உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 6/1 பக். 3-4
  • பரிகாசக்காரர் ஜாக்கிரதை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பரிகாசக்காரர் ஜாக்கிரதை!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எல்லா காரியங்களும் இன்னும் அப்படியேவா இருக்கின்றன?
  • யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாது வைத்துவாருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ‘யெகோவாவின் மகா நாள் சமீபமாயிருக்கிறது’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பொறுமையோடு காத்திருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்வதன் அர்த்தம் என்ன?
    விழித்தெழு!—2008
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 6/1 பக். 3-4

பரிகாசக்காரர் ஜாக்கிரதை!

இன்று, எதிர்காலத்தைக் குறித்து முன்கூட்டியே சொல்வது மிகுதியாய் பெருகியுள்ளது, வருங்காலத்தைப் பற்றிய ஆராய்ச்சி அதிவிரைவாக வளர்ந்துகொண்டே வரும் வியாபாரமாக ஆகிவருகிறது. “ஆண்டு இரண்டாயிரம் நெருங்கி வருகையில், ஏதோவொரு விசித்திரமான காரியம் நடக்கிறது, இருப்பினும் அது முழுவதும் எதிர்பாராத ஒன்றல்ல. உலகெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இயற்கைக்கு மாறான, எதிர்காலத்தைக் குறித்து திகிலடையச் செய்யும் கற்பனைகளையே பெரும்பாலும் அனுபவித்து வருகின்றனர்” என்று லண்டனின் த டெய்லி டெலிகிராஃப் குறிப்பிடுகிறது. இதற்கு முன்பு எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழாமல் போனதுதானே எதிர்காலத்தைக் குறித்து இத்தனை அதிகமான ஆவலுக்கு காரணமாய் உள்ளது; இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கும் அநேகருக்கு வெறுமனே திரும்பவும் நிகழும் சம்பவங்களாக இருக்கின்றன.

குதிரை வண்டிகளின் போக்குவரத்து 19-ஆம் நூற்றாண்டில் அதிகரித்தபோது, கடைசியில் ஐரோப்பிய நகரங்கள் குதிரை சாணத்தால் மூச்சுத் திணறும் என்று ஒரு நபர் முன்னறிவித்தார். உண்மையில் அவருடைய முன்னறிவிப்பு தவறாகிப்போனது பின்னால் தெரிய வந்தது. இவ்வாறு, முன்னறிவிப்புகள் அடிக்கடி தவறிப்போவதை வலியுறுத்திக் கூறுகையில், “எதிர்காலம் வெறும் குதிரை சாண சுமையே” என்று லண்டனின் த டைம்ஸ் குறிப்பிட்டது.

வரவிருக்கும் ஆபத்தைக் கண்டுணருபவர்களைப் பார்த்து மற்றவர்கள் பரிகாசம் செய்கின்றனர். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களின் பல்கலைக்கழக வணிக பேராசிரியர் ஒருவர், சுற்றுச்சூழல் சீரழிவதைக் குறித்து எச்சரிப்போருக்கு சவால் விட்டு, அந்தப் போக்கு மோசமடையுமா என்பதன் பேரில் பந்தயம் கட்டினார். நியூ சைன்ட்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறபடி, “நம்முடைய வாழ்க்கைத் தரம் முன்னேறி வருகிறது, அது அவ்வாறே தொடர்ந்து நிலையாய் இருக்கும்” என்று அவர் உரிமை பாராட்டினார்.

அவ்விதமான உரிமைபாராட்டல்கள், அதற்கு எதிரான உரிமைபாராட்டல்கள் போன்றவற்றால் ஏற்படும் குழப்பத்தின் மத்தியில், எல்லா காரியங்களும் அடிப்படையில் மாற்றமடையாமலே இருக்கும் என்று அநேகர் நம்புகின்றனர். கடவுள் மனித விவகாரங்களில் குறுக்கிடுவதைப் பற்றிய எந்தவொரு எண்ணத்தையும் அவர்கள் பரிகாசம் செய்கையில், பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த பரிகாசக்காரரைப் போன்ற மனநிலையை அவர்கள் காண்பிக்கின்றனர்.

எல்லா காரியங்களும் இன்னும் அப்படியேவா இருக்கின்றன?

சுமார் பொ.ச. 64-ல் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பேதுரு ஏவுதலால் எழுதிய இரண்டாவது கடிதம் இவ்வாறு எச்சரித்தது: ‘கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடப்பர்.’—2 பேதுரு 3:3.

