நீங்கள் தவறவிடக்கூடாத ஒரு நிகழ்ச்சி
“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” நம் பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்து வருகிறது. (யாக்கோபு 1:17) வீழ்ந்துவிட்ட மனிதகுலத்துக்கு கடவுள் அளித்திருக்கிற மிகப் பெரிய பரிசானது, தம் ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைவதற்கான ஏற்பாடாகும். நம் மீட்பராக இயேசுவின் மரணம், ஒரு பரதீஸான பூமியில் நித்திய ஜீவனைக் கூடிய காரியமாக்குகிறது. லூக்கா 22:19-ல், அவருடைய மரணத்தை நினைவுகூரும்படி நாம் கட்டளையிடப்படுகிறோம்.
இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் தங்களோடு சேர்ந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள், உங்களைக் கனிவுடன் வரவேற்கிறார்கள். இந்த வருடாந்தர நிகழ்ச்சி பைபிளின் சந்திர நாட்காட்டியில், நிசான் 14-க்கு ஒத்திருக்கிற தேதியாகிய ஏப்ரல் 2, 1996, செவ்வாய்க்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நடைபெறும். நீங்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காக இத்தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஊரிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகள், கூட்டம் நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் திட்டவட்டமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும்.