“நான் இதைப்போல் ஒருபோதும் பார்த்ததில்லை!”
யெகோவாவின் சாட்சிகளின் நான்கு-நாளைய “தெய்வீக போதனை” மாவட்ட மாநாட்டுக்கு ஆயிரம் பிரதிநிதிகளை சிலியில் உள்ள சான்டியாகோவுக்கு அனுப்பும்படி அர்ஜன்டினாவில் உள்ள உவாட்ச்டவர் சொஸைட்டியின் கிளைக்காரியாலயத்துக்கு 1993-ல் அழைப்பு கொடுக்கப்பட்டது. அர்ஜன்டினா சாட்சிகள் ஒரு பெரும் தொகுதியாக அயல்நாட்டு மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தது இதுவே முதல் சமயம்.a பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? 8,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து குவிந்தன, அதிலிருந்து 1,039 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
போனஸ் அயர்ஸ்-லிருந்து சான்டியாகோ வரை உள்ள 1,400 கிலோமீட்டர் பயணத்தைச் செய்வதற்கு மொத்தம் 14 பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. 26 மணிநேர பயணம் கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சியால் மேம்படுத்தப்பட்டது. ஆன்டிஸ் மலைச்சரிவுகளைக் கடந்து மேற்கத்திய அரைக்கோளத்தில் 6,960 மீட்டர் உயரத்தில் உள்ள மிக உயரமான மலை உச்சிக்கு அருகே அக்கன்ககுவா என்ற இடத்தை பிரதிநிதிகள் கடந்து சென்றனர். சிலி தேசத்துக்குள் செங்குத்தாக வளைந்து வளைந்து கீழ்நோக்கிச் சென்ற பாதை விசேஷமாக நினைவில் நிற்கத்தக்கதாய் இருந்தது. ஓட்டுநர்கள் அப்படிப்பட்ட கடினமான நிலப்பகுதியில் பேருந்துகளை ஓட்டிச் சென்றபோது கைதட்டி அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
என்றபோதிலும், அதிக அழகான காட்சி மாநாட்டிலேயே காணப்பட்டது. தேசிய சண்டைகள், இனக் கலவரங்கள் நிறைந்த உலகில், 24 தேசங்களிலிருந்து வந்த 80,000 பேர்கள் அடங்கிய ஐக்கியப்பட்ட ஜனக்கூட்டத்தைக் கண்டது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது—உண்மையிலேயே ஒரு சர்வதேச சகோதரத்துவம்! மாநாட்டு அங்கத்தினர்களிடையே இருந்த ஐக்கியத்தை நேரடியாக பார்த்த சில பேருந்து ஓட்டுநர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இன்னுமதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் என்று தங்கள் ஆர்வத்தைத் தெரிவித்தனர். “நான் இதைப்போல் ஒருபோதும் பார்த்ததில்லை!” என்று அவர்களில் ஒருவர் ஆச்சரியத்துடன் கூறினார்.
[கேள்விகள்]
a 1949-லிருந்து 1982 வரை அர்ஜன்டினாவில் இருந்த அரசாங்க தடையுத்தரவுகளின் காரணமாக அப்படிப்பட்ட ஒரு ஏற்பாடு முடியாத காரியமாயிருந்தது.