பரிகாசம் செய்பவர்கள் பரிகாசம் செய்வதற்கான நோக்கம் கேலிக்குரியதாக தோன்றும்படி செய்வதற்கே. பரிகாசத்திற்கு ஆளாகிவிடும் நபர் சுயநலமான கண்ணிக்குள் விழுந்துகொண்டிருக்கலாம், ஏனெனில் பரிகாசம் செய்பவர் தனக்கு செவிகொடுத்துக் கேட்போர் தன்னுடைய நோக்குநிலையை ஏற்றுக்கொள்ளும்படி பெரும்பாலும் விரும்புகிறார். பேதுரு எச்சரித்த பரிகாசக்காரரில் சிலர் ஒருவேளை இப்படிப்பட்டவர்களாய் இருந்தார்கள்: ‘தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்தார்கள்.’ தன் வாசகரை விழிப்பூட்டுகையில், அந்த அப்போஸ்தலன் அழுத்தம் திருத்தமான சொல்லமைப்பை பயன்படுத்தினார். அவர் ‘பரிகாசக்காரர் தங்கள் பரிகாசத்தோடு’ வருவதைக் குறித்து எச்சரித்தார்.

அந்த முதல் நூற்றாண்டு பரிகாசக்காரர் கிறிஸ்துவின் “வாக்குறுதியளிக்கப்பட்ட வந்திருத்தலின்” உண்மைத்தன்மையைக் குறித்து கேள்வி கேட்டு, “அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே” என்று சொல்லுவார்கள். (2 பேதுரு 3:4) அது அவர்களுக்கு அவ்வாறு தோன்றியது. இருப்பினும், பொ.ச. 33-ஆம் ஆண்டில் எருசலேமுக்கு வரப்போகும் அழிவை இயேசு முன்னறிவித்திருந்தார். “உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.” பரிகாசம் செய்தவர்கள் அந்த எச்சரிப்பை எவ்வளவு தவறாய் புரிந்துகொண்டார்கள்! பொ.ச. 70-ல் ரோம சேனைகள் எருசலேமை சூழ்ந்துகொண்டு அந்தப் பட்டணத்தை அழித்தன; அதில் குடியிருந்தோர் அநேகர் உயிர் இழந்தனர். பட்டணத்தில் குடியிருந்த பெரும்பாலானோர் இந்தப் பேரழிவை எதிர்ப்பட ஏன் தயாராயில்லை? ஏனெனில் கடவுள் தம் குமாரனாகிய இயேசுவின் மூலம் அவர்களை கண்காணித்திருந்தார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள தவறினர்.—லூக்கா 19:43, 44.

சர்வ வல்லமையுள்ள கடவுள் எதிர்காலத்தில் குறுக்கிடுவார் என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு குறிப்பிடுகிறார். “கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்” என்று பேதுரு எச்சரிக்கிறார். (2 பேதுரு 3:10) அந்தச் சமயத்தில் கடவுள் பூகோளம் முழுவதிலுமுள்ள தேவபக்தியற்றவர்களை நீக்கி, நீதிமான்கள் என நியாயந்தீர்க்கப்படுகிறவர்களை விடுவிப்பார். இந்தப் பத்திரிகை அடிக்கடி விளக்கியுள்ளபடி, கிறிஸ்து இயேசுவின் “வந்திருத்தல்” 1914-ல் ஆரம்பமானது. ஆனால் அவர் துன்மார்க்கத்தை நீக்குவதற்காக கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுபவராக நடவடிக்கை எடுக்கும் காலம் எதிர்காலத்தில் வரவிருக்கிறது. இதன் காரணமாக, பரிகாசக்காரர் ஜாக்கிரதை என்று அப்போஸ்தலன் கொடுத்த எச்சரிக்கை இப்போது அதிக அவசரத்தன்மையோடு பொருந்துகிறது.

மனித விவகாரங்களில் கடவுள் குறுக்கிடுவதற்காக நீங்கள் ஏற்கெனவே நீண்டகாலம் காத்திருந்திருப்பீர்கள். பரிகாசக்காரரின் வலையில் விழுந்துவிடாமல் தொடர்ந்து பொறுமையோடு காத்திருப்பதற்கு எது உங்களுக்கு உதவி செய்யும்? தயவுசெய்து தொடர்ந்து வாசியுங்கள்.

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

“உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்.” அது கேலிக்குரிய எச்சரிக்கையாய் இருக்கவில்லை. ரோம சேனைகள் எருசலேமை அழித்தன, அநேகர் உயிரிழந்தனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்