ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நற்செய்தி
தேவராஜ்ய நடவடிக்கையில் அநேக கிளர்ச்சியூட்டும் காரியங்கள் கிழக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்து வருகின்றன. 1991, ஆகஸ்ட் 16-18 சாக்ரெப்பில் நடைபெற்ற சர்வதேச மாநாடு குறிப்பிடத்தக்கதாகும். அச்சமயத்தில் 7,300 சாட்சிகள் 15 தேசங்களிலிருந்து வந்திருந்த தங்கள் சகோதரர்களை உள்ளப்பூர்வமாக வரவேற்றார்கள். மொத்தமாக, 14,684 பேர் ஆஜரானார்கள். உள்நாட்டுக் கிளர்ச்சியினால் அமைதி குலைந்த ஒரு தேசத்தில் அது அன்பு மற்றும் ஐக்கியத்தின் மகத்தான வெளிக்காட்டாக இருந்தது!
கிழக்கு ஐரோப்பாவிலுள்ள சாட்சிகள் உண்மையான சமாதானத்துக்கு ஒரே நம்பிக்கை என்பதாக அவர்கள் தெளிவாக புரிந்துகொண்டிருக்கும் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதில் சுறுசுறுப்பாயிருக்கிறார்கள். ஒரு சில பகுதிகளில் அவர்களுடைய நடுநிலைமையை காத்துக்கொள்வது அவர்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. இருப்பினும், மக்கள் அநேகமாக செவிகொடுக்கிறார்கள், சாட்சிகள் அநேக சிறந்த அனுபவங்களை அறிக்கை செய்கிறார்கள்.
ஒரு நகரத்தில், 16 வயது பெண் ஒருத்தி அந்த நகரத்தில் இருந்த ஒரே சாட்சியின் மூலமாக நற்செய்தியைக் கேட்டாள். ஒழுங்கான ஒரு பைபிள் படிப்பு துவங்கப்பட்டது, சத்தியத்துக்கான அவளுடைய போற்றுதல் வளர்ந்தது. தான் கற்றுக்கொண்ட அதிசயமான காரியங்களைக் குறித்து மற்றவர்களுக்குச் சொல்ல அதிக விருப்பமுள்ளவளாக, அவள் தன் பள்ளிதோழர்களிடம் பேச முயற்சி செய்தாள், ஆனால் எதிர்ப்பையும் பரிகாசத்தையுமே அவள் எதிர்ப்பட்டாள். விசேஷமாக ஒரு பள்ளித் தோழி அவளை எதிர்த்தாள், ஆனால் அவளுடைய பொறுமையைக் கண்டு ஆச்சரியமடைந்து அவள் மனம் கவரப்பட்டாள். ஏனென்றால் இளம் பைபிள் மாணாக்கர் எல்லா நிந்தனைகளின் மத்தியிலும் கோபமடையவில்லை. பின்னால், அதிக முழுமையான ஒரு சாட்சி இந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டது, அவள் தன்னுடைய மனநிலை தவறாக இருந்திருப்பதை உணர்ந்துகொண்டாள். பைபிள் படிப்பு ஒன்று அவளோடு ஆரம்பிக்கப்பட்டது. தங்கள் பெற்றோர், தங்கள் ஆசிரியர், மற்றும் தங்கள் பள்ளித்தோழர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் முதல் பைபிள் மாணாக்கரும் அவளுடைய புதிய தோழியும் தங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள முயற்சி செய்தனர்.
அவர்கள் கொடுத்த சாட்சியின் விளைவாக, மற்றொரு பள்ளித் தோழி சத்தியத்தை ஏற்றுக்கொண்டாள். இப்பொழுது வகுப்பில் அவர்கள் மூவர் இருந்தனர். மூவருமே மற்றவர்களுக்கு உதவி செய்வதில் விருப்பமுள்ளவர்களாயிருப்பதிலும் தங்களுக்குள் அன்பு காண்பிப்பதிலும் நல்ல முன்மாதிரிகளாக இருந்தனர்.
இப்பொழுது பள்ளி வளாகத்தின் பெஞ்சில் பைபிளை ஒன்றாகச் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தவர்கள் நான்கு பேராயிருந்தனர். அநேகருக்கு ஆச்சரியம் ஏற்படும் வகையில், அவர்களுடைய எண்ணிக்கை அதிகமானது. அவர்களுடைய நேர்த்தியான நடத்தையினால் ஆர்வமடைந்த வகுப்பிலுள்ள மற்றொரு பெண் பைபிள் படிப்பில் கலந்துகொள்ள தீர்மானித்தாள். அந்த ஐந்து பேரும் தொடர்ந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் அதையே செய்யும்படி அழைத்தார்கள். இருப்பினும், பெண்கள் தொடர்ந்து அவர்களுடைய பெற்றோரிடமிருந்து அதிகமான அழுத்தங்களை அனுபவித்துவந்தார்கள். பெற்றோர் அவர்களுடைய பிரசுரங்களை அழித்துவிடுவதன் மூலமும் அவர்களை மோசமாக நடத்துவதன் மூலமும் அவர்களுடைய பைபிள் படிப்பை பலவந்தமாக நிறுத்த கடினமாக முயற்சிசெய்தார்கள்.
ஒரே அக்கறையுள்ள நபரோடு ஆரம்பமான இந்தச் சாட்சிக்கொடுத்தலின் பலன் என்னவாக இருந்தது? பெண்களில் ஒருத்தி 1990 மாவாட்ட மாநாட்டில் முழுக்காட்டப்பட்டாள், மற்ற நால்வரும் 1991 வசந்தக்காலத்தில் நடந்த வட்டார அசெம்பிளியில் முழுக்காட்டப்பட்டார்கள். இது அதிகமான சந்தோஷத்துக்குக் காரணமாயிருந்தது! இன்று, எல்லா ஐந்து பெண்களும் ஒழுங்கான பயனியர்களாக சேவிக்கிறார்கள்! இது நடந்த அந்த நகரில், இப்பொழுது 11 பிரஸ்தாபிகள் இருக்கின்றனர், இவர்களில் 8 பேர் பயனியர் சேவையில் இருக்கின்றனர்.
யெகோவா கிழக்கு ஐரோப்பாவில் தம்முடைய சாட்சிகளை காத்தும் ஆசீர்வதித்தும் வருகிறார். உலகின் இந்தப் பகுதியில் நேர்மையான இருதயமுள்ள ஆட்களின் மத்தியில் அதிகரிப்புக்கு மிகுதியான வாய்ப்பு இருப்பது தெளிவாக இருக்கிறது.