கும் செய்தித்தாள் தலைப்புச் செய்திகளில் இவை இடம் பெற்றிருந்தன. உலகம் முழுவதிலும், துயரமும் அவலமுமாக இருந்த செய்திகள் நம்பிக்கையூட்டுவதாக மாறியது வியப்பூட்டுவதாக இருந்தது. என்ன நடந்துகொண்டிருந்தது?

குறிப்பிடத்தக்க வகையில், சமீபத்தில் அநேக பெரிய போர்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன அல்லது ஒரு சில மாதங்களுக்குள் தீவிரத்தில் குறைந்தன. ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலாவில் சமாதானம் ‘திடீரென தோன்றியது.’ மத்திய ஆசியாவில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானிலிருந்து தன் படைகளை விலக்கிக் கொண்டது. மத்திய அமெரிக்காவில், நிக்கராகுவா அரசாங்கத்துக்கும் புரட்சியாளர்களுக்குமிடையிலான சண்டை தணிந்துவிட்டது. தென் கிழக்கு ஆசியாவில், வியட்நாம் மக்கள் கம்ப்பூச்சியாவிலிருந்து விலகிக் கொள்ள ஒப்புக்கொண்டுவிட்டனர். ஈரானுக்கும் ஈராக்குக்குமிடையிலான கொலைவெறி யுத்தம் கடைசியாக முடிவுக்கு வந்தபோது “சமாதானக் கொள்ளைநோய்” மத்திய கிழக்கையும்கூட சென்றெட்டியது.

ஒருவேளை இன்னும் அதிக குறிப்பிடத்தக்கதாக இருந்தது வல்லரசுகளிடையிலான ஒரு புதிய சூழ்நிலையாகும். 40 ஆண்டு கால கெடுபிடிப் போருக்குப் பின்பு, சமாதானத்தை உணர்த்தும் செயல்கள், பரஸ்பர அக்கறைகளைப் பற்றிய பேச்சு வார்த்தைகள், சோவியத் யூனியனுக்கும் ஐக்கிய மாகாணங்களுக்குமிடையே சமாதானத்துக்கான உறுதியான நடவடிக்கைகள் நம்புவதற்கு அரிதாக இருந்தன. மேலுமாக பொருளியலர் பிரகாரம், ஐரோப்பா, பதிவிலுள்ள அதன் முழு சரித்திரத்திலும் போரில்லாத தொடர்ச்சியான நீண்ட காலப் பகுதியை இப்பொழுது பதிவு செய்திருக்கிறது. உண்மையாகவே சமாதானம் புதுத்தகவலாக இருக்கிறது.

அது எதை அர்த்தப்படுத்துகிறது? அரசியல்வாதிகள் “நம்முடைய காலத்துக்கு சமாதானத்தை” அறிவிக்கும் தறுவாயில் இருக்கின்றனரா? ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த வார்த்தைகள் இங்கிலாந்தின் பிரதமரான நெவில் சேம்பர்லினால் கூறப்பட்டன. சிறிதே காலத்துக்குப் பின்னர், இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமான போது அவை வேதனைத்தரும் வகையில், நேர் எதிரிடையாக நிரூபித்துவிட்டன. இறுதியாக இப்பொழுது அவை உண்மையாகப் போகின்றனவா? (w90 4/1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்